மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 19

நிப்பான் வேலைப்பாடு... நீட் வருமானம்! வே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம்.உசேன்

''பூச்சாடியில் நிப்பான் வேலைப்பாடு செய்றது ரொம்ப சுலபம். இதோ... இதைப் படிச்ச பின்னாடி நீங்களே செய்யப் போறீங்களே! பொழுதுபோக்குக்காக, வீட்டை அலங்கரிக்க, பரிசளிக்க, தொழிலா செய்யனு உங்க கை வேலைப்பாட்டு ஆர்வத்தை விருப்பத்துக்கேற்ப மடைமாற்றிக்கலாம்!'' என்றபடியே சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள 'ஸ்ரீ நியூ ஆர்ட்’ நிறுவன உரிமையாளர் அனிதா செந்தில்குமார், நிப்பான் வேலைப்பாட்டை கற்றுக் கொடுக்க ரெடி... நீங்களும் ரெடிதானே கற்றுக்கொள்ள!

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 19

தேவையான பொருட்கள்:

பூச்சாடி, ஷில்பக்கார் (கிராஃப்ட் கிளே), கண்ணாடி, கறுப்பு நிற பெயின்ட், பெயின்ட் பிரஷ், ஃபெவிக்கால், முக பவுடர்.

செய்முறை:

படம் 1: முதலில் பூச்சாடியை தண்ணீரில் நனைத்து, காயவைத்து, அதில் முழுக்க கறுப்பு நிற பெயின்ட்டை அடிக்கவும்.

படம் 2: கிளேயுடன் சிறிதளவு முக பவுடர் சேர்த்து, சிறுசிறு உருண்டைகளாக தேவையான எண்ணிக்கையில் உருட்டிக்கொள்ளவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 19

படம் 3: ஒவ்வொரு உருண்டையையும் பூவிதழ் போல் விரல்களால் வடிவம் பிடிக்கவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 19

படம் 4: இதழ்களில் ஒரு பேப்பர் அட்டை கொண்டு அழுத்தி அழகு செய்யவும்.

படம் 5: ஐந்து இதழ்கள் தயார். இப்போது கறுப்பு பெயின்ட் அடித்த பூச்சாடி மீது ஒரு துளி ஃபெவிக்கால் ஒட்டி, அதன் மீது சட்டை பட்டன் சைஸில் கிளேவை தயார் செய்து ஒட்டவும்.

படம் 6: இதைச் சுற்றி ஒவ்வொரு இதழாக வைத்து பூவின் வடிவத்தில் ஒட்டவும்.

படம் 7: இப்போது நடுவில் ஒட்டப்பட்டுள்ள கிளேயில் வட்டவடிவக் கண்ணாடியை ஒட்டவும்.

படம் 8, 8 ஏ: அடுத்து ரோஜா போன்று ஒரு கிளே டிசைனை செய்துகொள்ளவும்.

படம் 9: இப்படி ரோஜா, பூவிதழ், இலைகள் என விரும்பும் டிசைன்களை கிளேயில் செய்து, பூச்சாடியில் ரசனையாக ஒட்டவும்.

அழகிய பூச்சாடி ரெடி!

''இந்த கிளே வேலைப்பாடுகள் குஜராத்தில் ரொம்ப பிரபலம். நம்ம வேலைக்கு ஏற்ப இதற்கு விலை நிர்ணயிக்கலாம். இங்கே செய்துகாட்டியிருக்கும் பூச்சாடிக்கு, 100 ரூபாயில் இருந்து விலை வைக்கலாம்!'' என்றார் அனிதா.

கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...