Published:Updated:

’பரிசுத்தொகை வர்ல!’ - சண்டை பிடிக்கும் சாக்‌ஷி.. மல்லுக்கட்டும் மந்திரி! #RioOlympic

’பரிசுத்தொகை வர்ல!’ - சண்டை பிடிக்கும் சாக்‌ஷி.. மல்லுக்கட்டும் மந்திரி! #RioOlympic

’பரிசுத்தொகை வர்ல!’ - சண்டை பிடிக்கும் சாக்‌ஷி.. மல்லுக்கட்டும் மந்திரி! #RioOlympic

Published:Updated:

’பரிசுத்தொகை வர்ல!’ - சண்டை பிடிக்கும் சாக்‌ஷி.. மல்லுக்கட்டும் மந்திரி! #RioOlympic

’பரிசுத்தொகை வர்ல!’ - சண்டை பிடிக்கும் சாக்‌ஷி.. மல்லுக்கட்டும் மந்திரி! #RioOlympic

’பரிசுத்தொகை வர்ல!’ - சண்டை பிடிக்கும் சாக்‌ஷி.. மல்லுக்கட்டும் மந்திரி! #RioOlympic

‘சந்தோஷத்தில் இருக்கும்போது வாக்குறுதிகள் கொடுத்தால், அதைக் காப்பாற்றுவது ரொம்பக் கஷ்டம்’ என்பார்கள். ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வாங்கிய சாக்‌ஷி மலிக் விஷயத்தில், இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மல்யுத்தப் பிரிவில் இந்தியா சார்பில் சாக்‌ஷி வெண்கலம் வாங்கியபோது, துள்ளிக் குதித்தது இந்தியா. ஏகப்பட்ட பரிசுகளும் வாக்குறுதிகளும் சாக்‌ஷியை நோக்கிப் பறந்தன. குட்டிக் குட்டி நிறுவனங்கள்கூட தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வண்ணம், சாக்‌ஷிக்குப் பரிசுகளை வாரி இறைத்தன. இதில் மஹிந்திரா ஜீப், பிஎம்டபிள்யூ என்று கார்களும் அடங்கும். (‘எங்க ஊருக்கு அது சரிப்பட்டு வராது... அதுக்குப் பதிலா பணத்தைக் குடுத்துடுங்க’ என்று பிஎம்டபிள்யூவை வேண்டாம் என்று தீபா கர்மாகர் சொன்னது தனிக் கதை.)

வால்களே ஆட, தலை சும்மா இருக்குமா? ‘பொறந்த ஊருக்குப் பெருமை தேடித் தந்துவிட்டார் சாக்‌ஷி மலிக்’ என்று ஹரியானா அரசாங்கம், அவருக்கு 3.5 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்தது. இது தவிர, சாக்‌ஷியின் ட்ரெய்னருக்கு மத்திய அரசைச் சேர்ந்த உயரிய விருது ஒன்றும் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. போனஸாக, ரோஹ்தக்கில் உள்ள மஹரிஷி தயானந்த பல்கலைக் கழகத்தில் ஸ்போர்ட்ஸ் டைரக்டர் என்ற பதவியுடன் பணி வழங்கி கௌரவிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் வெண்கலம் வாங்கி ஆறு மாதங்கள் முடியப் போகின்றன. மற்ற பரிசுகள் அனைத்தும் சாக்‌ஷிக்கு வந்துவிட்டன; மத்திய அரசின் வாக்குறுதியைத் தவிர! ‘‘ஏதோ பரிசுத் தொகைன்னு சொன்னீங்களே.. என்னாச்சு?’’ என்கிற தொனியில் ஹரியானா அரசாங்கத்துக்கு ட்வீட்களாகத் தெளித்துக் கொண்டிருக்கிறார் சாக்‌ஷி. ‘‘எல்லாமே சும்மா விளம்பரத்துக்குத்தானா?’’ என்று மனவருத்தத்தோடும், ‘‘தேங்க்ஸ் டு ஹரியானா கவர்ன்மென்ட்’’ என்று காமெடியாகவும் ட்வீட் செய்து தனது காட்டத்தைத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டார் சாக்‌ஷி. இந்த ட்வீட்டை ஹரியானாவின் முதல்வர் மனோகர் லால், விளையாட்டுத் துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோருக்கும் டேக் செய்ததுதான் ஹைலைட்!

இதற்குப் பதிலளிக்கும் விதமாக விளையாட்டுத் துறை அமைச்சர் அனில் விஜ், நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசினார். ‘இருந்தாலும் ஒரு ப்ரோன்ஸ் மெடலிஸ்ட்டை அமைச்சர் இப்படிப் பேசக்கூடாது’ என்றும்; ‘அமைச்சர் சொல்வது சரிதான்’ என்றும் ஹரியானாவில் சாக்‌ஷிக்கும் மந்திரிக்கும் - ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன. அப்படி என்ன சொன்னார் அமைச்சர்?

‘‘சாக்‌ஷி  பொய் சொல்கிறார். அவருக்கு ஏற்கெனவே 2.5 கோடிக்கான செக்கை, ஒலிம்பிக் முடிந்த அன்றே அவர் இந்தியாவில் இறங்கும்போதே ஒப்படைத்துவிட்டோம். அவர் அதைப் பற்றி வாயே திறக்கவில்லை. இது தவிர, மத்திய அரசின் பதவி நாங்கள் தருகிறோம் என்று சொன்னது உண்மைதான். அவர்தான் மஹரிஷி தயானந்த பல்கலைக் கழகத்தில், டைரக்டர் ஆஃப் ஸ்போர்ட்ஸ் பணிக்கு விருப்பப்பட்டு என்னிடம் தெரிவித்தார். இது மிகவும் உயரிய பணி. இதை சாக்‌ஷி  மலிக் போன்ற வீராங்கனைகளுக்குத் தருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அதற்கென்று ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. அதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகவே செய்யும். எங்கள் பக்கத்தில் இருந்து எல்லா அப்ரூவல்களும் முடிந்துவிட்டன. அவர் கேட்டபடியே டைரக்டர் ஆஃப் ஸ்போர்ட்ஸ் பதவி அவருக்குக் கிடைக்கும். அதற்குள் அவர் அவசரப்பட்டு அரசாங்கத்துக்கு எதிராக இப்படி ஒரு ட்வீட் செய்துள்ளார். சாக்‌ஷி மலிக் அப்படிப் பேசும் ஆள் கிடையாது. அவரை யாரோ தூண்டி விட்டுத்தான் அவர் இப்படிப் பேசியிருக்கிறார்!’’ என்று பேட்டி அளித்திருக்கிறார் அனில் விஜ்.

(Courtesy : ANI)

இது தவிர, ‘‘அவார்டு விஷயத்திலும் ரொம்ப ஆசைப்படுகிறார் சாக்‌ஷி மலிக். நாங்கள் ஏற்கெனவே சொன்னபடி, ஒரே ஒரு கோச்சுக்குத்தான் விருது தரப்படும். ஆனால், சாக்‌ஷி என்னிடம் பரிந்துரைத்திருப்பதோ 4 கோச்சுகள். அவரிடம் மறுபடியும் அந்த விதிமுறையைத் தெளிவாக எடுத்துச் சொல்லி, ஒரே ஒரு பெயரை மட்டும் கொடுங்கள் என்று சொல்லிவிட்டோம். அவர் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதற்கும் அரசாங்கம் பொறுப்பாக முடியாது! தேர்தல் அரசியலைவிட விளையாட்டு அரசியல் மிகவும் ஆழமானது. இதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று செம டென்ஷனாகப் பேசியிருக்கிறார் அனில் விஜ்.

'என்னம்மா இப்படிப் பண்றியேம்மா?' என்று சாக்‌ஷிக்கு எதிராகவும், 'என்னங்க சார் உங்க சட்டம்?' என்று அமைச்சருக்கு எதிராகவும் சோஷியல் மீடியாவில் கமென்ட்கள் பறந்து கொண்டிருக்கின்றன.

- தமிழ்