மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஓவியங்கள் : சேகர்

 ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

 200

வேண்டாமே... வலுக்கட்டாயம்!

ன் தோழி, தன்னுடைய 3 வயது குழந்தைக்கு குழம்பு சாதம் பிசைந்து ஊட்டிவிட்டிருக்கிறாள்.

அனுபவங்கள் பேசுகின்றன!

குழந்தை சாப்பிடாமல் அடம் பிடித்து அழுதிருக்கிறது. அவளோ... 'வர வர உன் அடம் தாங்கல’ என்று கடிந்துகொண்டு, வலுக்கட்டாயமாக குழந்தை வாயில் சாதத்தை திணித்திருக்கிறாள். அதுவும் அழுதுகொண்டும், பாதி துப்பியும், முழுங்கியும் சாப்பிட்டு முடித்திருக்கிறது. அழுதுகொண்டே தூங்கியும்விட்டதாம். அதன் பிறகு அவள் குழம்பு சாதம் பிசைந்து வாயில் வைத்தவுடன் தூக்கிவாரிப் போட்டிருக்கிறது. கண்களில் நீர் பெருகும் அளவுக்கு அவ்வளவு காரமாம்! உடனே குழந்தையிடம் ஓடியிருக்கிறாள். உதட்டை சுற்றி புண் ணாகியிருக்கிறது. அலறி அடித்துக்கொண்டு, குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் சென்றாள். அவரிடம் சரியான திட்டு!

குழந்தைக்கு எது ஊட்டு வதாக இருந்தாலும், முதலில் உப்பு, காரம் சரியாக இருக்கிறதா... நன்றாக வெந்திருக் கிறதா என நாம் வாயில் போட்டு ருசி பார்த்துவிட்டே ஊட்ட வேண்டும். பொருட்களின் காலாவதி தேதியைப் பார்ப்பதும் மிக முக்கியம். இல்லையெனில், அநாவசிய தொல்லைக்கு ஆளாக நேரிடும். கவனம்... தோழிகளே!

- எஸ்.சுதா, சென்னை-116

அனுபவங்கள் பேசுகின்றன!

மிச்சமானது மூன்று ரூபாய்... மோசம் போனது லட்ச ரூபாய்!

துரையில் இருக்கும் உற வினர் வீட்டுக்குச் செல்வதற்காக, இரவு பத்து மணிக்கு மேல் கரூரில் இருந்து கணவருடன் பேருந்தில் பயணம் செய்தேன். வழியில் சாலையோர ஓட்டல் முன்பு பேருந்து நின்றது. எங்கள் ஸீட் பக்கத்தில் அமர்ந்திருந்த நடுத்தர வயது பெண்மணி கழுத்து நிறைய நகை அணிந்திருந்தார். இயற்கை உபாதை கழிக்க மூன்று ரூபாய் கட்டணம் கொடுக்க மனமில்லாமல், இருட்டு பக்கமாகச் சென்றார். அங்கே பதுங்கியிருந்த திருடன் ஒருவன், கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் கழுத்தில் இருந்த நகையைத் திருடிக்கொண்டு ஓடிவிட்டான். பிறகென்ன... அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு அந்த பேருந்திலேயே அழைத்துச் செல்லப்பட்டவர், அங்கே ஒரு புகாரைக் கொடுத்துவிட்டு, அழுது புலம்பியபடியே பயணத்தைத் தொடர்ந்தார்.

உஷார் பெண்களே... உஷார்!

- ச.லட்சுமி, கரூர்

அனுபவங்கள் பேசுகின்றன!

'மால்’ நிர்வாகிகளே... எங்களையும் கவனிங்க!

மீபத்தில் சென்னையில் இருக்கும் ஒரு ஷாப்பிங் மாலுக்கு, மருமகளுடன் சென்றிருந்தேன். மளிகை, காய்கள், பழங்கள் எல்லாம் வாங்கி முடிக்க இரண்டு மணி நேரம் ஆனது. எஸ்கலேட்டரும், லிஃப்ட்டும் இருந்த அந்த வளாகத்தில், உட்கார ஒரு சேர் கூட இல்லை. கால்வலி தாங்க முடியாமல், 'இனி இந்தப் பக்கமே வரக்கூடாது’ என்று நொந்துகொள்ளும்படி ஆகிவிட்டது. என்னைப் போல் பலரும் பேசிக்கொண்டதை கவனிக்க நேர்ந்தது.

வெளிநாட்டில் உள்ள மால்களைப் பார்த்து நம் நாட்டிலும் 'மால்’கள் புற்றீசல்போல் பெருகிவிட்டன. ஆனால், மேலைநாடுகளில் வயதானவர்களுக்கு எத்தனை வசதிகள் செய்திருக்கிறார்கள்! நம் ஊரில் உள்ள வயதானவர்களுக்கும் மால்களைச் சுற்றிப் பார்க்க ஆசை இருக்கும்தானே. சற்று நேரம் கால்வலி தீர அமர்ந்து ரிலாக்ஸ் பண்ண சோபாக்கள், சேர்கள் இருந்தால் நன்றாக இருக்குமே! சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?

- இந்திராணி சென்னை-32

அனுபவங்கள் பேசுகின்றன!

நாய் வளர்க்கும் நல்லவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நாங்கள் அடுக்ககத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் மாலையில் நடை பயிற்சி செய்கிறோம். நிறைய பேர் தங்கள் நாய்களைப் பிடித்துக்கொண்டு, நடைபயிற்சி செய்கிறார்கள். சிலர் 2 நாய்களைப் பிடித்துக்கொண்டும் வருகிறார்கள். அந்த நாய்கள் வழி நெடுக அசிங்கம் செய்துவிடுகின்றன. காலில் செருப்பு இருந்தாலும், நாய்களின் அசிங்கத்தை சில சமயம் மிதித்து விடுவதால், வீட்டுக்கு வந்து செருப்பு, ஷூக்களை கழுவித்தான் வைக்கவேண்டி உள்ளது. நாய்களைப் பிடித்துக்கொண்டு வருபவர்கள், 4, 5 செய்தித்தாள் துண்டுகளை, கையில் மடித்துக் கொண்டு வந்தால், தங்கள் நாய் அசிங்கம் செய்தவுடன் அதை அவர்களாகவே எடுத்து, குப்பைத் தொட்டியில் போட்டுவிடலாம். இதனால் மற்றவர்களின் நடைபயிற்சி சங்கடமில்லாமல் இருக்கும். நோய் தொற்றுகளையும் தவிர்க்கலாம்.

நாய் வளர்க்கும் எல்லா சகோதர, சகோதரிகளையும் இதைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

- ஆர்.ராஜலக்ஷ்மி, வேளச்சேரி