மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

 200

அனுபவங்கள் பேசுகின்றன!

இயற்கையைப் புறக்கணிக்கலாமா..?!

சமீபத்தில், நானும் என் கணவரும் என்னுடைய தோழியின் புதுமனை புகுவிழாவுக்கு சென்றிருந்தோம். மாலை, தோரணம் என்று வீட்டை சிறப்புற அலங்கரித்திருந்தனர். ஆனால், அவை அனைத்தும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. ''பூமாலையும், தோரணமும் ஒரு நாளில் வாடிவிடும். பிளாஸ்டிக் அயிட்டங்கள் என்றும் வாடாமல் இருக்கும் என்று அவள் விளக்கம் அளித்தாள்.

பூமாலை, மாவிலைத் தோரணம் போன்றவற்றின் மேன்மை, தாத்பர்யம், மருத்துவ பலன் பற்றி உணராமல், சமீபகாலங்களில் வெறும் சௌகரியத்தை மட்டுமே கருத்தில் கொண்டு நம்மில் பலர் செயல்பட்டுவருவது வருத்தத்துக்குரியது. இதுபோன்ற விஷயங்களில் மட்டுமாவது செயற்கையை விடுத்து இயற்கையை பின்பற்றுவோமே..!

- ஆர்.வசந்தி, போளூர்

பக்கங்களை கிழிக்கும் பாதகர்கள்!

சென்னை, கன்னி மாரா நூலகத்துக்கு மாதம் ஒரு முறையாவது போய் 6 புத்தகங்களை எடுத்துப் படிப்பேன். மெம்பர்ஷிப் கார்டுக்கு 6 புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து செல்ல லாம். ஒவ்வொரு முறையும் நூல்களைப் படிக்கும்போது ஏதோ தொடர்ச்சி இல்லாதது போலிருக்கும். நன்றாக கவனித்தால், பக்கங்கள் கிழிக்கப்பட்டு இருக்கும். பெரும்பாலும் மருத்துவ புத்தகங்களில்தான் இது போல கிழித்தல் நடக்கிறது.

கூந்தல் செழித்து வளர, நினைவாற்றல் அதிகரிக்க, உடல் எடையைக் குறைக்க, மாதவிடாய் வலியை குறைக்க என பல பகுதிளை படித்து குறித்துக்கொள்ளலாம் அல்லது ஜெராக்ஸ் எடுக்கலாம் என நினைக்கும்போது, நடுவில் பக்கங்கள் இல்லாதது கண்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

இது போன்ற தவறான காரியங்களைச் செய்யும் விஷமிகள் எப்போது திருந்துவார்களோ?!

- கே.தமிழரசி, போரூர்

அனுபவங்கள் பேசுகின்றன!

சேமியுங்கள்... சிநேகிதத்தை!

என் தோழியின் வீட்டுக்குச் சென்றபோது, நான் நுழைந்தவுடனேயே, அவள் தன் குழந்தைகளைக் கண் ஜாடையினாலேயே உள் அறைக்கு போகும்படி செய்தாள். இதைக் கவனித்த நான், என் தோழியிடம், ''ஏண்டி இப்படி பண்றே.... உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களுக்கும் பிள்ளைகளை அறிமுகப்படுத்து, பிள்ளைகளையும் வந்தவர்களுக்கு அறிமுகப்படுத்து.... விருந்தினர், நண்பர்களை எப்படி உபசரிப்பது என அவர்களும் தெரிந்துகொள்ளட்டுமே!'' என்ற நான், தொடர்ந்து, ''வேலை காரணமாக, நம்மில் பெரும்பாலானோர் பெற்றோர், உறவினர்களைப் பிரிந்து வந்துவிட்டோம். இந்நிலையில் வீட்டுக்கு வருபவர்களையும் புறக்கணித்துவிட்டால் எப்படி? உலகமே கணினிமயமாகிவிட்ட இன்றைய சூழலில், வீடு தேடி வருபவர்களின் நட்பையாவது சேமிக்க வேண்டாமா?!'' என்று அட்வைஸ் செய்தேன்.

நான் சொன்னது சரிதானே தோழிகளே..?

- அமுதா அசோக்ராஜா, திருச்சி