ஈஸியா செய்யலாம் யோகா !
##~## |
யோகா செய்யச் செய்ய உடம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். நமக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல் வெளியே வரும். இந்த இதழில் நாம் அறியப்போவது, தடாசனம் மற்றும் விரிக்சாசனம். சொல்லித்தருகிறார், விஜயா ராமச்சந்திரன்.
தடாசனம்
பாய் அல்லது கம்பள விரிப்பின் மீது கால்களை அரை அடி இடைவெளி விட்டு நிற்கவும்.
மெதுவாக குதிகால்களை உயர்த்தியபடி, கைகளை தலைக்கு மேல் உயர்த்திக் குவிக்கவும். முழங்கையை வளைக்கக் கூடாது.
10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்றுவிட்டு, பழைய நிலைக்கு வரவும்.
இப்படி ஆறு முறை செய்யவும். பிறகு, சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும்.
பலன்கள்: குதிகால் வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். கண்களுக்கு நல்லது. நினைவுத் திறன் அதிகரிக்கும். தொடர்ந்து செய்துவந்தால், உயரமாக வளரலாம்.

விரிக்சாசனம்
பாய் அல்லது கம்பள விரிப்பின் மீது நேராக நிற்கவும்.
வலது காலை மடித்து, உள்ளங்காலை இடது தொடை மீது மெதுவாக வைக்கவும்.
கைகளை பக்கவாட்டில் கொண்டுவந்து, தலைக்கு மேல் உயர்த்திக் குவிக்கவும். முழங்கையை வளைக்கக் கூடாது.
10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்றுவிட்டு, பழைய நிலைக்கு வரவும். பிறகு, இடது காலை மடித்து, உள்ளங்காலை வலது தொடை மீது வைத்து, 10 எண்ணும் வரை நிற்கவும். இப்படி ஆறு முறை செய்யவும்.
பலன்கள்: நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்புகளுக்குப் புத்துணர்வு கிடைக்கும்.
உமா ஷக்தி
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்