Published:Updated:

ஈஸியா செய்யலாம் யோகா - பாலாசனம்

பிரேமா படங்கள் : சொ.பாலசுப்ரமணியன் மாடல்: எஸ்.அஷ்வந்த்

குழந்தை தூங்குவது போன்ற தோற்றத்தைத் தரும் ஆசனம், 'பாலாசனம்’ எனப்படும். ஆங்கிலத்தில் ‘Child pose’ என்பார்கள். இந்த ஆசனத்தைச் செய்வது மிகவும் எளிது. செய்யும் முறையை உங்களுக்கு விளக்குகிறார், யோகா டீச்சர் விஜயா ராமச்சந்திரன்.

ஈஸியா செய்யலாம் யோகா - பாலாசனம்

செய்முறை:

இரண்டு கால்களையும் மடக்கி, வஜ்ராசனத்தில் அமரவும்.

சற்று ஓய்வெடுத்து, சீராக மூச்சு விடவும்.

பிறகு, இரண்டு கைகளையும் முன் நோக்கி      நீட்டி, மெதுவாகக் குனிந்து, தரையில் தலையை   வைக்கவும்.

10 எண்ணிக்கை வரை இதே நிலையில்   இருக்கவும்.

பிறகு, மெதுவாக கைகளைத் தூக்கியபடி  நிமிர்ந்து, கைகளைப் பக்கவாட்டில் கீழே  கொண்டுவரவும்.

பலன்கள்:

கால் முட்டி முதல் பாதம் வரை  வலுப்பெறும். சிறு வயதிலேயே வரும்   தொப்பை குறையும்.

கைகளில் தேவையில்லாத கொழுப்பு கரையும்.

முதுகுத் தண்டுவடத்துக்கும் இது நல்ல பயிற்சி.

இது ஒரு 'ரிலாக்ஸேஷன்’ நிலை. உடல்  நன்கு ரிலாக்ஸ் ஆகும்.