நான் அரவிந்த் தியாகராஜன் ஆனது எப்படி?

"அப்துல் கலாம் என் 'HD FonoDoc' என்ற இந்தக் கருவியைப் பார்த்ததும், 'என்னை டெஸ்ட் பண்ணுங்க

"எனக்கு பூர்வீகம் தஞ்சாவூர். அப்பா காலத்திலேயே சென்னையில் செட்டில் ஆகிட்டோம். அண்ணா பல்கலைக்கழகத் தில் 1997 முதல் 2001 வரை ஈ.சி.இ.படிச் சேன். அப்போ கலாம் சார் அங்கே கௌரவப் பேராசிரியர். படிச்ச காலம் முழுக்க எனக்கு அவர்கூட நேரடி பரிச்சி யம் கிடையாது. ஆனால், பல்கலைக் கழகத்தில் அவருடைய பல உரைகளைக் கேட்டு இருக்கிறேன். சும்மா மேடைப் பேச்சு பாராட்டுகளுக் காக உணர்ச்சிவசப்பட்டு அடுக்குமொழி வார்த்தை அடுக்கும் சொற்பொழிவு கிடையாது அவை. ஒவ்வொரு சொல்லும் நம்மை அடுத்தடுத்த கட்டத் துக்கு அழைத்துச் செல்லும் மந்திரம் மாதிரியே ஒலிக்கும். 'மத்தவங்க நடந்த பாதையில வேகமா நடக்குறது ஒரு விஷயமே கிடையாது. மத்தவங்க நடக்குறதுக்கு நாமளே புதுசா ஒரு பாதை அமைக் கணும். அதுதான் ஒவ்வொரு இளைஞனின் கடமை'ன்னு ஒவ்வொரு முறையும் ஒரு தகவல் சொல்லுவார். அந்த உற்சாகமூட்டும் வார்த்தை கள்தான் என்னை சின்னச் சின்ன ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தூண்டின!
கேம்பஸ் இன்டர்வியூவில் எனக்கு பெங்களூரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சில ஆயிரங்களுக்காக வெளிநாட்டு நிறுவனங்களில் லாபத்துக்கு நம் உடம்பை வருத்தி வேலை பார்ப்ப தில் எனக்கு ஒப்புதல் இல்லை. இன்ஜினீயரிங் படிப்பில் துணைப் பாடமாக நான் படித்த பயோ மெடிக்கல் துறையில் எனக்கு எக்கச்சக்க ஆர்வம். அந்த ஆர்வம்தான் 2001-ல் இதயத்தின் ஒலியைக் கண்டறியும் 'ஹார்ட் கார்டு' கருவியைக் கண்டுபிடிக்க வைத்தது. அந்தக் கருவியை மேம்படுத்த ஸ்பான்ஸர் ஷிப் கேட்டு, இந்தியாவின் பல கம்பெனிகளில்ஏறி இறங்கினேன். யாரும் உதவ முன்வரவில்லை.
வேறு வழி இல்லாம அப்போ சிங்கப்பூர்அரசின் உதவியை நாடினேன். அந்த நாட்டின் முக்கியமான 10 மனிதர்களைச் சந்தித்து 'ஹார்ட் கார்டு' கருவியின் செயல்பாடுகளை விளக்கினேன். 'ஹார்ட் கார்டு' அவர்களுக்கு என் மேல் நம்பிக்கையை உண்டாக்கியது. மேற்கொண்டு ஆய்வுக்காக ஒன்றரை லட்சம் சிங்கப்பூர் டாலர்களை ஒதுக்கினார்கள். நம்ம பணத்தில் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய். 'ஹெச்.டி. மெடிக்கல் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தைத் துவக்கினேன். தொடர்ந்து ஆஸ்திரேலியா, தென்கொரிய நிறுவனங்களில் இருந்தும் ஆய்வுக்கு நிதி கிடைத்தது. கடந்த 10 ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சியின் பயனாக 'ஹார்ட் கார்டு' இப்போது மேம்பட்ட அதிநவீன வசதிகள் நிரம்பிய 'HD FonoDoc' கருவி ஆகப் பரிமாணம் பெற்று இருக்கிறது.

ஸ்டதெஸ்கோப் வடிவிலான இந்த எளிய கருவி, இதயக் கோளாறுகளை ஒரு நொடியில் ஸ்கேன் செய்து தெரிவித்து விடும். தற்போது இதயக் கோளாறுகளை 'எக்கோ கார்டியோ கிராம்' முறை மூலம் மருத்துவர்கள் கண்டறிகிறார்கள். அதிக நேரமும், பெரும் செலவும் பிடிக்கக்கூடிய சோதனை முறை அது. அதோடு, அந்த எக்கோ கருவி அளவில் பெரியதாக இருப்பதால், வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதும் கடினம். ஆனால், இந்த HD FonoDoc கருவி, இதய ஒலியை டிஜிட்டல் ஒலியாக மாற்றி, அதை உடனடியாகக் கையில் பிரின்ட் - அவுட்டாகத் தந்துவிடும். நினைத்த நேரத்தில், குறைந்த செலவில் உடனடியாக இதயக் கோளாறுகளைக் கண்டறிய முடியும். இந்தக் கருவிக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் தரச் சான்றிதழ் அளித்துள்ளன. நமது மத்திய அரசும் இந்தக் கருவியைச் சோதித்து சான்றிதழ் வழங்கி உள்ளது.
கடந்த மாதம் தமிழக அரசு தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியது. அதில் HD FonoDoc கருவி மூலம், கிராம மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 10 பேருக்கு இதயக் கோளாறு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களை சென்னை மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதனை செய்ததில், இதயம் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அனைவருக்கும் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த மருத்துவ முகாம் நடந்த இடத்துக்கு எக்கோ கருவியை எடுத்துச் செல்ல முடியாது. அப்படி ஒரு சமயத்தில், அந்த 10 பேரும் தங்கள் இதயக் கோளாறு குறித்து அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த இடத்தில்தான் HD FonoDoc கருவி நமக்குப் பெரிதும் பலன் அளிக்கும். தமிழக ஆரம்ப சுகாதார மையங்கள் ஒவ்வொன்றுக்கும் 'HD FonoDoc' கருவியை வாங்க உள்ளதாக சுகாதாரத் துறைச்செயலர் கூறியுள்ளார். ஒரு கண்டுபிடிப்பு, சொந்த ஊரில் அங்கீகரிக் கப்படுவதைவிட, ஓர் ஆராய்ச்சியாளனுக்கு வேறு என்ன பெருமை இருக்க முடியும்?
இதைத் தவிர, டேட்டா கம்பரஷன், சூரிய ஒளி மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் கருவி, செல்போனை இயங்கவைக்கும் டெக்னாலஜி என 40-க்கும் மேற்பட்ட என் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்று இருக்கிறேன். இவை அனைத் தும் பல்வேறு நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
மேம்போக்கான நமது கல்வி முறையும், மாணவனை நண்பனாகப் பாவிக்காத ஆசிரியர்களும்தான் இளைஞர்கள் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு தடைக் கற்களாக இருக்கிறது. எந்தப் பாடத்தையும் மனப்பாடம் செய்யாதீர்கள். அது நமக்கு எந்த வகையில் உதவியாக இருக்கிறது என்று கேளுங்கள். கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருங்கள். பதில் கள், உங்களுக்குப் புதிய உலகத்தை அறிமுகப்படுத்தும்!"