என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

ஜில்லா விட்டு ஜில்லா வந்த...

ஜில்லா விட்டு ஜில்லா வந்த...

##~##

'எம் பேரு மீனா குமாரி... என் ஊரு கன்னியாகுமரி’ என்ற பாடலின் தாளங்களுக்கு ஏற்ப உடலை வளைத்து நெளித்து, சின்னப் புன்னகையுடன் அதிர அதிர ஆடிக்கொண்டு இருந்தார் 'மீனா குமாரி’!

 ஆனால், இந்தக் குமாரி 'மீனா குமாரி’ இல்லை... லம்யா. இவரின் ஊரும் 'கன்னியாகுமரி’ இல்லை, ஃபிரான்ஸ். குழப்பமாக இருக்கிறதா? அழகாக நம்மை குழம்பவைப்பவர்கள் ஃப்ரான்ஸைச் சேர்ந்த 'பாலி திவானி’ குழுவினர். சில மாதங்களுக்கு முன் புதுவை கடற்கரையில் சுற்றுலாத் துறை சார்பாக நடந்த 'சர்வ தேச கலை இரவு’ நிகழ்ச்சியில் 'ஜில்லாவிட்டு ஜில்லா வந்த’ பாடலுக்கு, சேலையைச் செருகிக் கட்டிக்கொண்டு ஆடிய ஆட்டத்தில், பலர் மனதையும் சேர்த்து சேலையின் கொசுவத்தில் சொருகிக்கொண்டார்கள்.

ஜில்லா விட்டு ஜில்லா வந்த...

''2005-ல் இந்த அமைப்பை நடனத்தின் மூலம் உடல் எடையைக் குறைக்கும் ஃபிட்னஸுக்கான அமைப்பாகத்தான் ஆரம்பித்தேன். பாலிவுட் படங்கள் மீது உள்ள காதல் காரண மாக 'பாலிவுட் திவானி’னு பேர்வெச்சேன்!'' என்கிறார் இந்த அமைப்பின் நிறுவனர் அலெக்ஸா.

ஜில்லா விட்டு ஜில்லா வந்த...

''80 பேருடன் தொடங்கிய இந்த அமைப்பில், இப்போது 600 உறுப்பினர்கள். அதில் 200 பேர் பாலிவுட் டான்ஸ் கற்றுக்கொள்கின்றனர். இதுவரை ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இந்தியாவில் 150-க்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை நடத்தி இருக் கோம். அதுபோக, பாலி திவானி மூலம் ஃப்ரான்ஸில் இருப்பவர்களுக்கு இந்திய வகை சமையல், மெகந்தி வரைவது, பாங்க்ரா நடனம் ஆகியவற்றையும் கற்றுக்கொடுக்கிறோம்.  ஃப்ரான்ஸில் இந்தியச் சாப்பாடு சாப்பிடணும்னா 200 கி.மீ. பயணிக்கணும். அந்த நிலைமையை மாத்தணும்னுதான் எங்க அமைப்பு செயல் படுது.  

ஜில்லா விட்டு ஜில்லா வந்த...

மத்த நாடுகளுக்குச் சென்று ஆடும்போது நாங்க நிறைய புது விஷயங்களைக் கத்துக்கிறோம். இப்போ புதுச்சேரிக்கு 12 பேர் வந்து இருக்கோம். பொதுவா எங்களை பாலிவுட் பாடல்கள்தான் ரொம்ப எமோட் பண்ணும். ஆனா, இப்போ கொஞ்ச நாளா கேட்டுக் கேட்டு கோலிவுட் பாடல்களும் பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. அதுவும் தமிழ் குத்துப் பாடல்களைக் கேட்கும்போது கால்கள் தன்னால ஆட ஆரம்பிச்சுருது!'' என்று 'விளையாடு மங்காத்தா’வுக்கு ஸ்டெப் போட ஆரம்பித்தார் அலெக்ஸா!

- நா.இள.அறவாழி