என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

##~##

ந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் நேரத்தில், ஆப்பிளின் தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் விலகிய செய்தி அனைவருக்கும் தெரிந்த பழைய தகவல் ஆகியிருக்கும். பொதுவாக, இதுபோன்ற அறிவிப்புகள் பங்குச் சந்தையை பலமாகப் பாதிக்கும் என்பதால், பங்குச் சந்தை மூடிய பின்னர் செய்யப்படும். அது போலவே புதன் கிழமை மாலையில் ஜாப்ஸின் விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2004-ல் இருந்தே அரிய வகைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஜாப்ஸ், கடந்த இரண்டு வருடங்களாக மருத்துவ விடுப்பில் நீண்ட காலம் இருந்து வந்தார். ஸ்டீவ்வுடன் இணைந்து பல வருடங்கள் பணியாற்றிய குக், ஆப்பிளின் புதிய தலைமைச் செயல் அதிகாரி. சந்தை முடிந்த பின்னர் நடக்கும் பங்குப் பரிவர்த்தனைகளில் ஆப்பிளின் பங்கு மதிப்பு ஐந்து சதவிகிதமே குறைந்துஇருப்பது முதலீட்டாளர்கள் இந்த மாற்றத்தைப் பெரிதாக

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

எடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. டெக் உலகின் பிதாமகர்களாக 20 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து வந்த மைக்ரோசாஃப்ட்டின் பில் கேட்ஸும், ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸும் தாம் நிறுவிய நிறுவனங்களின் தலைமைச் செயல் பொறுப்பில் இல்லாதது டெக் உலகின் இன்னொரு மைல் ஸ்டோன்.

சென்ற வாரத்தில் கூகுளைக் கதாநாயகனாகவும் வில்லனாகவும் இருக்கும் நிறுவனம் என்றேன். அப்படியானால், காமெடி பீஸ் யாராவது இருந்தாக வேண்டுமே. டெக் உலகின் சமீபத்திய காமெடி பீஸ் HP நிறுவனம். கூகுள், மோட்டரோலாவை வளைத்துப் போட்டுக்கொண்ட செய்தியில் ஐ.டி. இண்டஸ்ட்ரி மூழ்கி இருந்த வேளையில், அமைதியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது HP. சென்ற வருடம் Palm நிறுவனத்தை 1.2 பில்லியனுக்கு HP வாங்கியது. குறிப்பாக, அந்த நிறுவனத்தின் WebOS எனப்படும் குளிகை இயங்கு மென்பொருளுக்காகவே. இதை அடிப்படையாகவைத்து Touchpad என்ற குளிகையைத் தயாரித்து வெளியிட்டது. சென்ற மாதம் வெளியிடப்பட்ட இந்த குளிகை ஃப்ளாப். Best Buy பயனீட்டாளர் மின்பொருட்களைச் சில்லறை வணிகம் செய்வதில் பிரபலமான நிறுவனம். இந்த வாரத் தொடக்கத்தில், இந்தக் குளிகையை சுமார் இரண்டு லட்சம் வாங்கி ஸ்டாக் செய்தோம். இரண்டு மாதங்களாகியும் 20 ஆயிரம்கூட விற்கவில்லை என்று செய்தி கசியவிட்டது. WebOS மூலம் இயங்கும் சாதனங்கள் அனைத்தையும் நிறுத்திவிடப் போவதாக அறிவித்துள்ளது HP. அது மட்டும் அல்ல, 500 டாலர்கள் என முதலில் அறிவிக்கப்பட்ட இதை 100 டாலர்களுக்குக் கொடுக்கிறோம் என்று சென்ற வாரக் கடைசியில் அறிவித்தது. கூடவே, கணினித் தயாரிப்பில் இருந்து விலகிக்கொள்ளப்போகிறோம்; இந்தப் பிரிவை விற்கத் தயார் என்று அறிவித்திருக்கிறது HP. சரியாக 10 வருடங்களுக்கு முன்னால், கணினித் தயாரிப்பு நிறுவனமான Dell-க்குப் போட்டியாக இருக்க வேண்டும் என்பதால், 25 பில்லியன் டாலர்கள் கொடுத்து Compaq-ஐ வாங்கிய HP, இப்போது கணினித் தயாரிப்பையே நிறுத்திவிடப் போவதாகச் சொல்லியிருப்பது மொபைல் யுக விளைவு அல்லாமல் வேறு என்ன?

அது இருக்கட்டும். கலக்கிக்கொண்டு இருக்கும் கூகுள் ப்ளஸ் பற்றி கொஞ்சம் பார்க்கலாம் இந்த வாரம்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

Orkut, Wave, Buzz எனப் பல தோல்விகளுக்குப் பின்னர், ப்ளஸ் என்ற வெற்றித் தயாரிப்பை வழங்கியிருக்கிறது கூகுள். தேடல் (Search ), சமூகம் ( Social ) என்ற இரண்டையும் ஒன்றாகக் கலந்து Searchial என்ற புதிய வார்த்தை இப்போதெல்லாம் டெக் உலகில் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறேன். காரணம், கூகுள் போன்ற தேடல் இயந்திரங்களுக்கு தங்களது பதில்களைப் பயனீட்டாளர்களுக்குப் பொருத்தமாகக் கொடுக்க அவர்களின் சமூக நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. உதாரணத்துக்கு, குற்றாலம் சென்று வந்த புகைப்படங்களை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டுவிட்டு, சில மாதங்களில் தேடல் இயந்திரம் சென்று 'விடுமுறைக்கு எங்கே போகலாம்?’ என்று கேட்டால், பதிலுக்கு நீர்வீழ்ச்சி சார்ந்த இடங்களைப்பற்றிய தகவல்களும், அங்கே தங்க வசதிகள் பற்றிய வலைதளங்களும் பதிலுக்கு வந்தால் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்தானே? சமூக வலையும், தேடலும் ஒரே நிறுவனத்திடம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஃபேஸ்புக்குக்கு முதலீடு செய்வதன் மூலம் இந்தத் தகவல்களை அவர்களிடம் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூகுள் திட்டமிட்டதும், ஃபேஸ்புக் அந்த முதலீட்டை ஏற்றுக்கொள்ளாமல், மைக்ரோசாஃப்ட்டிடம் இருந்து முதலீட்டை வாங்கிக்கொண்டு, அவர்களின் பிங் தேடல் தளத்துக்குத் தகவலைக் கொடுப்பதும் பழைய கதை. வேறு வழி இல்லாமல், கூகுள் தொடங்கிய ப்ளஸ்ஸின் செயல்பாடு களை இப்போது ஃபேஸ்புக் காப்பி அடிக்க ஆரம்பித்திருப்பது புதிய செய்தி.

உங்களது சமூகத் தொடர்புகளை Family, Friends, Acceptances என்றெல்லாம் பல வட்டங்களாகப் பிரித்துக்கொள்ளும் ப்ளஸ்ஸின் Circles அமைப்பைப் பார்த்து ஃபேஸ்புக் இந்த வாரத்தில் அது போலவே உங்கள் நட்பு வட்டங்களை பயனீட்டாளர் கள் உருவாக்கிக்கொள்ளும் வசதி செய்ய முற்பட்டு இருக்கிறது.

இப்போதைக்கு வணிக நிறுவனங்களுக்கு ப்ளஸ் மூலம் நேரடியாக எந்தப் பயனும் இல்லை. நான் தனிப்பட்ட விதத்தில் இப்போதெல்லாம் அடிக்கடி பயன்படுத்தும் ப்ளஸ் வசதி Hangout. பலருடன் ஒரே நேரத்தில் வீடியோ சாட் செய்ய முடிகிற இந்த வசதி, வணிக நிறுவனங்களால் அதிகம்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

பயன்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கூகுள் ப்ளஸ் பயன்படுத்த உங்களுக்கு அழைப்பு தேவை. வெளியிட்ட சில வாரங்களில், 'உங்களிடம் அழைப்புகள் இருந்தால், எனக்கு ஒன்றைக் கொடுங்களேன்’ என்று அந்த வாரக் கட்டுரையில் கேட்க, இரண்டு நாட்களுக்குள் 20 அழைப்புகள்.

கூகுள் ப்ளஸ் பயனீட்டாளரான என்னிடம் இப்போது 150 அழைப்புகள் இருக்கின்றன. உங்களுக்கு ஒன்று வேண்டுமா னால், http://www.facebook.com/anandavikatan ஃபேஸ்புக் பக்கத் தின் சுவரில் எழுதுங்கள். அனுப்பிவைக்கிறேன்!

LOG OFF