FA பக்கங்கள்
Published:Updated:

துளித் துளியாய்

துளித் துளியாய்

##~##

'கூட்டு வட்டி’ என்பது உலகின் எட்டாவது அதிசயம். இது எப்படி சிறு தொகையைப் பெரியத் தொகையாக மாற்றுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஓர் எளிய உதாரணம்...

இரண்டு நண்பர்கள் கோல்ஃப் விளையாடச் சென்றார்கள். பந்தை ஸ்டிக்கால் லாவகமாகத் தள்ளி ஒவ்வொரு குழியிலும் போட வேண்டும்.

'எல்லாக் குழிகளிலும் பந்தை சரியாகப் போடுகிறேன். என்ன பெட்?'' என்றான் ஒருவன். 'முதல் குழியில் சரியாக போட்டால், பத்து பைசா பெட். அடுத்தடுத்து சரியாக போட்டால் அதை அப்படியே இரட்டிப்பாக்குகிறேன்' என்றான் நண்பன்.

ஆட்டம் தொடங்கியது. கோல்ஃபில் மொத்தமே 18 குழிகள்தான். 10 பைசா பெட் வைத்தால், என்ன பெரிசாக கிடைக்கும்? நீங்களே பாருங்கள்...

துளித் துளியாய்

ஒன்பதாவது குழியில்

துளித் துளியாய்

25.60 வந்துவிட்டது! இப்போதே பாதி ஆட்டம் முடிந்துவிட்டது. இன்னும் மீதி ஆட்டத்தில் என்ன தொகை வரும்? கணக்குப் போட்டுப் பார்ப்போமா?

 பார்த்தீர்களா... 18-வது குழியில்

துளித் துளியாய்

13,107.20 சேர்ந்துவிட்டது. 10 பைசா பெட் இவ்வளவு பெரிதாக மாறும். அதுதான் கூட்டு வட்டியின் சக்தி.

துளித் துளியாய்

இதில் நீங்கள் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், 10 பைசா கொஞ்ச காலத்துக்கு பெரிதாக வளரவே இல்லை. 9-வது குழியில் வெறும்

துளித் துளியாய்

25.60 என்றுதான் இருந்தது. 15-ம் குழிக்குப் பிறகுதான் வளர்ச்சி கூடி, 18-ல் பெரிதாகி இருக்கிறது.

இதில் நாம் அறிந்துகொள்ளவேண்டிய உண்மை, சேமிப்பில் போட்ட காசு நீண்ட நாட்களுக்கு‌ அதிகம் வளராத மாதிரியே இருக்கும். குறிப்பிட்ட ஒரு காலம் வந்த பிறகுதான் இரட்டிப்பாகும். இதை 'க்ரிட்டிகக்ல் பாயின்ட்’ என்பார்கள். அந்த க்ரிட்டிக்கல் பாயின்டுக்குப் பிறகு ஆண்டுகள் ஏற ஏற பணம் பெருகும்.

இங்கே உள்ள வரைபடமும் அந்த வளர்ச்சியைத்தான் காண்பிக்கிறது. இதுதான் கூட்டு வட்டியின் மகத்துவம்!

கூட்டு வட்டியை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள  செய்யவேண்டியது என்ன?

துளித் துளியாய்

சின்ன வயதில் இருந்தே சேமியுங்கள்!  

'இது என்ஜாய் பண்ண வேண்டிய வயது. இப்போதே என்ன அவசரம்?’ என்று இருக்க வேண்டாம். நீங்கள் 15 வயதில் போட்டுவைக்கத் தொடங்கும் சிறுதொகை, 20 வருடங்களில் (உங்களுக்கு 35 வயது ஆகும்போது), பெரிய தொகையாக மாறி மிகவும் உதவியாக இருக்கும்.   ஆகவே, சேமிப்பைத் தள்ளிப்போடாதீர்கள். எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் இன்றே  சேமியுங்கள்.    

துளித் துளியாய்

வட்டி விகிதம்!

எங்கே வட்டி அதிகம் கொடுக்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு சேமிப்புக் கணக்கைத் தொடங்குங்கள். மிகச் சிறிய சதவிகித வட்டியும் உங்கள் தொகையை மிகப் பெரிய அளவில் வளர்க்கும்.

சேமிப்பைத் தொடாதீர்கள்!

இடையிடையில் எடுத்து செலவு செய்துவிட்டு மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து சேமிப்பதால் பயன் இல்லை. ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமாவது நீண்ட காலமாகத் தொடாமல் வைத்திருங்கள்.

உங்கள் பணம் எப்போது இரட்டிப்பு ஆகும்?

வங்கியில் நீங்கள் போட்ட 500 ரூபாய், எப்போது இரட்டிப்பு ஆகும் என்று தெரிந்துகொள்வோமா?

72 என்பது ஒரு லாஜிக் எண். 72-ஐ வட்டி விகிதத்தால் வகுத்தால்,  எத்தனை வருடங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும் என்பது தெரிந்துவிடும்.  உதாரணத்துக்கு, வங்கியில் 8 சதவிகிதம் வட்டி தருகிறார்கள் என்றால்,     72/8 = 9. அதாவது, ஒன்பது வருடங்களில் உங்கள் பணம் 1000 ரூபாய் ஆகிவிடும்.

உங்கள் பணம் ஆறு வருடங்களில் இரட்டிப்பு ஆக வேண்டும் என்று நினைத்தால், 12% வட்டி வேண்டும். இது எங்கே கிடைக்கும் என்று பாருங்கள். இப்படி பலமுறை கணக்குபோட்டுப் பார்த்து, யார் யார் எவ்வளவு வட்டி கொடுக்கிறார்கள் என்று உற்றுநோக்கி, அதில் நம்பகமான திட்டம் எது என்று கவனித்து சேமியுங்கள்.

வருங்காலத்தை சந்தோஷமாக மாற்றிக்கொள்ளுங்கள்.