கோடம்பாக்கத்துக்கு சேலத்திலிருந்து ஒரு சவால்!
##~## |
'நீ எனக்கு மட்டும்’ - முழுக்க முழுக்க சேலத்திலேயே உருவாகும் திரைப்படம்! கதைக் களம் மற்றும் தளங்கள் மட்டுமல்ல... எடிட்டிங், ரிக்கார்டிங், டப்பிங் என அனைத்து வேலைகளுமே சேலத்தில்தான்!
படத்தின் இயக்குநர் சக்திவேல், மண்ணின் மைந்தர். ''தமிழ் சினிமாவின் தாய் மடியான மாடர்ன் தியேட்டர்ஸ் அமைந்து இருந்தது சேலத்தில்தான். இங்கு இருந்துதான் தமிழ் சினிமா கோடம்பாக்கத்துக்குக் குடி புகுந்தது. திரும்பவும் சேலத்தை சினிமா தலைநகரம் ஆக்கணும்னு எனக்கு ஆசை. அதான் என்னால் முடிந்த முயற்சியாக சேலத்தையே களமாக்கி இருக்கேன். கோலிவுட், 'சேலாவுட்’ ஆகணும்!'' தாராளத் தன்னம்பிக்கையோடு பேசு கிறார் சக்திவேல்.


''எடிட்டிங் ரூம், ரிக்கார்டிங்- டப்பிங் ஸ்டுடியோ எல்லாமே பக்காவா தயார் பண்ணிட்டோம். கேமரா ட்ராலிகூட நாங்களே தயார் செஞ்சிட்டோம்.இதெல்லாம் முடிச்சுட்டுதான் படத்துக்கான கதையை யோசிச் சேன்!'' (அப்படிப் போடு அருவாளை!)
'' 'நீ எனக்கு மட்டும்’ -

ரொம்ப வுமே வித்தியாசமான காதல் கதை. பலரும் கதையை கண்டுபிடிக்க முயற்சி பண்ணாங்க. அது முடியலை. இப்பக் கதை வெளியே தெரிஞ்சுட்டா, சினிமா இன்டஸ்ட்ரியே ஆடிப் போயிடும். அதான், கதையை வெண் திரையில் காண்க. ஒண்ணு மட்டும் சொல்றேன்... படத்தோட கதை எங்கே ஆரம்பிக்குமோ, க்ளைமாக்ஸ் அங்கேதான் முடியும்!'' தம்ஸ்-அப் காட்டிப் புன்னகைக்கிறார் சக்திவேல்!
- கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: எம்.விஜயகுமார்