பிரேமா படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்
நண்பர்களே... யோகா பயிற்சிகளை வெறும் தரையில் செய்யக் கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும். அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும்போது, தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.
கால் முட்டியைத் தலை தொடுவதால், இந்த ஆசனத்துக்கு இந்தப் பெயர். இதைச் செய்யும் முறையை உங்களுக்கு விளக்குகிறார், யோகா டீச்சர் விஜயா ராமச்சந்திரன்.

செய்முறை:
விரிப்பின் மீது கால்களை நீட்டி அமரவும்.
வலது காலை 'ட’ வடிவில் மடித்து, இடது தொடையை வலது உள்ளங்கால் தொடும்படி அமரவும்.
கைகளை பக்கவாட்டில் கொண்டுவந்து மேல் நோக்கி நீட்டவும்.
முன்னால் குனிந்து, இடது கால் விரல்களை கைகளால் தொடவும். இயல்பாக மூச்சு விட்டபடி, 10-15 எண்ணிக்கை அப்படியே இருக்கவும்.

றீபிறகு, விரல்களில் இருந்து கையை மெதுவாக எடுத்து, கைகளை மேல் நோக்கித் தூக்கி, பக்கவாட்டில் கீழே கொண்டுவந்து, மடி மீது வைத்து 2 நிமிடங்கள் ஓய்வு எடுக்கவும். பிறகு அடுத்த காலையும் இதே மாதிரி செய்யவும்.
நன்மைகள்:
கிட்னியைப் பலப்படுத்தும். ஆஸ்துமா குணமாகும். வயிற்று உப்புசம், சளி, காய்ச்சல் ஏற்பட்டால், இந்த ஆசனம் செய்வதால், உடனே குணமாகும்.
அதிக உடல் எடை குறையும். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு, அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட, இது ஒரு நல்ல ஆசனம்.