ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

நேயர் கடிதம்

நேயர் கடிதம்


விகடன் பொக்கிஷம்
நேயர் கடிதம்
நேயர் கடிதம்
 
நேயர் கடிதம்
நேயர் கடிதம்
நேயர் கடிதம்

விகடரே, 30-7-61 வார 'நேயர் கடிதம்' மகா போர்!

- எம்.பழனிவேல், வாணியம்பாடி

நேயர் கடிதம்தானே! எங்கள் பதில் இல்லையே?

காலத்தின் சக்தி; அதுவே தேச பக்தி; இதுவே விகடனின் யுக்தி; இதற்காக பதினைந்து பத்தி!

- ப.அ.சரீப், ஜம்மு

கடிதம் எழுதுவதில் இப்படியும் ஓர் உத்தி!

'சேவற்கொடியோனி'ல் ஒளிந்துகொண்டிருப்பவர் 'மணியன்' என்று நான் சொல்கிறேன்! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

- கோ.கி.சீனிவாசன், திருப்பூர்

'இல்லை' என்கிறோம்.

தாங்கள் 'குமுதம்' படத்தின் விமர்சனத்தை மூன்று பக்கங்கள் பிரசுரித்ததன் காரணம் என்னவோ?

- தொ.சு.கி.துவாரகாநாத், சென்னை-1

நான்கு பக்கங்கள் எழுதவேண்டாமே என்றுதான்!

'சேவற்கொடியோ'னில் ஒளிந்துகொண்டிருப்பவர் 'கொத்தமங்கலம் சுப்பு' என்கிறேன். நீங்கள் இல்லை என்று சொல்லமுடியாது.

- காஞ்சி வெ.ராசன், சென்னை-5

நாங்கள் சொல்லவில்லை. கொத்தமங்கலம் சுப்பு அவர்களே 'நான் இல்லை' என்கிறார்.

சேவற்கொடியோன் என்றால் முருகன். ஆகையால், அதில் ஒளிந்து கொண்டிருப்பவர் பாலசுப்பிரமணியன்! சரியா?

நேயர் கடிதம்

- நரசிம்மன், வெங்கடகிருஷ்ணன், சென்னை-17

அப்படியா?

 
நேயர் கடிதம்
நேயர் கடிதம்