மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 20

ஆஹா தோரணம்... அசத்தல் வருமானம்! வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ப.சரவணகுமார்

''வீட்டு வாயிலில் தோரணம் தொங்கினால், அது ஓர் அழகுதான். கடையில் சென்று விலை கேட்டால், நம் ஆர்வத்தைக் குறைக்கும்விதமாக குதிரை விலை சொல்வார்கள். ஆனால், அதையே நம் ரசனைக்கேற்ப வீட்டிலே செய்துகொள்ளலாம். தரமும் கியாரன்டி, நீண்ட நாட்களுக்கும் உழைக்கும்!'' என்று சொல்லும் துளசிதேவி குபேந்திரன், சென்னை, பெருங்குடியில் இருக்கும் 'துளசி ஆர்ட்ஸ்’ உரிமையாளர். இங்கே வாசகிகளுக்காக சணல் துணிகளில் வாயில் தோரணம் செய்வதைக் கற்றுக்கொடுக்கிறார்!

தேவையான பொருட்கள்:

ஃபேன்ஸி ஸ்டோன்ஸ், 3டி கிளிட்டர் - கோல்டன் கலர், ஃபேப்ரிக் க்ளூ, சணல் துணி, ஸ்பார்க்கிங் கலர்ஸ் (மெஜந்தா, கோல்டன், கோல்டன் க்ரீன்), பெயின்ட் பிரஷ், தோரணத்துக்கான ஜரிகை ரோல், பென்சில், ஏ4 ஷீட், இன்ச் டேப், கத்தரிக்கோல்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 20

செய்முறை:

படம் 1: ஏ4 ஷீட்டை பக்கவாட்டில் மடித்துக்கொள்ளவும். படத்தில் காட்டியுள்ளபடி மடிக்கப்பட்ட இடத்திலிருந்து நீளம் 7 இன்ச், அகலம் 3.5 இன்ச் என இன்ச் டேப் கொண்டு பென்சிலால் குறித்துக்கொள்ளவும்.

படம் 2: குறிக்கப்பட்டுள்ள அளவுகளை படத்தில் காட்டியுள்ளபடி இலை வடிவத்தில் இணைத்து வரையவும்.

படம் 3: வரைந்த இலை வடிவத்தை கத்தரிக்கோல் கொண்டு கட் செய்துகொள்ளவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 20

படம் 4: கட் செய்ததை சணல் துணி மீது வைத்து வரைந்துகொள்ளவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 20

படம் 5: சணல் துணியில் வரையப்பட்ட இலை அவுட்லைனை கட் செய்துகொள்ளவும்.

படம் 6: அதன் அடிப்பாகத்தை ஒரு இன்ச் மடித்துக்கொள்ளவும்.

படம் 7: அந்த சணல் துணி இலை வடிவத்தின் உள்ளே, அதே வடிவத்தை இரண்டு மூன்று அடுக்குகளாக வரைந்துகொள்ளவும்.

படம் 8, 8a: முதல் அடுக்கில் மெஜந்தா பெயின்ட்டும், இரண்டாம் அடுக்கில் கோல்டன் பெயின்ட்டும் நிரப்பவும்.

படம் 9: உட்புற அடுக்கில் கோல்டன் க்ரீன் பெயின்ட் நிரப்பவும்.

படம் 10: மெஜந்தா, கோல்டன் க்ரீன் மற்றும் கோல்டன் பெயின்ட் பூசப்பட்ட இடங்களில் ஃபேப்ரிக் க்ளூ கொண்டு ஃபேன்ஸி ஸ்டோன்களைக் கற்பனைக்கு ஏற்ப ஒட்டவும்.

படம் 11: அடுத்ததாக கோல்டன் கலர் 3டி கிளிட்டர் கொண்டு, ஒவ்வொரு அடுக்கையும் பிரிக்கும் வகையில் அவுட்லைன் வரைந்துகொள்ளவும்.

படம் 12: முதலில் மடித்த ஒரு இன்ச் அளவை நீட்டிவிட்டு, அதில் ஃபேப்ரிக் க்ளூ தடவிக்கொள்ளவும்.

படம் 12a: க்ளூ தடவிய இடத்தில் படத்தில் காட்டியுள்ளபடி தோரணத்துக்கான ஜரிகை ரோலை ஒட்டி முடிக்கவும். இதேபோல ஒவ்வொரு இலை வடிவத்தையும் டிசைன் செய்யவும்.

உங்கள் வாசலை அலங்கரிக்க, அழகானதொரு தோரணம் தயார்! இதற்கான செலவு, 200 ரூபாய்க்குள். இதை 500 - 800 ரூபாய் வரை விற்கலாம்!

கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...