மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 23

கைமேல் லாபம் தரும் ஷில்பக்கார் வேலைப்பாடு!வே.கிருஷ்ணவேணி, படங்கள்: தி.ஹரிஹரன்

ஷில்பக்கார் டிசைன் பொருட்களுக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும் வண்ணங்கள் மயக்கும் அலங்காரப் பொருட்களுக்கு, சிவப்புக் கம்பளம்தான். இங்கே உங்களுக்கு ஷில்பக்கார் பென் ஸ்டாண்ட் செய்யக் கற்றுக் கொடுக்கிறார் சென்னை, விருகம்பாக்கம், 'உமா ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ்’ உரிமையாளர் உமையாள்.

தேவையான பொருட்கள்: உபயோகமற்ற சி.டி - 1, பி.வி.சி பைப் - தேவையான நீளத்தில், ஷில்பக்கார் - 2 பாக்கெட், அக்ரலிக் பெயின்ட் - தேவையான வண்ணங்களில், கத்தரிக்கோல், பெயின்ட் பிரஷ், முக பவுடர், டூத் பிக் - 1.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 23

செய்முறை: படம் 1, 2: கையில் கொஞ்சம் முக பவுடர் தடவிக்கொண்டு, ஷில்பக்காரை நீளவாக்கில் உருட்டி, பி.வி.சி பைப் மீது பரவலாக ஒட்டவும். ஃபெவிக்கால் தடவியும் ஒட்டலாம்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 23

படம் 3: படத்தில் காட்டியுள்ள பூவைப் போல, இன்னும் புறா, வேலி, வீடு, கற்கள் என பிடித்தமான வடிவங்களை ஷில்பக்கார் கொண்டு செய்துகொள்ளவும். இந்த டிசைனை செதுக்க, டூத் பிக் பயன்படுத்தலாம்.

படம் 4: பூக்கள், இலைகள் என பி.வி.சி பைப்பில் ஒட்டி அலங்கரிக்கவும்.

படம் 5: பி.வி.சி பைப்பின் அடிப்பாகத்தில் உள்ள வாய்ப்பகுதி விளிம்பில் ஷில்பக்காரை உருட்டி ஒட்டி முடிக்கவும்.

படம் 6: இப்போது பி.வி.சி பைப், வீடு, புறா என செய்த வடிவங்கள் அனைத்தையும் சி.டி-யின் மீது ரசனையாக ஒட்டிக்கொள்ளவும்.

படம் 7: சிறிது காயவிட்டு, தகுந்த வண்ணம் தீட்டினால், ஷில்பக்கார் பென் ஸ்டாண்ட் தயார்!

இதன் மார்க்கெட் விலை, 250 முதல் 500 ரூபாய் வரை!

கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...