என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

கொச்சினில் கார்த்திகா பிடித்த பூனை!

கொச்சினில் கார்த்திகா பிடித்த பூனை!

##~##

கோவைக்கும் கொச்சினுக்கும் நெருக்கம் அதிகம். கோவைவாசிகளுக்குக் கொஞ்சம் போரடித்தால் வண்டியை எடுத்துக்கொண்டு கொச்சினுக்குக் கிளம்பிவிடுவார்கள். கடந்த வாரம் கொச்சினில் 'கொச்சி இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக்’ ஃபேஷன் ஷோ என்றால் விடுவார்களா கோவை இளவட்டங்கள். நாமும்தான்!

ஷோவில் பாரம்பரிய ஆடைகளில் அழகு நடை நடந்து வந்தார்கள் நடிகைகள் கங்கனாவும் கார்த்திகாவும். இவர்களி டம் ஒரு மினி பேட்டி.

கொச்சினில் கார்த்திகா பிடித்த பூனை!

முதலில் கங்கனா...

'' 'தாம் தூம்’க்குப் பிறகு தமிழ்ப் படத்தில் தலைகாட்டலையே நீங்க?''

''எனக்கு பாலிவுட்லயே நிறைய கமிட்மென்ட்ஸ். ஜீவா மாதிரி நல்ல டைரக்டர் கிடைச்சா தமிழில் கால் ஷீட் கொடுக்க நான் ரெடி. கோலிவுட் இஸ் வெரி ஸ்பெஷல்!''

'' 'ரா 1’ படத்தில் ஷாரூக் உங்களுக்கு நல்ல ரோல் கொடுப்பார்னு எதிர்பார்த்து ஏமாந்தீங்களாமே?''

''நான் யாருக்காகவும் எதுக்காகவும் காத்திருக்க மாட்டேன்!''

''பொது இடங்களில் தம், ட்ரிங்ஸ்னு தடாலடி பண்றீங்க. பாலிவுட்ல உங்களை 'லேடி கேங்ஸ்டர்’னு தான் சொல்வாங்களாமே?''

''ஸோ வாட்? நான் ஒரு பெர்ஃபக்ஷனிஸ்ட். என் புரொஃபசஷனுக்குத் தேவையானதைச் செய்ய எப்பவும் ரெடி. என் புரொஃபஷன் சார்ந்து என்னை கரன்ட் லைஃப் ஸ்டைலுக்கு ஃபிட் செஞ்சுக்கிறதும் என் வேலைதான். அப்டேட் பண்ணிக்கலேன்னா காணாமப் போயிடுவோம் மேன்!''

''கங்கனாவின் ஃபேவரைட் காஸ்ட்யூம்?''

''ஜீன்ஸ், டி-ஷர்ட்லாம் கண்டுபிடிச்சதே எனக்காகத்தானு நினைக்கிற ஆள் நான். பாய் ஃப்ரெண்ட்கூட

கொச்சினில் கார்த்திகா பிடித்த பூனை!

இல்லாம இருப்பேன். ஆனா, இந்த ரெண்டும் இல்லாம என்னால இருக்க முடியாது!''

கார்த்திகாவிடம் 'ஹாய்’ சொன்னால், உடனே 'பை’ சொல்வதில் குறியாக இருந்தார்....

''ஷூட்டிங்கில் இருப்பீங்கனு பார்த்தா, இங்கே கேட் வாக்கிட்டு இருக்கீங்களே?''

'' 'கோ’னு ஒரு சூப்பர் ப்ளாக்பஸ்டர் படத்தில் நடிச்சுட்டு அடுத்து 'ஜஸ்ட் லைக் தட்’ படத்தில் நடிச்சுட முடியுமா? அதே மாதிரி மேஜிக் செய்யக் கூடிய டீமுக்காகக் காத்து இருக்கேன். அப்படி ஒரு படத்தில் நடித்தால்தான் உங்க ளுக்கும் சந்தோஷம் எனக்கும் சந்தோஷம். அதுவரை சும்மா பொழுதுபோக்க இந்த ஃபேஷன் வாக்!''

''மலையாளத்தில் பெரிய ஓப்பனிங் கிடைக்கலேனு வருத்தமா இருக்குதா?''

''இல்லை. கேரளாவில் எப்பவும் எனக்கான வரவேற்பு இருந்துட்டேதான் இருக்கு. நான் இந்தளவுக்கு வருவேனு அம்மா நினைக்கலை. ஆனா, நான் இன்னும் நிறையப் போகணும். ஓ.கே... இன்னொரு டைம் நிறையப் பேசலாம். ஹேப்பி ஓணம்!''

- எஸ்.ஷக்தி , படங்கள்: வி.ராஜேஷ்