Published:Updated:

உயிர் மொழி - 19

உயிர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

உயிர் மொழி - 19

கைகள் இரண்டால்... என் கைகள் இரண்டால்...

ங்கள் பேராசிரியர் ஒருமுறை கலவியல் பாடம் நடத்தும்போது எங்களைக் கேட்டார்.'மனித உடலில் செக்ஸுக்கு

மிக அத்தியாவசியமான பாகம் எது?' நாங்கள் 'இதுவா, அதுவா?' என்று ஏதேதோ பதில் சொல்லிப் பார்த்தோம். எதுவுமே இல்லை. கடைசியில் பேராசிரியர், 'மனிதக் கலவிக்கு மிகவும் அத்தியாவசிய பாகம், அவர்களுடைய கை' என்றார்!

'கை'யா?! ஆச்சர்யமாக இருந்தாலும், உடனே எங்கள் மர மண்டைக்குள் பல்ப் எரிந்த எஃபெக்ட். 'அட! ஆமாம். 'தொட்டால் பூ மலரும்' என்று நம் ஊரில்தான் பாட்டே இருக்கிறதே! தொடுகை உணர்வு மட்டும் இல்லை என்றால், காமம் அதன் சுவாரஸ்யத்தை இழந்துவிடுமே. தொட்டு, தடவி, வருடி, கிள்ளி என்று நிறைய கைவேலைப்பாடுகள் இருப்பதால்தானே மனிதக் கலவி இவ்வளவு கிளு கிளுப்பாக இருக்கிறது?! மற்ற மிருகங் களுக்கு இந்தப் பிரச்னையே இல்லை. 'பெண்ணைப் பார்த்தோமா? போட்டியிட்டு, மற்ற ஆண்களை விரட்டிவிட்டு அவளை ஓரம் கட்டினோமா? பின்னால் சென்று மடக்கிப் பிடித்து, மரபணுக் களை முதலீடு செய்தோமா!' மேட்டர் ஓவர்! ஆனால், மனிதர்களுக்கு இந்த முறை சரிவரவில்லை. முதலில் மனிதப் பெண்ணைப் பின்னால் இருந்து பிடித்தெல்லாம் உறவுகொள்ளவே முடியாத நிலை. காரணம், இவள் மற்ற ஜீவ ராசிகளைப்போல நான்கு காலில் நடப்பது இல்லையே. இவள்தான் மிகப் புதுமையாக இரண்டு காலில் நிமிர்ந்து நடக்கிறாளே. 'நடந்தால் நடந்து விட்டுப் போகட்டும், அதற்கும் செக்ஸுக்கும் என்ன சம்பந்தம்?' என்றால், பிரச்னையே அதில்தான்!

உயிர் மொழி  - 19

நான்கு கால்களில் நடக்கும் விலங்குகளுக்கு கர்ப்பப் பை மல்லாந்த நிலையில் இருக்கும். அதனால், புவி ஈர்ப்பு சக்தியின் பாதிப்பு இருக்காது. இப்படிப் படிந்துகிடக்கும் கர்ப்பப் பையினுள் மரபணுக்களைச் செலுத்தினால், அப்படியே பத்திரமாக இருக்கும், வெளியேறாது. ஆனால், மனிதப் பெண்ணோ இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்கிறாள். இதனால் அவள் கர்ப்பப் பையும் புவி ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு செங்குத்தாகவே இருக்கிறது. இந்த நிலையில், பெண் உடலில் மரபணுக்களை முதலீடு செய்தால், அவை தங்காமல் வெளியேறிவிடும். அப்புறம் எப்படி இனம் விருத்தியாவது?

ஆனால், இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்பதால் மனித குலத்துக்கு ஏகப்பட்ட ஆதாயங்கள் இருந்தன. கைகளை வேறு வேலைகளுக்குப் பயன்படுத்த முடிந்தது. இதனால் மற்ற மிருகங்களைவிட மிக வேகமாக முன்னேற முடிந்தது. ஆனால், கலவியின்போது இப்படி இரண்டு காலில் நிற்பது அனுகூலமாக இல்லை. அந்தச் சமயத்துக்கு மட்டுமாவது பெண் தன் செங்குத்தான நிலையை விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது. அதுவும் விந்தணுக்கள் போய் கருமுட்டையோடு கூடும் அந்தப் பல நிமிடங்களுக்கு அவள் அப்படியே கிடந்தாக வேண்டும். 'அவ்வளவு நேரத்துக்கு எல்லாம் சும்மா படுத்துக்கிடக்க முடியாது... சுத்த போர்!' என்று பெண் முரண்டு பண்ணினால், மொத்த மரபணு ஆட்டமும் குளோஸ்! ஆக, பெண்ணை எப்படியாவது மதி மயக்கி சும்மாகிடக்கும் நேரத்தை சுவாரஸ்யமாக்கினால் ஒழிய, மனித மரபணுக்கள் பரவ வாய்ப்பு இல்லை.

மனித இனத்துக்கு மட்டும் இப்படி ஒரு விநோதத் தேவை இருந்ததால்தான், இயற்கை மனிதர்களுக்கு மட்டும் சில பிரத்தியேக மாற்றங்களைச் செய்துள்ளது. உதாரணத் துக்கு, உங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு மிருகத்தை எடுத்துக்கொள்ளுங்களேன். எலி, பூனை, நாய், சிங்கம், புலி என்று எந்த மிருகமாக இருந்தாலும், அவற்றின் தோலில் இருக்கும் ரோமம் இரண்டு பாலினத்துக்குமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆண் எலிக்கு எவ்வளவு தோல் ரோமமோ, அதே அளவுதான் பெண் எலிக்கும். ஆனால், மனிதர்களில் மட்டும் அப்படி இருப்பது இல்லை.

உயிர் மொழி  - 19

பருவம் அடைந்த பிறகு, மனித ஆணுக்கு பெண்ணைக் காட்டிலும் அதிக மான உடல் ரோமம் முளைத்துவிடுகிறது. ஆக, மனிதர்களைப் பொறுத்தவரையில், பெண்ணுக்கு உடம்பில் முடி மிகக் குறைவு. ஏன் இந்த வித்தியாசம்? நம் நெருங்கிய உறவுக்கார இனமான சிம்பன்சியில்கூட இந்த ரோம வித்தியாசம் கிடையாது. பெண், ஆண் இருவருக்குமே ஒரே மாதிரியான தோல்முடிதான். மனிதர்களில் மட்டும், அதிலும் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த வித்தியாசம்?

ரோமம் அடர்த்தியாக இருந்தால், தொடுதல் உணர்வைத் துல்லியமாகக் கிரகிக்க முடியாது. இதுவே ரோமம் குறைவாக இருந்தால், தொடுகை உணர்வு சுகமாகத் தோன்ற ஆரம்பிக்கும். ரோமம் குறைவான மனிதப் பெண்ணின் தோலைத் தொட்டுத் தடவி, வருடி, மென்மையாக உரசினால் போதும். அவளது நரம்புகளில் மின்சாரம் அதிகமாகப் பாய்ந்து, மூளை கிளர்ச்சிக்கு உள்ளாகும். அவள் மதி மயங்கி நீண்ட நேரத்துக்கு அரைத் தூக்கத்தில் படுத்தேகிடப்பாள். இந்த அவகாசத்துக்குள் அவளுக்குள் மரபணுக்களை முதலீடு செய்துவிட்டால், நிச்சயம் வம்சம் விருத்தியாகுமே!

ஆனால், இதிலும் ஒரு பிரச்னை. வெறுமனே பெண்ணின் உடல் ரோமங்களை நீக்கினால் மட்டும் போதாதே. அவள் தோலைப் பதமாகக் கையாளும் பக்குவம் ஆணுக்கும் இருந்தாக வேண்டும். இது ஒரு புதிய தேவையாக உருவாகிவிட, இதுவே கலவியல் தேர்வுக்கான ஒரு கோட்பாடாகவும் மாறியது.

உயிர் மொழி  - 19

தன்னை மென்மையாகத் தொட்டு, வருடி, களிப்புறச் செய்த ஆண்களையே பெண்கள் தேர்வு செய்ய ஆரம்பித்தார் கள். காட்டுமிராண்டி மாதிரி தன்னைக் கையாண்ட ஆண்களைப் பெண்கள் கழற்றிவிட ஆரம்பிக்க, கேட்க வேண்டுமா? கைப்பதம் இருந்த ஆண் களின் மரபணுக்கள் மட்டுமே பெரு வாரியாகப் பரவின!

இதனால், போகப்போக ஆண்களுக்கு கைகளின் லாகவம் அதிகரித்துக்கொண்டே போனது. இந்த லாகவம் எல்லாம் வெறுமனே பெண்களைத் தொட்டு ஸ்பரிசிப்பதற்காக மட்டும் இன்றி, மற்ற விஷயங்களுக்கும் பிரயோஜனப்பட்டதால், கல்லைத் தேய்த் துக் கருவிகளை உருவாக்க ஆரம்பித்தார்கள் மனிதர்கள். இந்த ஒரு சின்ன மாற்றம் மட்டுமே பெரிய பரிணாம வளர்ச்சியைத் தூண்டிவிட, அதுவரை, குரங்காக இருந்தவர்கள் மனிதர்களாக மாற ஆரம்பித்தார்கள். இந்த நிலை மனிதர்களை நாம் இன்றும், ஹோமோ ஹேபிலிஸ் Homo habilis(கைக்கார மனிதன்) என்றே அழைக்கிறோம். இந்தப் பரிணாம வளர்ச்சிக்குக் காரணமே மனிதப் பெண்ணின் கலவியல் தேர்வுதான் என்றால், அது இன்னும் ஆச்சர்யமாக இல்லை? அதுபற்றி...