Published:Updated:

ஈஸியா செய்யலாம் யோகா! - 13

பவன முக்தாசனம் 2

ஈஸியா செய்யலாம் யோகா! - 13

நண்பர்களே... யோகா பயிற்சிகளை வெறும் தரையில் செய்யக் கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும். அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும்போது, தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.

கடந்த இதழில், பவன முக்தாசனம் செய்யப் பயிற்சி பெற்றீர்கள். அந்த வகையைச் சேர்ந்ததுதான் இந்த ஆசனமும். பவன முக்தாசனத்தில், ஒவ்வொரு காலாக மடித்துச் செய்ததை, தற்போது இரண்டு கால்களையும் (ஒரே சமயத்தில்) மடித்துச் செய்வதுதான் பவன முக்தாசனம் - 2. இதை உங்களுக்குக் கற்றுத்தருகிறார், யோகாசன ஆசிரியை விஜயா ராமச்சந்திரன்.

செய்முறை: விரிப்பின் மீது நேராகப் படுத்து, இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து மடித்து, வயிற்றின் மீது வைக்கவும்.

கை விரல்களை ஒன்று சேர்த்து, முழங்கால்களை அழுத்தி, மெதுவாகத் தலையை உயர்த்தி, முட்டியைத் தொடவும்.

ஈஸியா செய்யலாம் யோகா! - 13

சாதாரண மூச்சில் 10 எண்ணிக்கை வரை அப்படியே இருக்கவும்.

இரண்டு அல்லது மூன்று முறை இந்த ஆசனத்தைச் செய்த பிறகு, கட்டாயம் சாந்தி ஆசனாவில் ஓய்வு எடுக்கவும்.

குறிப்பு: கழுத்தில் ஏதேனும் வலி இருந்தால், தலையை அதிக நேரம் உயர்த்தாமல், கால்களை மட்டும் அழுத்திப்பிடித்து, வயிற்றின் மேல் வைத்துச் செய்யலாம்.

பயன்கள்: பவன முக்தாசனம் 1-னின் பயன்கள்தான் என்றாலும், இந்த ஆசனம் செய்யும்போது, வாய்வுத் தொல்லை நீங்கும்.