மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

கலைஞரை சந்திக்கலாம்... ஜெயலலிதாவை 'தரிசிக்கலாம்'!

##~##

கே.ராகவேந்திரன், சென்னை.

இந்தத் தேர்தலில் மனசுக்குள் ஒரு கணிப்பு வைத்திருந்து இருப்பீர்கள். மனசாட்சிப்படி உண்மையைச் சொல்லுங்கள்... அது அப்படியே நடந்ததா?

கணித்ததை முதலிலேயே சொல்லும் தைரியம் வேண்டும். எல்லாம் நடந்து முடிந்த பிறகு, 'நான் நினைத்தபடியே நடந்தது’ என்று சொல்லிக்கொள்வது பெருமை அல்ல!

தீபா ராஜேந்திரன், புதுவை.

கலைஞர் - ஜெ. ஒரு வித்தியாசம் (உங்கள் ஸ்டைலில்)?!

ஹாய் மதன் கேள்வி - பதில்

கலைஞரைச் சுலபமாகச் சந்திக்க முடியும். நேரம் இருந்தால், உடனே வரச் சொல்வார். ஜெயலலிதாவைச் சந்திக்க முடியாது. அவரே வெளியே வந்து பால்கனியில் இருந்து கையசைத்தால்தான் உண்டு!

ஜே.பி. சுலக்ஷணா, கோவை-8.

அதெப்படி மனிதர்கள் எல்லோரும் ஒரே சமயத்தில்... ஒரே மாதிரி... ஒருவருக்கொருவர் பேசி வைத்துக்கொண்டதைப்போல் முடிவு எடுக்கிறார்கள்?

தேர்தல் முடிவுகளைச் சொல்கிறீர்கள்! 'தமிழக மக்கள் லஞ்ச ஊழல்பற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லை. சும்மா 'தன்மானம்’ என்றெல்லாம் பீத்திக்கொள்வார்களே தவிர, இவர்களுக்கு இலவசங்கள் கிடைத்தால் போதும். பணத்தைத் தூக்கி எறிந்து இவர்கள் ஓட்டுகளை வாங்கிவிடலாம்’ என்றெல்லாம் ஏற்கெனவே நிறைய பேச்சுகள் அடிபட, தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு ரொம்பவே ரோஷம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. இப்படி ஒரு தவறான எண்ணத்தைப் பொய்யாக்கியே தீர வேண்டும் என்று ஒவ்வொருவரும் முடிவு கட்டி, காலையில் இருந்தே விடுவிடுவென்று வாக்குச்சாவடியை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்கள்!

அ.ஞானசம்பந்தன், விருதுநகர்.

ஹாய் மதன் கேள்வி - பதில்

மீண்டும் (ஒருவேளை!) தி.மு.க. அடுத்த தேர்தலில் ஜெயித்தால், அவர்கள் கட்டிய சட்டசபைக்குத் திரும்பிவிடுவார்கள்தானே? இது என்ன விளையாட்டு?

பணக்கார வீட்டுக் குழந்தைக்கு பெற்றோர்

ஹாய் மதன் கேள்வி - பதில்

4,000-த்தில் விளையாட்டுப் பொம்மை வாங்கிக் கொடுப்பார்கள். குழந்தை 10 நிமிடங்கள் விளையாடிவிட்டு அதைத் தூக்கிப் போட்டுவிட்டு,

ஹாய் மதன் கேள்வி - பதில்

5,000 விலையில் வேறொரு பொம்மை கேட்டு அடம்பிடிக்கும். வாங்கிக் கொடுப்பார்கள். செல்லம்!

இந்தப் பணத்தில் ஒரு ஏழைக் குடும்பம் இரண்டு மாசம் குடும்பம் நடத்த முடியும். அதுபோல இதுவும் ஒரு விளையாட்டு நம்ம பணத்தில்! எதிர்காலத்தில் ஒவ்வொரு கட்சியும் ஒரு சட்டசபை கட்டிக்கொள்ளும்! கோட்டைதான் ஜெ-வுக்கு லக்கி என்கிறார்கள். அங்கே அவர் ஆட்சி நடத்தியபோது தோற்றது இல்லையா? வேண்டுமானால், தன் விருப்பப்படி புதிய சட்டசபைக் கட்டடத்தில் (வாஸ்து போன்ற பல விஷயங்களை மனதில் கொண்டு) மாற்றங்கள் ஏற்படுத்தி இருக்கலாமே! எல்லா கட்சித் தலைவர்களும் ஒன்று கூடி (Conensus) முடிவு எடுக்காமல், தன்னிச்சையாக அரசுக் கட்டடங்களைக் கட்டுவதும் தவறு! மொத்தத்தில், மக்கள் வரிப்பணம்

ஹாய் மதன் கேள்வி - பதில்

1,200 கோடி அம்பேல்?!

வி.ரமேஷ்குமார், சென்னை-17.

எடுத்தவுடனேயே இலவசங்கள் வழங்குவதன் மூலம், ஜெயலலிதா ஆட்சியை ஆரம்பித்து வைத்திருக்கிறாரே... அப்படி என்றால், தமிழ்நாட்டில் 'இலவச அரசியல்’ போகவே போகாதா?

அரிசி என்பது மங்களகரமானது, புனிதமானது. தானங்களில் அன்ன தானம் உச்ச கட்டமானது. அடுத்ததாக, மாங்கல்ய தானம்! ஆகவே, மிகவும் விசேஷமாகக் கருதப்படும் அரிசி மற்றும் தாலியில் இருந்து ஜெயலலிதா ஆட்சியைத் துவக்கி இருக்கிறார். சென்டி மென்ட்!

கூடவே, இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றப்போவதாகவும் ஜெ. அறிவித்து இருக்கிறார். 'இனி, எதையுமே இலவசமாகத் தர மாட்டோம்’ என்று எப்போது அதிகாரபூர்வமாக அரசு அறிவிக்கிறதோ, அப்போதுதான் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு முன்னேறிவிட்டது என்று நான் ஒப்புக்கொள்வதாக இருக்கிறேன்!

எஸ்.எஸ்.பிரியதர்ஷிணி, பெங்களூரு-5.

ஆமை, தனது கனமான ஓட்டை கூடவே தூக்கிச் செல்ல வேண்டியிருப்பதால்தான் அவ்வளவு மெதுவாக நடக்கிறதா?

அப்படி எல்லாம் இல்லை. யானைக்கு, தான் கனமாக இருக்கும் உணர்வு இருக்கிறதா என்ன? நீர்யானை, காண்டாமிருகம்கூட மெள்ளத்தான் நடந்துபோகின்றன. தேவை ஏற்படாதபோது சக்தியைச் சேமித்து வைத்துக்கொள்ள என்பதுதான் காரணம். ஆமைகள் பற்றிய ஓர் ஆச்சர்யமான (வேறு) தகவல் - அதற்கு இரண்டு 'மூக்குகள்’ உண்டு. ஒன்று, முகத்தில் உள்ள மூக்கு. இரண்டாவது மலத் துவாரம்! நம்பர் டூ போகாத சமயங்களில், மலத் துவாரத்தின் மூலமாகவும் மூச்சை இழுத்துவிட்டு ஆமை

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளும்! மனிதர்கள் அவ்வப்போது 'மூச்சை’  சத்தமாக வெளிவிடுவதற்கு மட்டும் அந்த இரண்டாவதைப் பயன் படுத்துகிறார்கள்!

கு.தம்பித்துரை, மதுரை.

நம் உடலிலேயே வெகுவேகமாக இயங்குகிற தசை (Muscle) 'அங்கே’ இருப்பதுதானே? (என் நண்பன் 'அதுதான்’ என்று பெருமையுடன் சொல்கிறான்!)

இல்லை! கண்ணில் இருக்கும் தசை. 1/100 விநாடியில் அதனால் இயங்க முடியும். ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் முதலில் சிலர் கண்ணடித்து 'செக்’பண்ணிக் கொள்வது அதைத்தான்!