ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

டீன் கொஸ்டீன்

டீன் கொஸ்டீன்


தொடர்கள்
டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன்
 
டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன்

கே.ஸ்மிதா, சென்னை-45.

''நான் பி.எம்.ஐ. மெஷினில் எடை பார்த்தபோது, எனது 5.5 அடி உயரத்துக்கு, 80 கிலோ எடை காண்பித்து, 'ஓவர் வெயிட்' என்று ரிசல்ட் வந்தது. நான் சரசரவென எடையைக் குறைக்க வேண்டும். இதற்கு ஜிம்முக்குச் செல்லலாமா அல்லது 'வெயிட்லாஸ் சென்டர்' என்று இருக்கிறதே... அங்கு செல்லலாமா? ஸ்லிம்மிங் சென்டர்களில் எடை உடனடியாகக் குறைந்தாலும், அங்கு செல்வதை நிறுத்தினால், இறங்கியதைக் காட்டிலும் அதிவேகமாக எடை ஏறிவிடும் என்கிறார்களே. தினமும் மாத்திரை சாப்பிடுவதன் மூலமும் கணிசமாக எடையைக் குறைக்கலாம் என்று விளம்பரங்கள் வருகின்றனவே. எனக்கு இன்னும் திருமண மாகவில்லை. நான் நிரந்தரமாக ஸ்லிம்மாக வேண்டும்... என்ன செய்வது?''

டீன் கொஸ்டீன்

புவனேஸ்வரி, டயட்டீஷியன்.

''எடையைக் குறைப்பதற்காக மட் டும் இல்லை, நிரந்தர உடல் ஆரோக்கி யத்துக்கும் உடற்பயிற்சி மிகவும் அவசி யம். அது ஜிம், ஸ்லிம்மிங் சென்டர், யோகா, நீச்சல், டான்ஸ், வாக்கிங் என்று எந்த வடிவத்திலும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அந்தப் பயிற்சி நம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைப்பதாக இருக்க வேண்டும். எடையைக் குறைப்பதற்காக இவற்றில் ஏதாவது ஒரு பயிற்சியில் அதிதீவிரமாக ஈடுபடுவார்கள் சிலர். அது போன்ற சமயங்களில் அவர்கள் பட்டினி கிடப்பதும் உண்டு. அது சமயங்களில் உயிருக்கேகூட ஆபத்தாக முடியலாம். எனவே, உங்கள் வயதுக்கேற்ற, ஆரோக் கியமான, சத்தான உணவை, சரியான நேரத்தில் சாப்பிடுவதும் அதற்குத் தக்க உடற்பயிற்சிகளை மேற் கொள்வதும் அவசியம். மாத்திரை, வெயிட் லாஸ் சென்டர்களில் உடனடித் தீர்வு கிடைப்பது போலத் தோன்றலாம். ஆனால், அந்தப் பயிற்சி முறைகள் உங்கள் உடலின் இயல்பான மெட்டபாலிசத்தைச் சீர்குலைக்காமல் இருக்க வேண்டும். உங்கள் உடல் அமைப்பு, உணவுப் பழக்கவழக்கங்கள், நாள் ஒன்றுக்குச் செலவாகும் சக்தி போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொண்டுதான் பலன் தரும் ஆலோ சனை அளிக்க முடியும். உடலில் உள்ள அதிகப்படி கலோரியைக் குறைத்து நிரந்தரமாக ஸ்லிம்மாக இருப்பதற்குக் கொஞ்சமே கொஞ்சம் போல மெனக் கெட்டால் எதுவும் சாத்தியமே. நல்ல டயட்டீ ஷியனையும் ஃபிட்னெஸ் மாஸ்டரையும் ஆலோசித்து முடிவெடுங்கள்!''

 


எஸ்.கமலக்கண்ணன், பண்ருட்டி.

''டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் எழுத எண்ணம். இதற் கான வழிமுறைகள், பயிற்சிகளைப் பற்றிய விவரங் களைப் பெற யாரை, எங்கு அணுக வேண்டும்?''

டீன் கொஸ்டீன்

சங்கர் சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி.

''பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத முடியும். தொலைதூரக் கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களும் தகுதியானவர் களே. ஆனால், திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலம் (8-வது படித்தவர்களும் பட்டம் பெறலாம்!) பட்டம் பெற்றவர்கள் இந்தத் தேர்வை எழுத முடியாது. டி.என்.பி.எஸ்.சி. க்ரூப்-1, க்ரூப்-2வுக்கான விண்ணப் பங்கள் அனைத்துத் தலைமை தபால் நிலையங்களிலும் கிடைக்கும். இதற்கென பிரத்யேக பயிற்சி வகுப்புகள் தற்போது ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் நடக்கின்றன. அதில் சிறந்த பயிற்சி நிறுவனங்களில் இணைந்து பயிற்சி பெறலாம். அதில் விருப்பம்இல்லை என்றால், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகங்கள் (ஸ்டேட் போர்ட் சிலபஸ்) ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ வரலாறு, புவியியல், பொருளாதாரப் பாடப் புத்தகங் களை முழுதாகப் படியுங்கள். 'மாதிரி வினா வங்கி' விடைகளுடன் கிடைக்கிறது. அதையும் வாங்கிப் பரிசீலிக்கலாம். பொது அறிவுப் பகுதி கேள்விகளுக்கு டாடா மெக்ராஹில், மனோரமா இயர் புக் போன்ற வற்றைப் பயன்படுத்தலாம். பொதுத் தமிழுக்கு நிறைய கைடுகள் கிடைக்கின்றன. இந்தத் தேர்வுகள் எழுதி பரிச்சயமானவர்களுடன் கலந்தாலோசிப்பதும்நல்லது. ஆல் தி பெஸ்ட்!''


மா.லட்சுமி, திருச்சி-20.

''எனது கல்லூரி, பள்ளிச் சான்றிதழ்கள் அனைத்தும் தொலைந்துவிட்டன. போலீஸில் புகார் செய்ய வேண்டும் என்கிறர்கள். அந்த நடைமுறைகள், டூப்ளிகேட் சான்றிதழ்கள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்துச் சொல்லுங்களேன்?''

டீன் கொஸ்டீன்

பொன்னவைக்கோ துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

''தொலைந்துபோன சான்றிதழ்கள் குறித்து போலீஸில் புகார் செய்வது கட் டாயம். அவர்கள் புகாரைப் பதிவு செய்து, தொலைந்த சான்றிதழ்களைப் பற்றி ஓர் அறிவிப்பு வெளியிடுவார்கள். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குப் பிறகும் சான்றிதழ்கள் கிடைக்கவில்லையென்றால், சான்றிதழ்கள் தொலைந்ததை உறுதிப்படுத்தி ஒரு சான்றிதழ் தருவார்கள். அதன் பிறகு, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் இதற்கென இருக்கும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து, போலீஸ் கொடுத்த சான்றிதழையும் இணைத்து, கட்டணத்தைச் செலுத்தி ஒப்படைக்க வேண்டும். விண்ணப்ப விவரங்களை உறுதி செய்து, உடனடியாக டூப்ளிகேட் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுப்போம். சான்றிதழ் விபத்தில் எரிந்தோ, அழிந்தோவிட்டால், டூப்ளிகேட் சான்றிதழ்களை எளிதில் வாங்கிவிடலாம். தொலைந்துவிட்டது என் றால் அதை வேறு எவரும் யாரும் தவறுதலாகப் பயன்படுத்திவிடக்கூடாது என்பதால்தான் இந்த நடை முறைகள். பள்ளிச் சான்றிதழ்கள் பெறுவதற்கும் இதே வழிமுறைகள்தான். இதற்கு சம்பந்தப்பட்ட துறையை அணுகி, போலீஸிடம் பெறப்பட்ட சான்றிதழை இணைத்து வழங்கினால், அவர்கள் அதைச் சரி பார்த்து சான்றிதழ்களை வழங்குவார்கள்.''


கெ.எஸ்.சாய்மீரா, காளையார்கோவில்.

''நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறேன். நான் விளையாட்டுக்காக சொன்ன ஒரு பொய்யை சீரியஸாக எடுத்துக்கொண்டு என் பாய் ஃப்ரெண்ட் என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டான். அவனுடன் பேசாமல் இருக்க முடியவில்லை. எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எனக்கு ஆலோசனை கூறுங்களேன் ப்ளீஸ்!''

டீன் கொஸ்டீன்

டாக்டர் பத்ரூ முகைதீன், மனநல மருத்துவர்.

''திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற உறுதியுள்ள உண்மைக் காதலாக இருந்தால் சின்ன விஷயத்துக்காக, விளையாட்டுக்காகச் சொல்லப்படும் பொய்க்காக பேசாமல் இருக்க மாட்டார்கள். உங்கள் மனதில் அது போல எண்ணம் இருந்தால், இதையே நல்ல சகுனமாக நினைத்து அவரைவிட்டு விலகிவிடுங்கள். 'அவர்தான் நிச்சயம் வேண்டும்' என்றால், முதலில் நீங்கள் அமைதியாகுங்கள். இரண் டாவது, விளையாட்டுக்காகத்தான் பொய் சொன்னேன் என்பதை அவரிடம் உறுதிப்படுத்துங்கள். அவரை நம்பவையுங்கள். ஆனால், நீங்களாக மீண்டும் அவரி டம் சென்று பேசுவது முட்டாள்தனம். அவராக வரட்டும். அதுவரை காத்திருங்கள். 'இப்போதே இவ் வளவு கோபப்பட்டுப் பேசாமல் இருக்கிறாரே, திரு மணத்துக்குப் பிறகு என்னவெல்லாம் செய்வாரோ?' என்று பயந்து இந்தக் காதலில் இருந்து வெளியேற நினைத்தால், உங்கள் காதலரைப் பற்றிய எண்ணங்களை மறப்பது நல்லது. இது கடினம்தான். தற்போதைய தாக்கம் அதிகபட்சம் 6 வாரங்கள் வரை இருக்கும். அதுவரை உங்கள் காதலரைப் பற்றிய சிந்தனைகளைத் தவிருங்கள். ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று அவ ரோடு மணிக்கணக்காகப் பேசியிருக்கிறீர்கள் என்றால், கொஞ்ச நாட்கள் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கா தீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் அவருடன் தொடர்ந்து பேசியிருந்தால், அந்த நேரத்தில் குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசுங்கள், டி.வி. பாருங்கள். இப்படி அவர் நினைவுகளைத் தவிர்க்கப் பழகிக்கொள்ளுங்கள். உங்கள் மனம் அமைதியானதும், 'ஆல் க்ளியர்' ஆகிவிடும்!

 
டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன்