சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

சின்ன தூரிகையில் விரியும் பிரமாண்டம்!

சின்ன தூரிகையில் விரியும் பிரமாண்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சின்ன தூரிகையில் விரியும் பிரமாண்டம்!

கலை

ஓவியங்கள் வரைய வேண்டுமென்றால் பேப்பர், சார்ட், போர்டு இவையெல்லாம் தேவைப்படும். ஆனால் இந்த ஓவியருக்கு தெருவோரச் சுவர்கள், சாலைகள் இருந்தால் போதும், அவற்றை, 3டி ஓவியங்களால் அழகுபடுத்திவிடுகிறார்.

கலை
கலை

அவர், போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த `ஸ்ட்ரீட் ஆர்ட்டிஸ்ட்' செர்ஜியோ ஓடீத் (Sergio Odeith). `சின்னச் சின்ன ஓவியங்கள் வரைவதில் என்ன த்ரில் இருக்கிறது... நாம் வரையும் ஓவியங்களைக் கண்டு ஊர் மட்டுமல்ல, உலகமே வியக்க வேண்டும்’ என்கிறார் ஓடீத்.

சின்ன தூரிகையில் விரியும் பிரமாண்டம்!
சின்ன தூரிகையில் விரியும் பிரமாண்டம்!

பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என பிரமாண்ட 3டி ஓவியங்களை வரைந்து அசத்திவரும் ஓடீத், இதற்காக பெயின்ட், பிரஷ் பயன்படுத்துவதில்லை. வெறும் ஸ்ப்ரே வண்ணங்களைக்கொண்டு (Graffiti Art ) பிரமாண்டமான ஓவியங்களை வரைந்து `வாவ்' சொல்லவைக்கிறார். வெளிநாடுகளில், தெருக்களில் ஓவியம் வரைவது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர் வரையும் ஓவியங்களை குறிப்பிட்ட கோணத்திலிருந்து பார்த்தால், 3டியில் பிரமிக்கவைக்கும். 1990-ம் ஆண்டிலிருந்து வரையத் தொடங்கிய இவர், ஆரம்பத்தில் சின்னச் சின்ன ஓவியங்களை வரைந்தார். தற்போது உலகமே திரும்பிப் பார்க்குமளவுக்கு பிரமாண்ட ஓவியங்களை வரைந்து, போர்ச்சுக்கல் நாட்டின் சாலைகளை 3டி எஃபெக்ட்டுக்கு மாற்றியிருக்கிறார். கடந்த 2005-ம் ஆண்டு முதல் இவருடைய ஓவியங்கள் உலகம் முழுக்கப் பிரபலமாகின. அதன் பிறகு, அமெரிக்கச் சாலைகளை 3டி ஆக மாற்ற இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. தற்போது கோகோ கோலா, சாம்சங் மற்றும் ஷெல் போன்ற நிறுவனங்களுக்காக ஸ்ப்ரே ஓவியங்களை வரைந்துவருகிறார்.

கலை
கலை