ஸ்டூடன்ட் ஸ்டார்

''அடுத்த மாசம் யூத் எக்சேஞ்ச் புரொகிராம். பங்களாதேஷ் கிளம்புறேன். அங்குள்ள இளைஞர்களிடம்
''விவரம் தெரிஞ்ச வயசுல இருந்தே என்.சி.சி பணி களுக்காகக் குடியரசு தினத்தில் பிரதமரிடம் விருது வாங்கணும்கிறது என் கனவு. ஆனால், அது அவ்வளவு சுலபம் இல்லை. இன்டர் குரூப் போட்டி, ஃப்ரீ ரிபப்ளிக் டே போட்டி, லாஞ்ச்-1, லாஞ்ச்-2ன்னு ஏகப்பட்ட போட்டிகளில் ஜெயிக்கணும்.
முதல்ல இன்டர் குரூப் போட்டி. தமிழ்நாட்டில் கலந்துக்கிட்ட 3 ஆயிரம் மாணவர்களில் இருந்து, 109 சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, திறமைக்கேற்ப தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிச்சாங்க. எனக்கு ஒரு பதக்கம்கூடக் கிடைக்கலை. நான் ஒல்லியா இருப்பேன். 'இந்த உடம்பை வெச்சுக்கிட்டு நீ ஏன் என்.சி.சி-க்கு வந்தே?’னு ஏகப்பட்ட கிண்டல். 'இன்டர் குரூப் போட்டியில் ஒரு பதக்கம்கூட ஜெயிக்க முடியலை. பிரதமர் கையால பதக்கம்லாம் வெறும் கனவுதானா?’ன்னு சோர்ந்துட்டேன்.
சமீபத்தில் திவ்யா அஜித்னு ஒரு தமிழ்ப் பொண்ணு ராணுவத்தில் 'ஸ்வார்ட் ஆஃப் ஹானர்’ விருது ஜெயிச் சாங்களே... ஞாபகம் இருக்கா? கல்லூரியில் அவங்க எனக்கு சூப்பர் சீனியர். என்.சி.சி-யில் எனக்குப் பயிற்சி கொடுத்தவங்களும் அவங்கதான். 'நம்மைப்பத்தி

ஆயிரம் விமர்சனங்கள் வரும். அதில் நல்ல விஷயங்களை மட்டும் கவனிச்சு உன்னைத் திருத்திக்கோ. கடின உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம்!’னு சொல்லிட்டே இருப்பாங்க. கிண்டல் அடிச்ச அத்தனை பேருக்கும் 'என்னால் முடியும்’னு நிரூபிக்க நினைச்சேன். பயிற்சியில் தீவிரமானேன். தப்புகளைத் திருத்திக்கிட்டேன். நிறைய விஷயங்களைத் தேடித் தேடிப் படிச்சேன். சமயம் கிடைக்கும்போது எல்லாம் என் திறமைகளை வெளிப்படுத்திக்கிட்டே இருந்தேன்.
2009-ல் 'NCC Cado Star’ விருது கிடைச்சது. அது இன்னும் இன்னும் கற்றுக்கொள்ளும் வேகத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரித்தது. என்.சி.சி. டைரக்டர் ஜெனரல் ஆர்.கே.கார்வால் கையால் 'பெஸ்ட் கேடட்’ வெண்கலப் பதக்கம் பெற்றேன். குடியரசு தின விழா. 30 பேர்கொண்ட தமிழகப் பெண்கள் பிரிவின் பிரதி நிதியாக பிரதமர் கையால் விருது வாங்கினேன். 'கங்கிராட்ஸ்... ஆல் தி பெஸ்ட்!’னு பிரதமர் கை குலுக்கி வாழ்த்தினார். ரெண்டே ரெண்டு நிமிஷம்தான் பிரதமர் பக்கத்தில் இருந்தேன். ஆனால்,
அதுக்காக ரெண்டு வருஷ இடைவிடாத போராட்டம். எந்த ஒரு வெற்றியும் எளிதாகக் கிடைக்காதுன்னு புரிஞ்சுது.
என்.சி.சி. எனக்கு ஒழுக்கம், காலம் தவறாமையைக் கத்துக்கொடுத்திருக்கு. தன்னம்பிக்கையை வளர்த்திருக்கு. நான் இலக்கை அடைந்துவிட்டதாக நினைக்கலை. பாட்டு, நடனம்னு இன்னும் நிறைய விஷயங்கள் கத்துக் கிட்டு இருக்கேன். இப்போ ஐ.நா. சபையில் வேலை பார்க்கணும்னு ஆசை வந்திருக்கு. சர்வதேச அரசியல் படிக்கப் போறேன். அடுத்த சவால் தயார்... நானும் தயார்!''
படம்: ச.இரா.ஸ்ரீதர்