மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 34

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலிஓவியங்கள் : மணி, தமிழ்

ஓர் உள்ளுணர்வு!

##~##

துக்கடாக்கள் போல் -
துண்டு துண்டாகச் -
சிற்சில
சிந்தனைகள்...

முப்பதாண்டுகளுக்கு
முன்பு தொடங்கி -
முந்தாநாள்
முடிய!

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 34

ணவன் வரக் கண்டு -
கவறாட்டத்தை விட்டெழுந்த -
பானுமதியின் மேகலையைப்
பற்றிக் கர்ணன் இழுக்கையில்...

தரையில் சிதறிய
தரளங்களை -
'எடுக்கவோ? கோக்கவோ?’
என்றானே துரியோதனன்...
அதுபோல -

அங்கொன்றும் இங்கொன்றுமாய்   இறைந்துகிடக்கும் நிகழ்வுகளை - ஓர் இழைகொண்டு கோத்துச் சொல்கிறேன்;

இருப்பினும் இவற்றுள் -

ஒரு 'COGENCY OF THOUGT’ உள்ளதை ஓரலாம் நீங்கள்!

'நான் ஆணையிட்டால்...’;
'நினைத்ததை நடத்தியே -
முடிப்பவன் நான்! நான்! நான்!’;

'நான் செத்துப் பிழைச்சவன்டா...’;

'மூன்றெழுத்தில் - என்
மூச்சிருக்கும்...’;

- இப்படி எத்துணையோ படப் பாடல்கள்

எம்.ஜி.ஆரின் தனித்தன்மையை எடுத்துச் சொல்வதாக, நான் எழுதியிருக்கிறேன்.

ஒரு பாட்டுக் கூட - இப்படி தன்னைப் பற்றி எழுதப்பட வேண்டுமென்று -

எம்.ஜி.ஆர். என்னைக் கேட்டுக் கொண்டதில்லை; இது இறைவன் அறிய -

அந்த 'வடிவேல்’ அறிய சத்தியம்!

நானாக - எம்.ஜி.ஆருக்கு மக்கள் நடுவே இருக்கும் - CHARISMA வைக் கருதி, இந்தப் பாடல்களைப் புனைந்தேன் -

அவருடைய தனித் தன்மையைச் சுட்டுவதோடு -

எழுத்தில், என் தனித் தன்மையையும் இது சுட்டும் என்பதால்தான்!

ன்னணம் இருக்குங்கால் - ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னை அழைத்து -

சில கருத்துக்களைச் சொல்லி - அவை சமூகம், அரசியல் சார்ந்தவை -

என்னை எழுதித் தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

அந்தப் பாட்டுதான் -

'நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று; அதை
நானுனக்குச் சொல்லட்டுமா இன்று;
நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை; இது -
அறிஞர் அண்ணா எழுதிவைத்த ஓலை!’

- இது 'நேற்று இன்று நாளை’ படத்தில் வருகின்ற பாட்டு.

படத்தில் இந்தப் பாடலைப் பாடுமுன், கதாநாயகன் - அதாவது எம்.ஜி.ஆர்.

- 'இயற்றியவர் வாலி’ என்று என் பெயரைச் சொல்லிவிட்டுப் பாடுவார்!

மேற்கண்ட பாடலைக் குறிப்பிட்டு, 'அண்ணே! இது மாதிரி என் படத்துல ஒரு பாட்டு நீங்க எழுதித் தரணும்!’ என்று -

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 34

ஒரு படவுலகப் பிரமுகர் கேட்டார்;

எழுதிக் கொடுத்தேன்.

அந்தப் படத்தின் கதாநாயகனும் அவரே; இயக்குநரும் அவரே!

அவர் எனது நெடுநாளைய நண்பர்;

முதன்முதலில் அவரை நான் சந்திக்க நேர்ந்தது -

அவர் நடித்த ஒரு படத்தின் -PREVIEW SHOW-வில்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு -

ஓர் அதிகாலையில் ஒரு PHONE!

'வாலி சார்! நான் ஒரு படம் பண்ணியிருக்கேன்; உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். நெய்தல் நிலத் துல நடக்கிற கதை.

BACKWATER தான், மொத்தப் படத்தோட BACKDROP!

கலாசாகரம் ராஜகோபால்தான் ART DIRECTOR; N.பாலகிருஷ்ணன் கேமரா; சலீல் சவுத்ரிதான் மியூஸிக்!

AVM-AC தியேட்டர்ல, இன்னிக்கு ஈவினிங் SHOW போடறேன்; SELECTED AUDIENCE!

நீங்க வந்தீங்கன்னா - எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கும்!’

- இவ்வாறு அன்போடு தொலைபேசியில் என்னை அழைத்தவர் -

படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான திரு. கே.விஜயன்.

நானும் விஜயனும் ஒரே ஊர்க்காரர்கள்; திருச்சி.

முப்பது ஆண்டுகளுக்கு முன் - நான் பார்த்த அந்தப் படம் -

இன்னும் என்னுள் வேர்பரப்பி நிற்கிறது!

மொத்தப் படம் - A FEAST FOR THE EYES!

உரையாடல்களும், கதைப் போக்கும் சிவப்புச் சிந்தனையோடு 'மனிதம்’ பேசின;

யாங்கணும், யதார்த்தமோ யதார்த்தம்!

கதாநாயகனும் கதாநாயகியும் புதுமுகங் களாக இருந்த காரணத்தால் -

பல படங்களில் தழுவியும் நழுவியும் குளிர் விட்டுப் போகாமல் -

கூந்தல் முதல் குதிகால்வரை கூச்சம் கோலோச்ச நின்றது -

பலகணி வழியே பக்கத்து வீட்டுச் சிறிசுகளின் சீண்டல்களையும், சிணுங்கல்களையும் பார்ப்பதுபோல் -

காதல் காட்சிகளில், CALF - LOVE எனும் நெறிசாரா வெறியைக் காட்டியது!

டச் சுருளில் ஒரு பாரகாவியம் எழுதிஇருக்கிறீர்’ என்று விஜயனைப் பாராட்டி விட்டு -

'யாரு இந்தப் புது ஹீரோ?’ என்று வினவினேன்.

'மதுரைக்காரப் பையன்’ என்றார் விஜயன்.

'அதான் - தமிழ் உச்சரிப்பு, தேங்கா உடைச்ச மாதிரி இருக்கு’ என்று நான் சிலாகிக்க -

அந்த இளைஞரை எனக்கு விஜயன் அறிமுகப்படுத்தி வைத்தார்.

நாவற்பழ நிறம்; ஆனால், கண்ணில் ஒரு வகைக் கனல், கனன்று கொண்டிருந்தது!

நான், கார் ஏறும்போது விஜயனை அருகழைத்துச் சொன்னேன்;

'இந்த ஆள் ஒரு பெரிய ரவுண்ட் வருவான்!’

I AM NOT A PROPHET! நான் ஒரு ஜோதிடன் அல்ல.

ஆனால் - எனக்குள் ஓர் 'INTUITION’ அந்தப் புதுமுக நடிகன் - திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொள்வான் என்று!

என் படத்தில் பணியாற்றியபோது - 1976-ல் - நான் பாரதிராஜாவிடம் சொன்னேன் -

'இவன் - இருபதாண்டு காலம் தன் இசையால் திரையுலகை ஆள்வான்!’ என்று-

திரு.இளையராஜாவைப் பற்றி!

நான் பார்த்த கே.விஜயனின் படம் - 'தூரத்து இடி முழக்கம்’; அதன் கதாநாயகனான புதுமுகத்தைத்தான் - 'இந்த ஆள், பெரிய ரவுண்ட் வருவான்!’ என்று, ஊகித்து உரைத்தேன்.

அந்தப் புதுமுகம்தான்

திரு.விஜயகாந்த்!

திரு.விஜயகாந்த்தான் - தன் படம் 'விருதகிரி’க்காக -

எம்.ஜி.ஆர். பாட்டுபோல் - அதாவது, 'நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று? என்கிற மாதிரி, வேண்டுமென்று என்னைக் கேட்டது!

என் இனிய இளவல் - திரு.சுந்தர் சி. பாபு இசையமைத்து, ஷங்கர் மகாதேவன் பாடிய அந்தப் பாடல், கீழ்க்கண்டவாறு தொடங்கும்.

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 34

'மக்கள் ஒரு புறம்;
தெய்வம் ஒரு புறம்;
பக்கம் துணையென
நிற்கும் இருபுறம்;
எட்டுத் திசைகளும்
தொட்டுத் தகர்த்திடக் கேட்கும் நம் முரசு;
கோடிக் கரங்களும்
நீரை விட்டன;
கொள்கை விதைகளும்
வேரை விட்டன;
நாளைத் தாய்க்குலம்
நம்மை வாழ்த்திடப் பூக்கும் நல் அரசு!’  

- எம்.ஜி.ஆருக்கு எப்படி எழுதுவேனோ, அப்படி விஜயகாந்துக்கு எழுதிக் கொடுத்தேன்.

ஏனெனில் - என்னளவில், நான் விஜயகாந்தை 'கறுப்பு எம்.ஜி.ஆர்.’ என்று விளிப்பதில் CONVINCE ஆகியிருந்தேன் -

வருஷா வருஷம் - தன் பிறந்த நாளில் திரு.விஜயகாந்த், ஏழை எளியவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வந்ததால்!

ஆறு ஆண்டுகளுக்கு முன்பே - விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றிக் 'குமுதம்’ ஏட்டில் - கீழ்க்கண்டவாறு ஒரு கவிதை எழுதியிருந்தேன்.

'களம் புகுந்த -
கறுப்பு நிலா...
ஏழை எளியோர் -
வாழ்வில்
வெளிச்சம் வழங்கவல்ல...

ராத்திரி நேரத்து அகலா?
ராமாவரத்து நகலா?’

- இந்த வினாவிற்கான விடையை இப்போது சொல்கிறேன்.

'இது
அகல் அல்ல;
நகல் அல்ல;
பாதம் முளைத்து வந்த
பகல்!

I AM NOT A PROPHET! நான் ஒரு ஜோதிடன் அல்ல.

எனக்குள் ஓர் 'INTUITION’.

- சுழலும்...