என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

மண்ணோடு மக்களோடு!

மண்ணோடு மக்களோடு!

##~##

'எப்போ செமஸ்டர் எக்ஸாம் முடியும்? எப்போ விடுமுறை கிடைக்கும்?’ என்று காத்திருப்பதுதான் கல்லூரி மாணவர் களின் வழக்கம். ஆனால், ஏற்காட்டில் இருக்கும் 'ஞானோதயா சபேஷியன் கல்லூரியைச் சேர்ந்த தத்துவவியல் துறை மாணவர்  கள் செமஸ்டர் விடுமுறையில் தூத்துக்குடி மாவட்டம் வேப்ப லோடை கிராமத்தில் 10 நாட்கள் தங்கி இருந்து, கிராம மக்க ளின் பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

மண்ணோடு மக்களோடு!

''நாங்க மொத்தம் 30 பேரு. குட்டிக் குட்டி அணிகளா பிரிஞ்சு வெவ்வேறு கிராமங்களுக்குப் போயிருக்கோம். கடற் கரையோர கிராம மக்களோடு தங்கி, அவங்களோட அன்றாட வாழ்க்கை, உப்பளத்தில் உப்பை விளைவிக்கும் முறையைக் கத்துக்க ஆசைப்பட்டோம். தூத்துக்குடி மாவட்ட கடற்கரைப் பகுதி உப்பளங்களுக்கு ஏற்ற இடம். வேப்பலோடையில்தான் 'உப்பு பரிசோதனை மையம்’ இருக்கு. அதனால அஞ்சு பேர் வேப்பலோடைக்கு வந்தோம். இந்தக் கிராமத்துல இருக்குற கணேசன் பாத்தி கட்டுறதுல இருந்து உப்பு வார்றது வரைக்கும் எல்லாத்தையும் எங்களுக்கு கத்துக் கொடுத்தார். புது விஷயம் கத்துகிட்டது சந்தோஷமா இருந்தாலும், கிராம மக்களை நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு.

மண்ணோடு மக்களோடு!

இந்தக் கிராமத்தில் கல்வி அறிவு சதவிகிதம் ரொம்பவே குறைச்சல். ஒரே ஒரு பையன்தான் கல்லூரி வரைக்கும் படிக் கப் போயிருக்கான். பெரும்பாலான குடும்பங்கள் உப்பு தொழி லையே நம்பி இருக்காங்க. மழை பெய்தால் மொத்தக் கிராமத்துக்கும் வேலை கிடையாது. இப்படிக் கல்வி, பொருளாதாரம்னு எல்லா விஷயத்திலும் ரொம்பப் பின்தங்கி இருக்காங்க. இவங்களைப் பத்தி 'மண்ணோடு மக்களோடு’ன்னு ஒரு புத்தகம் வெளியிடப்போறோம். அந்தப் புத்தகம் மூலமா அரசாங்கத்தின் கவனம் இந்தப் பக்கம் திரும்புனா அதைவிட சந்தோஷம் எதுவும் இல்லை!'' என்கிறார் மாணவர் அணியைச் சேர்ந்த லியோ சார்லஸ்.

கைடு கணேசன் தன் பங்குக்கு மாணவர்கள் பற்றி நெகிழ்கிறார். ''இந்த மாதிரி வருஷா வருஷம் பசங்க வருவாங்க. புத்தகம் பிடிச்ச கையால் உப்பை வாரும்போது பொத்துரும். ஆனாலும் யாரும் முகம் சுண்டாம மொத்த விஷயங்களையும் கத்துப்பாங்க.  இருக்குற பத்து நாளும் என் வீட்டுச் சாப்பாட்டைத் தான் சாப்பிடுவாங்க. பெரிய இடத்து பசங்க எங்க வீட்டுச் சாப்பாட்டை சாப்பிடுறதைப் பார்க்க மனசுக்குச் சங்கடமா இருக்கும். பயிற்சி முடிஞ்சு பசங்க ஊருக்கு போனதும், 'அப்பா எப்படி இருக் கீங்க’ன்னு கடிதம் எழுதுவாங்க. அதைப் படிக்கும் போது சந்தோஷமா இருக்கும். நானும் பதிலுக்கு கடிதம் எழுதுவேன். ஏதோ ஏழைக்கேத்த எள்ளு உருண்டை. என்னால முடிஞ்சதை செய்யுறேன்!'' என்று அவர் பேசி முடிக்க, 'அப்பா’ என்று அவரைக் கட்டிக் கொள்கிறார்கள் மாணவர்கள்!

-  இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்