என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

அவள் நூலகம்: சுவைகளுக்கு ஒரு நூல்!

அவள் நூலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் நூலகம்

இந்திய பாரம்பரியத்தில் சுவை

அது, `மோகமுள்’ திரைப்படம் வெளியான நேரம்... `தி.ஜானகிராமன் எழுதின மாதிரி இல்லையே...’ என்கிற குரல்கள் எழுந்தன. இயக்குநர் வெற்றிமாறன், எழுத்தாளர் பூமணியின் `வெக்கை’ நாவலை `அசுரன்’ என்ற படமாக்கப்போகிறார் என்றவுடன், `அந்த நாவல் மாதிரி படம் இருக்குமா?’ என்ற கேள்வி படம் வெளிவரும் வரை ரசிகர்களுக்கு இருந்தது. இலக்கியங்களைத் திரைப்படமாக எடுக்கும்போது ஏற்படும் இந்தச் சிக்கல், காலம் காலமாகத் தொடர்ந்துவருகிறது.

 லட்சுமி ராமசுவாமி
லட்சுமி ராமசுவாமி

அதேபோல, இலக்கியங்களை நடன வடிவத்துக்குக் கொண்டுவருவதும் சாதாரண விஷயமல்ல. அதிலும், சங்க இலக்கியங்களை நடனமாக நிகழ்த்துவது அதிக உழைப்பையும் சவாலையும் கோரும் பணி. அந்தப் பணியை வெகுசிறப்பாகச் செய்துவருபவர் நடனக் கலைஞர் லட்சுமி ராமசுவாமி.

இதுவரை புறநானூறு, ஐங்குறுநூறு, நற்றிணை.. என எத்தனையோ சங்க இலக்கியங்களை அரங்கேற்றம் செய்திருக்கிறார். தனிநபர் நடனம், குழு நடனம், நாட்டிய நாடகம்... என இவரின் எந்த நிகழ்வாக இருந்தாலும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதாக அது இருக்கும். தவிர, இவருடைய தமிழ் ஆசான் இரகுராமனின் உதவியோடு, தேவாரப்பாடல்கள், பள்ளு இலக்கியம், புதுக்கவிதைகள் எனப் பல தமிழ்ப் பாடல்களை நடன வடிவமாக்கியிருக்கிறார். அண்மையில் இவர் வெளி யிட்டிருக்கும் ஆய்வு நூல், `இந்திய பாரம்பரியத்தில் சுவை.’

ஆய்வுக்கு லட்சுமி ராமசுவாமி எடுத்துக்கொண்ட மூல நூல் சாத்தனார் எழுதிய `கூத்தநூல்.’ அதென்ன சுவை... ஒரு கருத்தைக் காட்சிப்படுத்தும்போது, கண்களாலோ, காதுகளாலோ கண்டும் கேட்டும் பெறுகிற `பாவம்.’ இதை சம்ஸ்கிருதத்தில் `ரஸம்’ என்று சொல்கிறார்கள். கோபம், இரக்கம், பயம்... இப்படி நவரஸங்களாக ஒன்பது `பாவ’ங் களைச் சொல்கிறோம் அல்லவா... அந்த ஒன்பது சுவைகளை எப்படியெல்லாம் நாட்டியத்தில் பயன்படுத்தலாம் என்பதை விரிவாக ஆராய்ந்திருக் கிறார் லட்சுமி ராமசுவாமி.

நாட்டியம் போன்ற நிகழ்த்து கலைஞர்களின் முக்கிய சவாலாக இருப்பது, ரசிகர்களின் முழு கவனத்தையும் நிகழ்ச்சியின்பால் ஈர்க்கவைப்பது; அவர்களை இறுதி வரை உட்காரவைத்து ரசிக்கவைப்பது. இதற்கான பல யுக்திகள் இந்திய நாட்டிய, நாடக இலக்கண நூல்களில் இருக்கின்றன.

அவள் நூலகம்: சுவைகளுக்கு ஒரு நூல்!

`சுவைகளை சரியான அளவில், சரியான இடத்தில் பயன்படுத்தினால், நிகழ்ச்சி நடக்கும் நேரத்தில் மட்டுமல்லாமல், அதை நினைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியைத் தருவது போல ஆக்க முடியும்’ என்கிறார் நூலாசிரியர் லட்சுமி ராமசுவாமி.

இந்த நூலின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசின், இயல் இசை நாடக மன்றம் நூல் வெளிவர நிதியுதவி வழங்கியிருக்கிறது. தமிழ் இலக்கிய ஆர்வலர்களும், நாட்டிய சாஸ்திரத்தில் புதுமை படைக்க விரும்புபவர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது!

இந்திய பாரம்பரியத்தில் சுவை

வெளியீடு: ஸ்ரீமுத்ராலயா ஜி-1. என்.எஸ்.குடியிருப்பு,19/4, கிழக்கு எல்லையம்மன் கோயில் தெரு, கோட்டூர், சென்னை - 85.

விலை: ரூ.500/-

தொலைபேசி: 84385 45495