ஈஸியா கத்துக்கலாம் வாங்க....
என்.சியாமளாதேவி
மாடல்: கே.ஸ்ரிங்கா

சும்மா எதையாவது யோசிக்கிறப்போ... சந்தோஷமா இருக்கிறப்போ... என்ன செய்வோம்?
ஒண்ணு... மனசு விட்டுப் பாடுவோம். இல்ல... பாடிட்டே பக்கத்துல இருக்கிற பேப்பர்ல பேனாவால கைக்கு வந்தத கிறுக்குவோம்!
ஆம் ஐ ரைட்?
##~## |
யெஸ்... இன்னிக்கு நீங்க அதைத்தான் டிரெஸ்ல பண்ண போறீங்க. உங்க மனசுக்கு தோணின ஏதாவது ஒரு டிசைனை டிரெஸ்ல கிறுக்கப் போறீங்க... தட்ஸ் ஆல்! இப்படி பண்ற டிசைனுக்கு... 'மிக்ஸ்டு மீடியா ஆர்ட்'னு அமெரிக்காவுல பேரு வெச்சுருக்காங்க!
தேவையான பொருட்கள்: வெள்ளை நிற டாப்ஸ், சிவப்பு, நீலம், பச்சை மற்றும் அடர் மஞ்சள் ஃபேப்ரிக் பேனாக்கள் - தலா 1, கறுப்பு நிற த்ரீ டி அவுட் லைனர் - 1, ஃபேப்ரிக் க்ளூ - 1, சின்ன மஸ்லின் அல்லது டிரான்ஸ்பரன்ட் துணி - இரண்டு பீஸ்.
செய்முறை: அடர் மஞ்சள் நிற ஃபேப்ரிக் பேனா கொண்டு, படத்தில் காண்பித்து உள்ளது போல (படம் 1) வளைவான ஒரு கோடு அல்லது மரக்கிளை போல வரைந்து கொள்ளுங்கள். இந்தக் கோடுகள் எல்லாம் ஒரு புள்ளியில் ஆரம்பித்து பிரிந்து மேலே செல்கின்ற கிளைகள் போல மூன்றாக பிரிந்து இருக்க வேண்டும். கிளைக் கோடுகளில் ஆங்காங்கே சிவப்பு கலர் ஃபேப்ரிக் பேனாவால் வட்டத்தை வரைந்து நிரப்பிக் கொள்ளுங்கள் (படம் 2). கோடுகளில் மீதியிருக்கும் இடங்களில், ஆங்காங்கே அடர் மஞ்சள் நிற ஃபேப்ரிக் பேனாவால் சின்னச் சின்ன

டிசைன்களையும் வரைந்து கொள்ளுங்கள் (படம் 3). ஒவ்வொரு பெரிய வட்டங்களின் வெளியே நீல நிற ஃபேப்ரிக் பேனா கொண்டு அவுட்லைன் வரையுங்கள்.
துணியின் வலது அல்லது இடது பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் ஹை ஃபை (பிவீ திவீ) என்கிற எழுத்துக்களை ஒன்றன் கீழ் ஒன்றாக போதுமான இடைவெளிவிட்டு, சிவப்பு கலர் ஃபேப்ரிக் பேனாவால் தடிமனான வடிவத்தில் எழுதுங்கள். மீதி இடங்களில் பச்சை கலர் ஃபேப்ரிக் பேனா வால் பெருக்கல் குறி போட்டு விடுங்கள் (படம் 4).
இப்போது டிரான்ஸ்பரன்ட் அல்லது மஸ்லின் துணியை எடுத்து அதன் பின்புறம் ஃபேப்ரிக் க்ளூ தடவி, 'ஹை ஃபை' என்றிருக்கும் எழுத்துக் களின் மீது ஒட்டி விடுங்கள். எழுத்துக்கள் மங்கலாகத் தெரியும். ஒட்டப்பட்ட மஸ்லின் துணியின் ஓரங்களில் கறுப்பு நிற த்ரீ டி அவுட் லைனர் கொண்டு கட்டம் வரைந்து, அதன் மேல் போதுமான இடைவெளியில் சின்னச் சின்ன கோடுகளைப் போடுங்கள். பார்ப்பதற்கு வெளிப்புறமாக தைத்தது போல அழகான டிசைன் கிடைக்கும்.
பிறகு, ஒரு நாள் முழுவதும் காய வைத்து விடுங்கள். மறுநாள் டாப்ஸை உள்புறமாக திருப்பி அயர்ன் செய்தால்... அட்டகாசமான டாப்ஸ் தயார்.
இனி, 'ஹல்லோ... நாங்கள் லாம் சும்மா கிறுக்கினாலே அது ஆர்ட் தெரியுமா?' என்று செமத்தையாக பந்தா விடலாம்!
பின்குறிப்பு: உங்களுக்கு விருப்பமான எந்த நிற டாப் ஸையும் தேர்ந்தெடுத்து, அதற் கேற்ற நிறத்தில் ஃபேப்ரிக் பேனா மற்றும் த்ரீ டி அவுட் லைனரை பயன்படுத்தி அசத்தலான டிசைனில் ஆடைகளை உருவாக்கிக் கொள்ள லாம்!
- இன்னும் கத்துக்கலாம்...
படங்கள்: எம்.உசேன்