விளாத்திகுளம்
பத்திரப்பதிவு அலுவலக வாசலில் இருவர்...
''கரன்ட் கட்டால கரன்ட் பில் குறையுதுனு சந்தோஷப்பட்டா, வீட்டில் செல்போன் பில் எகிறுது!''
''கரன்ட் கட்டுக்கும் செல்போன் பில்லுக்கும் என்னடா சம்பந்தம்?''
''இங்கே அஞ்சாறு மணி நேரம் கரன்ட் இல்லாததால என் பொண்டாட்டி சென்னையிலுள்ள அவ அக்காவுக்கு தினமும் போன் போட்டு, இங்கே விட்டுப் போன எல்லா டி.வி. சீரியல் கதைகளையும் கேக்கறாடா!''
''அட... கடவுளே!''
(நண்பர் முகத்தில் அனுதாபம்).
- உல.முத்துசுவாமி, சென்னை-90.
ராஜபாளையம்
ஒரு கோயில் வாசலில் கணவனும் மனைவியும்...
''நம்ம பையன் சிகரெட் பிடிக்கிறான்னு நினைக்கிறேன்...''
''எதை வெச்சு சொல்றீங்க?''
''அடிக்கடி என் பாக்கெட்ல சிகரெட் குறையுது...''
''ச்சீய்! இதைச் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை!''
(கணவர் கப்சிப்).
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.
சென்னை
ஒரு மெடிக்கல் ஷாப் வாசலில் நண்பர்கள்...
''ஏண்டா, அமெரிக்கர்களோட தாராள மனசைப் பார்த்தியா... அமெரிக்கக் கட்டடத்தை ஏரோப்பிளேனால தகர்த்த ஆளின் பேர் கொண்டவரையே ஜனாதிபதியா ஜெயிக்க வெச்சுட்டாங்களே?''
''டேய், டேய்... அது ஒஸாமா; இவரு ஒபாமா!''
''தெரியும்டா மச்சி! நீ நிறைய இன்டர்வியூவுக்கெல்லாம் போறியே... எந்தளவுக்கு Ôஅப்-டு-டேட்Õடா இருக்கேனு பார்க்கத்தான் இப்படி ஒரு பிட்டைப் போட்டேன்!''
(நண்பர் முறைக்க... இவர் மெடிக்கல் ஷாப்புக்குள் நழுவுகிறார்).
- ச.ஜெயலெட்சுமி, அரும்பாக்கம்.
டவுன் பஸ் நெரிசலில் இரண்டு பெண்கள்...
''அர்ஜுனா... அர்ஜுனா...''
''ஏண்டி?''
''செம இடி!''
(பின்னால் நிற்கும் வாலிபர் நகர்ந்து நிற்கிறார்).
|