Published:Updated:

ஈஸியா செய்யலாம் யோகா! - 18

பிரேமா ச.இரா.ஸ்ரீதர் மாடல்: நித்திலம்

ஈஸியா செய்யலாம் யோகா! - 18

இந்த ஆசனத்தின் இறுதி நிலை, பாம்பு படம் எடுப்பது போல இருப்பதால், 'புஜங்காசனம்’ எனப்படுகிறது. இதன் செய்முறையை உங்களுக்கு விளக்குகிறார், யோகா டீச்சர் விஜயா ராமச்சந்திரன்.

ஈஸியா செய்யலாம் யோகா! - 18

செய்முறை:  

மகராசன நிலையில் இருக்கவும். பிறகு, கால்களை ஒன்று சேர்த்து நேராக வைக்கவும்.

முகவாயை (சிலீவீஸீ) தரையில் வைத்து, இரண்டு உள்ளங்கைகளையும் புஜங்களுக்கு அருகில் வைத்து, முழங்கையை உயர்த்திய நிலையில் வைக்கவும்.

உள்ளங்கையைத் தரையில் அழுத்தி, மார்பு வரை உடலை உயர்த்தவும். அப்படியே தலையை உயர்த்தி, நேராகப் பார்க்கவும்.

ஈஸியா செய்யலாம் யோகா! - 18

இதே நிலையில் 10 எண்ணிக்கை வரை இருக்கவும். பிறகு, மெதுவாகத் தலையை இறக்கி, முகவாயைத் தரையில் வைத்து, சற்று ஓய்வெடுத்துச் செய்யவும். இப்படியே, ஐந்து முறை செய்யலாம்.

பலன்கள்:

முதுகு வலிக்கு நல்ல ஆசனம்.

ஆஸ்துமா, சளி பிரச்னைகள் தீரும்.

கிட்னியைப் பலப்படுத்தும். மலச்சிக்கல் தீரும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

நண்பர்களே... யோகா பயிற்சிகளை வெறும் தரையில் செய்யக் கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும். அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும்போது, தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.