ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

நாயகன் ஓவியர் வான்கா

நாயகன் ஓவியர் வான்கா


தொடர்கள்
நாயகன் ஓவியர் வான்கா
நாயகன் ஓவியர் வான்கா
 
நாயகன்
நாயகன் ஓவியர் வான்கா
நாயகன் ஓவியர் வான்கா
நாயகன் ஓவியர் வான்கா

சென்ற இதழ் தொடர்ச்சி...

'இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே!'

- ஆபிரகாம் லிங்கன்

நாயகன் ஓவியர் வான்கா

வான்காவின் மனம் மிகுந்த பதற்றத்தில் இருந்தது. ரேச்சல் அவருக்குள் ஒரு வார்த்தையை அநாயாசமாக வீசிவிட்டாள். வார்த்தையா அது? இல்லை, அவன் வாழ்க்கையையே இறுதி முடிவுக்குக் கொண்டுவந்து விட்ட பெரும் புயல் அது!

''அன்பே, நீதான் எத்தனை அழகாய் இருக்கிறாய்!''

சாதாரண வார்த்தைகள்தான். ஆனாலும், இத்தனைநாளாக ஏன் அந்த வார்த்தைகள் தன்னை நோக்கி வரவே இல்லை. பைத்தியக்காரன், சிவப்புத் தலையன் என்று பட்டப் பெயர்கள்தானே வழக்கமாகக் கிடைக் கும். ஆனாலும், ரேச்சலுக்கு மட்டும் எப்படி தன்னைப் பிடித்தது? அதுவும் இந்தக் காது... இதில் அப்படி என்னதான் இருக்கிறது?

''கிறுக்கா, உன்னிடம் எனக்குப் பிடித்ததே இந்தக் காதுதான்!''

இதைச் சொன்னபோது, அவள் கண்கள் சிந்தியதே ஓர் ஒளி. அதில்தான் எத்தனை அன்பு. அவள் விரல்கள் தொட்டுத் தடவிய தன் கன்னத்தையும் காதையும்ஒரு முறை தொட்டுப் பார்த்துக்கொண்டார். அந்த விரல் களின் வழி தன் உடலெங்கும் பரவிய ஈரத்தைமுழுவது மாக உணர்ந்தார்.

ஒரு பெண்ணின் களங்கமற்ற அன்பு அணுகுண்டைவிட மோசமானது. ஓர் ஆணின் மனதில் அது அதிவிபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. ரேச்சலின் சந்திப்புக்குப் பிறகு வான்காவினுள் இனம் புரியாத மாறுதல்கள் தோன்றலாயின. ஒருபுறம் மிதமிஞ்சிய காதல் உணர்வு, இன்னொரு பக்கம், அபரிமிதமான கலை உணர்வு... இரண்டும் அவரை அலைக்கழித்தன. பகல் முழுக்கச் சுட்டெரிக்கும் வெயிலில் தொப்பி அணியாத தலையுடன் அலைந்து திரிந்து, அங்கிருக்கும் வீடுகள், வயல்வெளிகள், சூரியகாந்திப் பூக்கள். கஃபேக் கள் எனத் தன் வாழ்வின் மிகச் சிறந்த படைப்புகளை வரைந்துகொண்டே இருப்பார். அதே சமயம், மாலை கவிழ்ந்து இரவானதும், ரேச்சலின் நினைவு பிசாசைப் போலத் துரத்தத் துவங்கும். அவளது விடுதிப் பக்கம் சென்று வெளிப்புறமாகவே ஜன்னல் ஜன்னலாகப் பார்த்தபடி அலைவார். காரணம், அஞ்சு ஃப்ராங்!

அது இருந்தால், கவலையே இல்லை. நெஞ்சுநிமிர்த்திக் கொண்டு தைரியமாக உள்ளே செல்லலாம். ரேச்சலின் மடியில் படுத்துக்கொண்டு இரவு முழுக்க அன்பில்நனைய லாம். ஆனால், தினம் தினம் ஐந்து ஃப்ராங்க் செலவழிக்க அவரிடம் பண வசதி இல்லாததால், சாலையில் இருந்த படியே ஜன்னல் வழியாக அவளது முக தரிசனத்துக்காகக் காத்துக்கிடப்பார்.

இச் சூழலில் தங்குவதற்கு இடமில்லாமல் ஒரு நாள் அவரைத் தேடி வந்தார் பால்காகின்... பாரீஸில் பழகிய ஓவிய நண்பர். அதுவரை தனியனாக ஆர்ள் நகரத்தில் சுற்றிவந்த வான்காவுக்கு காகி னின் வருகை மகிழ்ச்சியைத் தந்தது. இருவரும் வயல் வெளிகளுக்குச் சென்று ஓவியங்கள் வரையலாயினர்.

என்னதான் நண்பன் என்றாலும், அவனும் ஓர் ஓவியன் அல்லவா? ஒரு நாள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. யாருடைய பாணி சிறந்தது எனத் துவங்கிய பேச்சு, வன்மமாக மாறத் துவங்கியது. வான்காவின் படைப்புகளை காகின் கேலியாகப் பேச, ஏற்கெனவே மனநிலையில் மோசமான மாற்றங்களைச் சந்தித்து வந்த வான்காவை, அது மிகவும் பாதித்தது. ''இனி உன்னோடு என்னால் ஒன்றாகத் தங்க முடியாது. அறையைக் காலி செய்துவிடுகிறேன்'' என காகின் கூற, வான்காவுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.

ஒருபுறம் நண்பனின் பிரிவு, இன்னொரு புறம் அவன் தன்னை அவமானப்படுத்திய உணர்வு. இரண்டும் சேர்ந்து அவரை மிக மோசமான மனநிலைக்கு உந்தித் தள்ளின. இப்போது அவரது கால்கள் தானாக லூயிஸின் விடுதியைத் தேடிச் சென்றன. ரேச்சலின் மடியில் மனம் புதைத்து அழுவது ஒன்று மட்டும்தான் அவருக்கு அப்போது தெரிந்த ஒரே நிவாரணியாக இருந்தது.

உள்ளே சென்ற பிறகுதான் தன்னிடம் அவளுக்குத் தர வேண்டிய ஐந்து ஃப்ராங்க் இல்லை என்பதைஉணர்ந் தார். விரக்தியுடன் வாசலில் இருந்த சோபாவில்வான்கா அமர, அவர் மடியில் சட்டென ஒரு பெண் வந்துஅமர்ந் தாள். அது ரேச்சல். ''என்ன ப்ரூ, உன்னை இத்தனை நாளா எதிர்பார்த்தேன். இப்போதான் உனக்கு நேரமே கிடைச்சுதா?'' அந்த முகத்தையும் கண்களையும் பார்த் ததும் சட்டென வான்காவுக்கு இதயம் படபடத்தது. வாழ்வில் ஒரு நிமிடமேனும் உண்மையான அன்பை அவர் மேல் செலுத்திய ரேச்சல் அல்லவா இது.

''என்னிடம் இப்போதும் ஐந்து ஃப்ராங்க் இல்லை அன்பே?''

''பரவாயில்லை அன்பே... பதிலாக உன் அழகான இந்தக் காதை எனக்குக் கொடுத்துவிடு!''

''காதைக் கொடுத்தால் இந்த இரவு உன்னுடன் இருக்க என்னை அனுமதிப்பாயா அன்பே?''

''ஓ! தாராளமாக. உனக்கு எப்போது ஐந்து ஃப்ராங்க் கிடைக்கிறதோ, அப்போது கொடுத்துவிட்டு காதைத் திருப்பி எடுத்துச் சென்றுவிடு!'' எனச் சிரித்தவள், வான் காவின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு எழுந்துகொண் டாள். அவள் பேசியது வான்காவுக்கு வேடிக்கையாகத் தெரியவில்லை. வேதவாக்காகவே தோன்றியது. வீட்டுக்கு விரைந்தவர், குளியலறைக் கதவைத் தாளிட்டுக்கொண்டார். எல்லாமே இழந்த பிறகு, வாழ்வில் கடைசியாக தன் மனதில் எஞ்சியிருக்கும் அந்தச் சிறு பெண்ணின்அன்புக் குப் பரிசாகவோ அல்லது தன்னை ஒரு மனிதனாகக்கூட பொருட்படுத்தாத இந்த நேசமற்ற உலகுக்கு அன்பின் ஆழத்தைப் புரியவைப்பதற்காகவோ, சவரக் கத்தியை எடுத்தார். வான்காவின் கை ரேச்சலுக்குப் பிடித்தமான அந்தக் காதுகளை நோக்கிச் சென்றன.

ஓவியம் வரைந்திருந்த காகிதத்திலேயே அந்தத் துண்டித்த காதைப் பொட்டலமாக மடித்துக்கொண்டு மீண்டும் லூயிஸின் விடுதிக்கு நடந்தார். யாரோ கூப்பிடுவதாக வெளியில் வந்த ரேச்சல், தலையில் துண்டு கட்டியிருக்கும் வான்காவைப் பார்த்துச் சிரித்தபடி, ''என்ன ப்ரூ?'' எனக் கேட்க, அந்தப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு, விடுவிடுவென வீடு திரும்பினார் வான்கா.

காகின் எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு அதிர்ந்து அவசரமாக அண்ணனைப் பார்க்கப் புறப்பட்டு வந்தான் தியா. வான்காவை ஆஸ்பத்திரி படுக்கையில் பார்த்துக் கதறி அழுதான். சில நாட்களிலேயே வான்கா சகஜநிலைக்குத் திரும்பினார். வான்கா குணமானதும், தியோ மீண்டும் பாரீஸூக்குப் புறப்பட்டுச் சென்றான்.

வான்கா தன் தலையில் துண்டுகட்டிய உருவத்தையே காலத்தின் சாட்சியாக மாற்றுமளவுக்கு ஓவியமாக வரைந்து தள்ளினார். இறுதி வரை ஓவியத்துக்காகவும் உண்மையான அன்பைத் தேடுவதற்காகவும் தன் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்த வான்கா, செயின்ட் ரெமியில் இருக்கும் மனநலக் காப் பகத்தில் சில காலம் தங்கியிருந்தார்.

சூரியனின் மீதான அவரது நேசம், இன்னும் அங்கு அதிகமானது. தன் இறுதி நாட்களை சூசகமாக உணர்ந்தாற் போல் வான்காவின் கைகள் வேகவேகமாக காலத்தின் மிகச் சிறந்த ஓவியங்களை வரைந்து தள்ளியது. சில நாட்கள் கழித்து தியோவுக்கு மனநலக் காப்பகத்திலிருந்து வந்த கடிதம், வான்கா தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட தகவலைக் கூறியது. புயலைப் போல வந்தான் தியோ. கடைசி வரை தன் அண்ணனை, அவனது அளப்பறிய திறமையை இந்த உலகம் புரிந்துகொள்ளாமலே இருந்துவிட்டதே எனக் கண்ணீர்விட்டான்.

இன்று உலகம் முழுக்க பில்லியன் கணக்கில் விலைபோகும், பிரபஞ்சமே போற்றும் அந்த மகத்தான ஓவியக் கலைஞனின் வாழ்க்கையோ, புறக்கணிப்பு, வெறுப்பு, அவமானம் மட்டுமே சந்தித்ததுதான் வாழ்வியலின் மகத்தான சோகம்.

ஏழே பேருடன் வான்காவின் உடல் மயானத்துக்குப் பயணித்தது. அண்ணனை அனுப்பிவைத்துவிட்டு, பாரீஸூக்குத் திரும்பிய தம்பி அடுத்த ஆறாவது மாதத்தில், அதே துக்கத்தில் தானும் உயிரைவிட்டான்.

சூரியகாந்தி மலர்கள் நிரம்பிய அந்தத் தோட்டம் இப்போதும் உண்மையான அன்பை உலகுக்குப் பறைசாற்றி வருகிறது!

நாயகன் ஓவியர் வான்கா

 
நாயகன் ஓவியர் வான்கா
நாயகன் ஓவியர் வான்கா