Published:Updated:

ஈஸியா செய்யலாம் யோகா! - 17

பிரேமா படங்கள் : ச.இரா.ஸ்ரீதர் மாடல்: நேயன்

மகரம் என்றால், முதலை. இந்த ஆசனத்தில் முதலை படுத்திருப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். மல்லாந்து படுத்து, சாந்தி ஆசனத்தில் ஓய்வு எடுப்பது போலவே, குப்புறப் படுத்து (வயிற்றுப் பகுதி தரையில் படும்படி) முதுகெலும்புக்கு ஓய்வு கொடுக்கும் முறை. இந்த ஆசனத்தின் செய்முறையை விளக்குகிறார், யோகா டீச்சர் விஜயா ராமச்சந்திரன்.

செய்முறை:

 சாந்தி ஆசனம் போல மல்லாந்து படுத்து,  மெதுவாகத் திரும்பி குப்புறப் படுக்கவும்.

 பாதங்கள் இரண்டையும் 'சார்லி சாப்ளின்’ நடப்பது போல, திருப்பிவைக்கவும்.

 இரு கைகளையும் மடக்கி, நெற்றியை கைகளின் மீது வைக்கவும், கால்களை அகலமாக விரித்துவைக்கவும்.

 சீரான மூச்சில் அப்படியே ஓய்வு எடுக்கவும்.

ஈஸியா செய்யலாம் யோகா! - 17

 முதுகுப் பகுதி முழுவதும் ரத்த ஓட்டம் ஏற்படுவதை உணரவும்.

 சில நிமிடங்கள் அப்படியே இருந்துவிட்டு, மல்லாந்து திரும்பி, எழுந்துகொள்ளவும்.

பலன்கள்:

அடி முதுகு வலி, கழுத்து வலிக்கு அற்புத நிவாரணம்.

நுரையீரல் பலம் பெறும்.

படபடப்பு, தூக்கமின்மை, இதய பலவீனம் சீராகும்.

கண் வலி மற்றும் கண் சார்ந்த பிரச்னைகள் தீரும்.