Published:Updated:

'குழந்தைகள் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளி', லூயிஸ் கரோல் பிறந்தநாள்! | இன்று ஒன்று நன்று - 27

Lewis Carroll

அலிஸுக்கு பிறப்பு கொடுத்த லூயிஸ் பிறந்ததினம் ஜனவரி 27, 1832. நம்ம முதல்ல பாத்த, ”யதார்த்தத்துக்கு எதிரான போரில் கற்பனை மட்டுமே ஒரே ஆயுதம்.”

Published:Updated:

'குழந்தைகள் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளி', லூயிஸ் கரோல் பிறந்தநாள்! | இன்று ஒன்று நன்று - 27

அலிஸுக்கு பிறப்பு கொடுத்த லூயிஸ் பிறந்ததினம் ஜனவரி 27, 1832. நம்ம முதல்ல பாத்த, ”யதார்த்தத்துக்கு எதிரான போரில் கற்பனை மட்டுமே ஒரே ஆயுதம்.”

Lewis Carroll
”யதார்த்தத்துக்கு எதிரான போரில் கற்பனை மட்டுமே ஒரே ஆயுதம்.” - எவ்ளோ அருமையான வாசகம் இது! தினம் தினம் நாம் போராடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில, ஒரு கற்பனைக் எண்ணம் அல்லது கதை நம்மள ஆசுவாசப்படுத்தும். இப்போ ஏன் இந்த வாக்கியம்னு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி, ஒரு சின்ன கதை.. எவ்ளோ வயசானாலும் நம்மால கடந்துபோக முடியாத கதை..

ஒரு சின்ன பொண்ணு, தன்னோட தோடத்துக்கு பின்னாடித் தாவிக் குதிச்சு ஓடுற ஒரு முயலைப் பின்தொடர்ந்து போறா.. அந்த முயல், ஒரு பெரிய மரத்துக்கு அடியில இருக்குற பொந்துக்குள்ள போயிடுது. அந்த முயலைத் தேடிப்போன பொண்ணு, அந்த பொந்துக்குள்ள என்ன இருக்குன்னு எட்டிப் பாக்கபோயி உள்ள விழுந்துடுறா. அந்த முயல் குகைக்குள்ள பாத்தா.. நாம்மெல்லாம் கனவுல கற்பனை செய்யா முடியாத ஓர் ஆச்சர்ய உலகம் இருக்கு. அங்க பாக்குறதெல்லாம் ஆச்சர்யம், அற்புதம், அதிரடி. இன்னுமா அந்த பொண்ணு பேர கண்டுபுடிக்கல.. ஆமாங்க, நாம சின்ன வயசுல, ‘இப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்து பாத்துற முடியாதான்னு’ ஏங்குன ஆலிஸ்-ஓட கதைதான் இது. தர்க்க ரீதியா சொல்லனும்னா, இது அலிஸோட கதை இல்ல. இது சார்லஸ் லுட்விஜ் டோட்சன் ஓட கதை. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர், கவிஞர், கணிதவியலாளர், புகைப்படக்காரர், ஆசிரியர், கண்டுபிடிப்பாளர், ஓவியர்னு.. லிஸ்டு லென்த்தா போகுமே, அந்த லூயிஸ் கரோல்-ன் இயற்பெயர்தான் சார்லஸ் லுட்விஜ் டாட்ஸன்.

லூயிஸ் கரோல்
லூயிஸ் கரோல்

அலிஸுக்கு பிறப்பு கொடுத்த லூயிஸ் பிறந்ததினம் ஜனவரி 27, 1832. நம்ம முதல்ல பாத்த, ”யதார்த்தத்துக்கு எதிரான போரில் கற்பனை மட்டுமே ஒரே ஆயுதம்.” எனும் வாசகத்தை கொடுத்தது லூயிஸ்தான். யதார்த்த உலகத்துல இருந்து தப்பிக்கத்தான், இவர் இத்தனை வேலைகளை செஞ்சாரோனோ சந்தேகப்படுற அளவுக்கு கற்பனை உலகத்துல வாழ்ந்தவரு. ஒரு கவிஞரால புகைப்படம் எடுக்க முடியுமா? ஒரு புகைப்படக்காரர் கணித மேதையாக முடியுமா? ஒரு கணித மேதை ஓவியரா இருக்க முடியுமா? ஒரு ஓவியர் கதை எழுத முடியுமா? ஒரு கதாசிரியர் கண்டுபிடிப்பாளராக முடியுமா?னு கேக்குற நமக்கே சோர்வா இருக்கு. ஆனா இது எல்லாமாகவும் வாழ்ந்திருக்கிறார் லூயிஸ் கரோல்.

”முந்நூற்று அறுபத்து நான்கு நாட்கள் பிறந்தநாள் இல்லாத பரிசுகளை நீங்கள் பெறும்போது, பிறந்தநாள் பரிசுகளுக்கென்று ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ளது.”னு சொன்னவரோட பிறந்தநாள்ல, அவர் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை தெரிஞ்சுக்குறது, நமக்கு ஒரு பரிசுதான?

இங்கிலாந்துல இருக்க செஷயர் பகுதியில டாரஸ்பரி கிராமத்துல 1832 ஆண்டு ஜனவரி 27 ஆம் பிறந்தார் லூயிஸ். இவரோட தந்தை மத போதகர். அவரோட ஆங்கிலோ-கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த பழமைவாத கருத்துக்கள், லூயிஸுக்கு ஒவ்வாததாகவே இருந்துச்சு. பதினோரு குழந்தைகள்ல மூன்றாவதா பிறந்த லூயிஸுக்கு, தன்னோட சகோதர சகோதரிகளுக்கு புதுப் புது விளையாட்டுகளை உருவாக்கி உற்சாகப்படுத்துவதுதான் வேலை. வீட்டிலேயே கல்வி கற்றதாலும், குழந்தைகள் சூழ் உலகுல வளர்ந்ததாலும் இயல்பாவே லூயிஸுக்கு குழந்தைகளோட உலகம் வசப்பட்டிருந்தது.

லூயிஸ் கரோல்
லூயிஸ் கரோல்

சின்ன வயசுலேயே கையெழுத்துப் பத்திரிகைகள்ல கதை, கவிதைகள்னு எழுதினாரு. பள்ளிக்கல்வி முடிச்சப்றம், கல்வி உதவித்தொகை பெற்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தோட கிறைஸ்ட் சர்ச் கல்லூரியில பட்டம் பெற்றார். அங்கேயே கணித விரிவுரையாளராகவும் வேலை செஞ்சாரு. பெரும்பாலும் நகைச்சுவைக் கதைகள், கணித ஆய்வுக் கட்டுரைகள்னு ரெண்டு துருவங்கள்லையும் ஒரே நேரத்துல எழுதும் ஆற்றல் அவருக்கு இருந்தது. கூடவே, 1854ல ’காமிக் டைம்ஸ்’ இதழ்ல சில குழந்தை சித்திரங்கள் வரைந்தும் பாடல்கள் புனைந்தெழுதியும் இலக்கிய உலகிற்குள்ள அடியெடுத்து வெச்சாரு. இந்த காலக்கட்டத்துலதான், ’சார்லஸ் லுட்விஜ் டாட்ஸன்’ன்ற தன்னோட இயற்பெயரை மாத்தி ‘லூயிஸ் கரோல்’னு வெச்சுக்கிட்டாரு.

தேவாலயத்துல பணியாற்றிவந்தபோது, ஒருமுறை ஆலிஸ் லிடல்-ன்ற 4 வயசு குழந்தையை சந்திச்சாரு. அப்போ இருந்து அந்த குழந்தை இவரோட செல்லக் குழந்தையாகிடுச்சு. அவளையும் அவளது 2 சகோதரிகளையும், குட்டிப் படகுல ஏத்திக்கிட்டு ரொம்பநேரம் ஆற்றில் பயணம் செய்வார். சளைக்காம அவங்களுக்கு கதை சொல்வாரு. சில சமயங்கள்ல, தான் சொல்ற கதைகளை படமா வரைஞ்சுட்டே கதை சொல்வார்.

அப்படி ஒரு நாள் கதை சொல்லிட்டிருக்கும்போது, ’என் பேர்ல ஒரு கதை எழுதிக் குடுக்குறீங்களா’னு ஆலிஸ் லிடல் கேட்டா. ‘ஆலிஸ் அட்வெஞ்சர்ஸ் அண்டர்கிரவுண்ட்’ -ன்ற கதையை இவர் எழுதிக் குடுத்தாரு. இதைப் பார்த்த பிரபல நாவலாசிரியர் ஒருவர், ’இதை புத்தகமாவே வெளியிடலாமே’ ஐடியா சொல்ல, ஒருசில மாற்றங்களோட 1865-ல வெளிவந்ததுதான் ‘ஆலிஸ் அட்வெஞ்சர்ஸ் இன் ஒண்டர்லேண்ட்’ ன்ற புத்தகம். அந்த கதை திரைப்படமாகவும், நாடகமாகவும், வாய்வழிக்கதைகளாகவும் சொல்லி சொல்லி சலிக்களை இந்த உலகத்துக்கு. இன்னைக்கு சொன்னாலும், குழந்தைகள் கண்ணிமைக்காமல் கவனிக்கக்கூடிய கதை அது.

ஆலிஸ் அட்வெஞ்சர்ஸ் இன் ஒண்டர்லேண்ட்
ஆலிஸ் அட்வெஞ்சர்ஸ் இன் ஒண்டர்லேண்ட்

1932-ல் இவரோட பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டப்போ, குழந்தைகளுக்கான நூல்கள்ல, ’உலக அளவில் அதிக வரவேற்பை பெற்ற நூல்களில் ஒன்று’ ன்ற அந்தஸ்த்து இந்த புத்தகத்துக்கு கிடைச்சது. ஆலிஸ் ஏற்படுத்திய அலையால எதிர்பார்க்காத அளவு கவனத்தைப் பெற்ற லூயிஸ் கரோல், ’Through the looking glass’ன்று தொடர்ச்சியை எழுதினாரு. அதுக்கப்புறம் நிரந்தரமா கணிதத்தின் பக்கம் சென்றவர், 1898ல் ஜனவரி 14 அன்னைக்கு காலமானார். அவர் இருந்த வீடு தேவாலயமாக்கப்பட்டு, கூடவே ஆலிஸ், வெள்ளை முயல், டொடொ, தொப்பித்தலையன் என சாகாவரம் பெற்ற அவரோட கதாப்பாத்திரங்களோட சிலைகளோட குழந்தைகளின் குதூகலப் பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றப்பட்டது. உலகத்துல மிக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பைபிள்னு சொல்லுவாங்க. ஆனா பைபிளைவிட அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அலிஸின் கதை. அவர் மறைந்தாலும், இன்னும் ஆயிரமாயிரம் காலத்துக்கு அலிஸ் வாழ்ந்திட்டிருப்பா!

குழந்தைகள் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளியாகப் போற்றப்படும் லூயிஸ் கரோல் 1898 ஜனவரி 14-ம் தேதி 66-வது வயதில் மறைந்தார்.