மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 22

ஃபேஷன் ஜிமிக்கி... பேஷ் பேஷ் வருமானம்! வே.கிருஷ்ணவேணி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

"இப்போவெல்லாம் பெண்கள் புடவையில் இருந்து நகைகள் வரை லைட் வெயிட் கலெக்‌ ஷன்கள்தான் விரும்புறாங்க. இதை ஈடு செய்யுற விதமா இருக்கிறதுனாலதான், க்வில் லிங் ஜுவல்லரிக்கு ஏக மவுசு! டிரெஸ்ஸுக்கு ஏத்த கலர் காம்பினேஷன்கள்ல செய்து கலக்கலா போட்டுக்கலாம்!''

குதூகலத்துடன் பேசும், சுகந்தி, தாம்பரத்தில் 'அனுஷ்கா’ஸ் என்ற பெயரில் ஹேண்ட்மேட் ஜுவல்லரி வகுப்புகள் நடத்தி வருகிறார். இவர், உங்களுக்காக இங்கே க்வில்லிங் கம்மல் செய்வது எப்படி என்று கற்றுக் கொடுக்கிறார்.

தேவையான பொருட்கள்:

க்வில்லிங் பேப்பர்கள் (ப்ளூ, க்ரீன் மற்றும் பிங்க்), க்வில்லிங் நீடில், ஃபேப்ரிக் க்ளூ, பெண்டன்ட் ஹூக், முத்துக்கள் 2 (துளை கொண்டது), ஜாயின்ட் ஹூக்  2, கோல்டன் பீட்ஸ், க்விக் ஃபிக்ஸ், கட்டர், பிளேயர், ஸ்டட் பேஸ், ஸ்டட் பேக் பட்டன்ஸ்.

செய்முறை:

படம் 1: முதலில் மேல் காதணிக்கான வடிவத்தை செய்வதற்கு மூன்று பிங்க் கலர் மற்றும் மூன்று ப்ளூ கலர் க்வில்லிங் பேப்பரை ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டவும்.

படம் 2: இதை படத்தில் காட்டியுள்ளபடி க்வில்லிங் நீடில் கொண்டு சுற்றவும்.

படம் 3: க்வில்லிங் பேப்பரை இறுதியில் ஃபேப்ரிக் க்ளூ கொண்டு ஒட்டி முடிக்கவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 22

படம் 4: அதைச் சுற்றி கோல்டன் மணிச் சுருளை ஒட்டி, அதன் நடுப்பாகத்தில் ஒரு கோல்டன் ஸ்டோன் ஒட்டவும்.

படம் 5: ஸ்டட் பேஸை க்விக் ஃபிக்ஸ் கொண்டு பின்பக்கமாக ஒட்டவும். இப்போது மேல் கம்மல் ரெடி.

படம் 6: இனி, கீழே தொங்கும் ஜிமிக்கி தயாரிக்கலாம். ப்ளூ கலர் க்வில்லிங் பேப்பர் 5 மற்றும் க்ரீன் கலர் க்வில்லிங் பேப்பர் 5 என எடுத்துக்கொண்டு, ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டி படத்தில் காட்டியுள்ளவாறு க்வில்லிங் நீடில் கொண்டு இறுக்கமாக சுருட்டி, இறுதியில் ஃபேப்ரிக் க்ளூ கொண்டு ஒட்டவும்.  

படம் 7: இந்த க்வில்லிங் சுருளை விரலால் மேல் பக்கமாக தூக்கிவிட, ஜிமிக்கி தயார்.  

படம் 8: ஜிமிக்கியின் கீழ்ப்பக்கம், ஃபேன்ஸி ஸ்டோன் சுருளை க்விக் ஃபிக்ஸ் கொண்டு ஒட்டவும்.

படம் 9: பெண்டன்ட் ஹூக்கினை பிளேயர் கொண்டு கம்பி போல வளைத்துக்கொள்ளவும். இதில் முத்து கோத்து பிளேயர் கொண்டு நன்றாக அழுத்திக்கொள்ளவும்.

படம் 10: மறுபுறமுள்ள ஹூக் கினை படத்தில் காட்டியுள்ளவாறு க்வில்லிங் ஜிமிக்கிக்குள் செருகவும். செருகப்பட்ட ஹூக்கில் கோல்டன் பீட்ஸ் கோக்கவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 22

படம் 11: மீதம் உள்ள கம்பியைக் கொக்கி போல வளைத்து முடிக்கவும்.

படம் 12: இந்த துளையினுள்

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 22

ஜாயின்ட் ஹூக்’கை இணைத்து, படத்தில் காட்டியுள்ளவாறு பட்டன் இடப்படும் தோட்டினுள் கோத்துக் கொள்ளவும். பிறகு காதணிக்கான பட்டனைப் போடவும்.

'இந்த கிராண்ட் க்வில்லிங் ஜிமிக்கியை நூறு ரூபாய் முதல் விற்பனை செய்யலாம். இதில் வேலைப்பாடுகள் கூடக்கூட, விலையும் கூடும். நல்ல தொரு பிசினஸ் வாய்ப்பு, நழுவ விடாதீர்கள்!''

நம்பிக்கையுடன் சொல்கிறார் சுகந்தி.

கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...