FA பக்கங்கள்
Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !
##~##

உலக அளவில் புகழ்பெற்றது, 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ் பிரைம் பீஸ்ட் ஹன்ட்டர்ஸ்’ (Transformers Prime Beast Hunters)என்ற தொடர். 'ஆட்டோபோட்’ என்ற நல்ல சக்தி ரோபோட்களுக்கும், 'டிசப்ஷன்’ என்ற தீய சக்தி ரோபோட்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம். நிமிடத்துக்கு நிமிடம் சாகசம், அத்தியாயத்துக்கு அத்தியாயம் திருப்பங்கள்கொண்டது இந்தத் தொடர்.

உலகச் சுட்டிகளைக் கவர்ந்த இந்தச் சாகசக்காரர்கள், இந்தியக் குழந்தைகளை மகிழ்விக்க வந்திருக்கிறார்கள். ஆம்... இந்தத் தொடர், அக்டோபர் 13 முதல் தினமும் மாலை 6 மணிக்கு டிஸ்கவரி கிட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகிறது.

'சைபர்ட்ரான்’ என்ற கிரகத்திலிருந்து தனது படையுடன் பூமிக்கு வருகிறான், ஆட்டோபோட்களின் தலைவன் ஆப்டிமஸ். இவர்கள், டிசப்ஷன்களை எதிர்த்துப் போரிட்டு, பூமிக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்கப்போகிறார்கள்.

பென் டிரைவ் !

தீப்பொறி பறக்கும் சாகசங்களைப் பார்த்து ரசிக்க, சுட்டிகள் தயாராகலாம்!  

ஐ.நா. சபை வழங்கும் சுற்றுச்சூழலுக்கான மிக உயரிய விருது,  'சாம்பியன் ஆஃப் தி எர்த்’   விருது, தமிழரான வீரபத்ரன் ராமநாதனுக்குக் கிடைத்துள்ளது. புவி, வெப்பம் அடைதலைக் கட்டுப்படுத்த அவர் பரிந்துரைத்த மாற்று வழிகளுக்காகவே இந்த விருது.

மதுரையில் பிறந்த ராமநாதன், அமெரிக்காவில் ஆய்வு செய்யப்போனார். அதுவரை, 'புவி வெப்பமயமாதல் என்பது கரியமில வாயுக்களால்தான்’ என்ற எண்ணம் இருந்தது. இவரின் ஆய்வுகள், 'புவி வெப்பமடைதலில் க்ளோரோ ஃப்ளோரோ கார்பன்களுக்குப் பங்கு உண்டு’ என்கிறது.

பென் டிரைவ் !

புவி வெப்பமாவதால் பருவகாலங்களில் பெரிய மாறுபாடுகள் உண்டாகின்றன. அதில் முக்கியப் பங்காற்றும் மீத்தேன், 'கறுப்பு கார்பன்’ எனப்படும் முழுவதும் எரியாத கரிமப்பொருட்களில் இருந்து வெளியாகும் கார்பன் ஆகியவையே, 40 சதவிகித உலக வெப்பமடைதலுக்குக் காரணம். இவை, 10 வருடங்கள் வரையே செயல்பாட்டில் இருக்கும்.

அதனால், 'குறைந்தகால வெப்பமடைதலை உண்டாக்கும் காரணிகள்’ என இவற்றைச் சொல்கிறார்கள். இவற்றால் ப்ரவுன் மேகங்கள் உருவாகி, பனிப்பாறைகளை உருகவைத்து, சேதத்தை உண்டாக்குகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பெரிய அளவில் பூமி சூடாவதைக் குறைக்கலாம் என்பது ராமநாதனின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

பென் டிரைவ் !

வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்தவர், ஜெஃப் ப்லோக் (Jeff Bloch). காவல் துறையில் பணியாற்றும் இவர், டயோட்டா காரையும் பழைய செஸ்னா 310 விமானத்தையும் இணைத்து, விமான வடிவில் ஒரு காரைத் தயாரித்துள்ளார். 27 அடி நீளம்கொண்ட இந்த விமானக் கார், வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு கார் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளது. ''இதில் பல்வேறு ரக கார்கள் கலந்துகொண்டாலும், எல்லோருடைய கண்களும் எனது விமானக் காரின் மீதுதான் இருந்தன'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஜெஃப் ப்லோக்.

பென் டிரைவ் !

ஓசோன் மண்டலத்தைப் பாதுகாக்கவும் சுற்றுச்சூழல்குறித்த அக்கறையை உணர்த்தவும் ஆண்டுதோறும் செப்டம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் 'சர்வதேச ஓசோன் தினம்’ அனுசரிக்கப்படுகிறது.  கிராமத்துப் பள்ளி மாணவர்களும் இதுகுறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, தருமபுரி மாவட்டம், பள்ளப்பட்டி பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சுற்றுச்சூழல் பற்றி பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஒரு பகுதியாக, மாணவர்கள் அனைவரும் ஓசோன் குறியீடுபோல அணிவகுத்து அமர்ந்து, அனைவரையும் கவர்ந்தனர்.