Published:Updated:

கிராஃப்ட் ஸ்கூல்

ஈஸியா கத்துக்கலாம் வாங்க...

என்.சியாமளா தேவி
மாடல்: என்.சஹானா

 சுடிதார், புடவை இதுலயெல்லாம் டிசைன் டிசைனா பார்க்கறப்ப... 'நம்மூரு டிரெடிஷனல் ஸ்பெஷலான பாவாடை-தாவணியிலயும் இப்படியெல்லாம் டிசைன் டிசைனா இருந்தா... எப்படியிருக்கும்!'னு தோணுதா..?

அதுக்கென்ன... நாமளே டிசைன்களைப் போட்டுட்டா போச்சு!

தேவையான பொருட்கள்: தைத்த பாவாடை-தாவணி, பென்சில், க்ளூ, க்ளிட்டர் மற்றும் குந்தன் ஸ்டோன்ஸ்.

கிராஃப்ட் ஸ்கூல்
##~##

செய்முறை: பாவாடையின் பார்டர் பகுதிக்கு மேல், பென்சில் கொண்டு உங்களுக்கு பிடித்தமான புள்ளிக் கோலம் போடுங்கள் (படம் 1). கோலத்தின் மீது உங்களுக்கு விருப்பமான நிறத்திலிருக்கும் க்ளிட்டரைப் பிழிந்து கொண்டே வர வேண்டும் (படங்கள் 2, 3). ஒரு மணி நேரம் காய்ந்ததும், க்ளூவைப் பயன்படுத்தி கோலத்துக்கு நடுவில் புள்ளிகளை வையுங்கள் (படம் 4). பாவடையின் நிறத்துக்கு ஏற்றாற்போல குந்தன் கற்களை புள்ளிகளின் மீது வைத்து அழுத்துங்கள் (படம் 5). இப்படியே பார்டர் முழுக்க, டிசைன் செய்யுங்கள்.

இரு கோல டிசைன்களுக்கு இடையே சிறிது இடைவெளி விட மறக்காதீர்கள். பிறகு ஒரு மணி நேரத்துக்கு காய விடுங்கள்.

கிராஃப்ட் ஸ்கூல்

இதேபோல தாவணியின் ஓரங்களிலும் உங்களுக்கு விருப்பமான க்ளிட்டரைப் பயன்படுத்தி பிடித்த சின்ன டிசைன் கோலம் அல்லது படத்தில் உள்ளது போல கோல டிசைன் வரைந்து அலங்கரித்துக் கொள்ளுங்கள். பிறகு, ஒரு மணி நேரம் காயவிடுங்கள்.

கடைசியில், பாவாடை மற்றும் தாவணி இரண்டையும் பின்பக்கமாக திருப்பி அயர்ன் செய்தால்... அசத்தலான டிசைனில் பாவாடை-தாவணி தயார்!

பிறகென்ன உங்கள் வீட்டு இளவரசியின் உடைகள், அக்கம் பக்கம் ஏக பிரபலம்தான்!

- இன்னும் கத்துக்கலாம்...

படங்கள்: எம்.உசேன்