Published:Updated:

ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?|Doubt of Common Man

ஆதார் கார்டு

ஆதாரில் மொபைல் எண்ணை அப்டேட் நமது வீட்டில் கணினியிலேயே செய்து விடலாம். அதற்கான வசதிகளை அளித்திருக்கிறது ஆதாரை வழங்கி வரும் UIDAI அமைப்பு.

Published:Updated:

ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?|Doubt of Common Man

ஆதாரில் மொபைல் எண்ணை அப்டேட் நமது வீட்டில் கணினியிலேயே செய்து விடலாம். அதற்கான வசதிகளை அளித்திருக்கிறது ஆதாரை வழங்கி வரும் UIDAI அமைப்பு.

ஆதார் கார்டு
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் பாரதி என்ற வாசகர், ``ஆதார் எண்ணில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
Doubt of common man
Doubt of common man

ஆதார், ரேஷன் போன்ற அரசு ஆவணங்களில் அதனைப் பெறும்போது சில தகவல்களைக் கொடுத்திருப்போம். ஆனால், காலப்போக்கில் அந்தத் தகவல்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். உதாரணமாக வீட்டு முகவரி மாற்றம், அலைபேசி எண் மாற்றம் போன்றவை. இவற்றை எப்படி மாற்றுவது, யாரிடம் சென்று கேட்பது எனத் தெரியாமல் குழம்பியிருப்போம். அந்தத் தகவல் மாற்றப்படாமல் அப்படியேகூட கிடக்கும். இந்த நிலையில் ஆதாரில் நாம் கொடுத்திருக்கும் மொபைல் எண்ணை மாற்ற வேண்டிய தேவை நம் வாசகர் ஒருவருக்கு எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பகுதியில் கேட்டிருந்தார்.

UIDAI
UIDAI

இன்றைய தேதியில் ஆதார் என்பது அரசு ஆவணங்களில் முக்கியமான ஆவணம். அரசு சார்பில் எந்தவித சலுகைகள் பெற வேண்டும் என்றாலும், பதிவுகள் செய்ய வேண்டும் என்றாலும் ஆதார் கட்டாயம். எனவே, ஆதாரில் இருக்கும் தகவல்களை எப்போதுமே சரியாக வைத்துக்கொள்வது அவசியம். ஆதாரில் நாம் கொடுத்திருக்கும் மொபைல் எண்ணானது மிகவும் முக்கியமான ஒரு தகவல். ஏனெனில் ஆதார் மூலம் செய்யப்படும் அனைத்து வேலைகளுக்கும் மொபைல் எண் மூலமே தகவல் பரிமாற்றம் நிகழும். நம்முடைய மொபைல் எண்ணை மாற்றிவிட்டால் உடனே அதனை ஆதாரில் அப்டேட் செய்து விடுதல் நலம்.

ஆதாரில் மொபைல் எண்ணை அப்டேட்டே நமது வீட்டில் கணினியிலேயே செய்து விடலாம். அதற்கான வசதிகளை அளித்திருக்கிறது ஆதாரை வழங்கி வரும் UIDAI (Unique Identification Authority of India) அமைப்பு. ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றக் கீழ்க்காணும் வழிமுறையைப் பின்பற்றவும்.

ஆதார் அப்டேட்
ஆதார் அப்டேட்
  • ask.uidai.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்

  • ஆதாருடன் நாம் இணைத்திருக்கும் மொபைல் எண் மற்றும் கேப்ச்சாவை உள்ளீடு செய்து, அதன் பிறகு நமது மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யையும் (One Time Password) உள்ளீடு செய்ய 'Submit' -ஐ க்ளிக் செய்ய வேண்டும்.

  • அதன் பின்பு தோன்றும் பக்கத்தில் நம்முடைய பெயர், ஆதார் எண், இந்தியாவில் வசிப்பவர்தான் என்ற தகவல்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டு, 'What you want to update' பகுதியில் மொபைல் எண் என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து 'Proceed' பொத்தானை க்ளிக் செய்யவேண்டும்.

ஆதார் அப்டேட்
ஆதார் அப்டேட்
  • அதனைத் தொடர்ந்து வரும் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கேப்ச்சா மற்றும் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யையும் உள்ளீடு செய்து 'Save and Proceed' -ஐ க்ளிக் செய்ய வேண்டும்.

  • ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கான கோரிக்கை ஆதார் தளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும். இதன் பின்னர் அருகில் அருகில் இருக்கும் ஆதார் மையத்திற்குச் செல்வதற்காகப் பதிவு செய்ய 'Book Appointment' என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதனைக் க்ளிக் செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

  • பின்னர் நாம் பதிவு செய்த ஆதார் மையத்திற்குச் சென்று 25 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இதன் பிறகு நமது ஆதாரில் மொபைல் எண் திருத்தம் செய்யப்பட்டு மாற்றப்படும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man