Published:Updated:

ரயில்வேயில் EQ, தட்கல் வழிகளில் டிக்கெட் புக் செய்யும் முறைகள் என்பது என்ன?|Doubt of Common Man

Doubt of Common Man

தட்கலில் புக் செய்து ஒரு வேளை கடைசி நிமிடத்தில் டிக்கெட் கிடைக்காமல் போனால் நாம் செலுத்திய கட்டண தொகை அனைத்தும் ரீபண்ட் செய்யப்படும்

Published:Updated:

ரயில்வேயில் EQ, தட்கல் வழிகளில் டிக்கெட் புக் செய்யும் முறைகள் என்பது என்ன?|Doubt of Common Man

தட்கலில் புக் செய்து ஒரு வேளை கடைசி நிமிடத்தில் டிக்கெட் கிடைக்காமல் போனால் நாம் செலுத்திய கட்டண தொகை அனைத்தும் ரீபண்ட் செய்யப்படும்

Doubt of Common Man
விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் தர்மச்செழியன் என்ற வாசகர் ``ரயில்வேயில் ஈக்.யூ (EQ), தட்கல் வழிகளில் டிக்கெட் புக் செய்யும் முறைகள் பற்றி விளக்க முடியுமா? " என்று கேட்டிருந்தார். அதற்கான பதில் இங்கே.
Doubt of Common Man
Doubt of Common Man

பண்டிகை காலங்களில் கடைசி நேரத்தில் டிக்கெட் புக் செய்வதற்காக இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த தட்கல் புக்கிங் முறை. முன்பெல்லாம் ரயிலில் நெடுந்தூரம் பயணம் செய்பவர்கள் ஒரு மாதம் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் கவுன்ட்டரில் சலான் படிவம் வாங்கி அதை நிரப்பிப் பதிவு செய்வர். ஆனால் இப்போது ஆன்லைனில் ஒரு நாளைக்கு முன்பே தட்கலில் டிக்கெட் புக் செய்தால் போதும். உடனே டிக்கெட் கிடைத்துவிடும்.

இந்த தட்கல் டிக்கெடை ரயில் நிலையத்திலுள்ள டிக்கெட் கவுன்ட்டரில் சென்றோ, அல்லது ஆன்லைனில் IRCTC வெப்சைட் மூலமோ அல்லது ஆப் மூலமோ புக் செய்யலாம். ரயில் கிளம்பும் ஒரு நாளைக்கு முன்னதாக இதை புக் செய்ய வேண்டும். உதாரணமாக நாளை சென்னையில் இருந்து நீங்கள் போக வேண்டிய ரயில் புறப்படுகிறதென்றால் இன்று தான் நீங்கள் தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியும். குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டுள்ள பெட்டிகளுக்கு (ஏசி கோச்) 10 மணிக்கும், நார்மல் ஸ்லீப்பர் கோச் (படுக்கை) களுக்கு 11 மணியளவிலும் தட்கல் முன்பதிவு ஆரம்பமாகும். அதற்கு முன்னர் யாராலும் தட்கல் முன்பதிவு செய்ய இயலாது.

Doubt of Common Man
Doubt of Common Man

இந்த தட்கல் முன்பதிவில் சாதாரண முன்பதிவு கட்டணத்தை விட ₹90 ரூபாயிலிருந்து ₹175 வரை அதிகமாக இருக்கும் (நார்மல் ஸ்லீப்பர் கோச்). இதுவே ஏசி கோச்களில் ₹250 லிருந்து ₹350 வரை அதிகமாக இருக்கும். இதை ஆன்லைனில் புக் செய்தால் அதற்கு தனியாக ஆன்லைன் கட்டணம் ₹10 முதல் ₹25 வரை பிடித்தம் செய்யப்படும். தட்கலில் புக் செய்து ஒரு வேளை கடைசி நிமிடத்தில் டிக்கெட் கிடைக்காமல் போனால் நாம் செலுத்திய கட்டணத் தொகை அனைத்தும் மொத்தமாக ரீபண்ட் செய்யப்படும். ஆனால் டிக்கெட் ரத்து செய்யப்படும் முன்பே நாம் கேன்சல் செய்தால், நாம் செலுத்திய தொகையில் பாதி தொகையைப் பிடித்துக்கொண்டு மீதம் உள்ள தொகை தான் ரீபண்ட் செய்யப்படும்.

அதே நேரத்தில் அன்ரிசர்வ்டு கோச்களில் செல்ல விரும்புவோர்களுக்கும் தனியாக UTS என்ற ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியன் ரயில்வே. இதன் மூலம் நாம் ஆன்லைனிலேயே அன்ரிசர்வ்ட் டிக்கெட் பதிவு செய்துக்கொள்ளலாம். நேரில் ஸ்டேசனில் சென்று கவுன்ட்டரில் நின்று டிக்கெட் வாங்க வேண்டிய அவசியமில்லை. நாம் டிக்கெட் புக் செய்து மூன்று மணி நேரம் வரை மட்டுமே அந்த டிக்கெட் செல்லும். இதில் பேப்ர் டிக்கெட், பேப்பர் லெஸ் டிக்கெட் என்று இரண்டு வகை உள்ளது. பேப்பர்லெஸ் டிக்கெட்டில் நாம் புக் செய்து அதை மொபைலிலேயே வைத்து டிக்கெட் செக்கரிடம் காண்பித்துக் கொள்ளலாம். ஆனால் பேப்பர் டிக்கெட்டைப் பொறுத்தவரை ஆன்லைனில் புக் செய்து, அதை டிக்கெட் கவுன்ட்டரில் சென்று காண்பித்து டிக்கெட் வாங்கினால் தான் அந்த டிக்கெட் செல்லுபடியாகும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!