Published:Updated:

போலீஸ் சட்டையின் தோள் பட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடையாளங்கள் எதற்காக? | Doubt of Common Man

காவல்துறை

காவல்துறைப் பணியிடங்களில் நியமிக்கப்படுபவர்களின் பதவி நிலைக்கேற்ப மேற்காணும் அடையாளங்கள் இடம் பெற்றிருக்கும்.

Published:Updated:

போலீஸ் சட்டையின் தோள் பட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடையாளங்கள் எதற்காக? | Doubt of Common Man

காவல்துறைப் பணியிடங்களில் நியமிக்கப்படுபவர்களின் பதவி நிலைக்கேற்ப மேற்காணும் அடையாளங்கள் இடம் பெற்றிருக்கும்.

காவல்துறை
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் சதீஷ் என்ற வாசகர், "காவலர்களின் மேல்தோள் பட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடையாளங்கள் எதற்காக?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
doubt of common man
doubt of common man

தமிழ்நாடு அரசின் காவல்துறையில் பணிபுரிபவர்களின் சட்டைகளில் மேற்தோள் பட்டை அல்லது கைப்பகுதிகளில் அவர்களது பதவிக்கான அடையாளங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அந்த அடையாளங்களைக் கொண்டு, காவல்துறையில் அவருடைய பதவியை நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP - Director General of Police)

அசோகச் சின்னம், அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS (Indian Police Service) எனும் எழுத்துகள் இடம் பெற்றிருக்கும்.

காவல்துறை
காவல்துறை

கூடுதல் காவல்துறைத் தலைமை இயக்குநர் (ADGP - Additional Director General of Police)

அசோகச் சின்னம், அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்துகள்

காவல்துறைத் தலைவர் (IGP - Inspector General of Police)

ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று, அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்துகள்

காவல்துறைத் துணைத்தலைவர் (DIG - Deputy Inspector General of Police)

அசோகச் சின்னம், அதன் கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்துகள்

காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP - Superintendent of Police)

அசோகச் சின்னம், அதன் கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS (Tamilnadu Police Service) எழுத்துகள்

காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் (JSP – Joint Superintendent of Police)

அசோகச் சின்னம், அதன் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP – Additional Superintendent of Police)

அசோகச் சின்னம், அதன் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து

காவல்துறை
காவல்துறை

காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP – Assistant Superintendent of Police)

மூன்று நட்சத்திரம் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP – Deputy Superintendent of Police)

மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து

காவல்துறை ஆய்வாளர் (Inspector)

மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்

உதவி ஆய்வாளர் (Sub-Inspector)

இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா (துறை) என்று இருக்கும்.

சிறப்பு உதவி ஆய்வாளர் (Special Sub – Inspector)

ஒரு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா என்று இருக்கும்.

தலைமைக் காவலர் (Head Constable)

சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்.

முதல்நிலைக் காவலர் (Police Constable-I)

சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்

இரண்டாம்நிலைக் காவலர் (Police Constable-II)

பட்டை எதுவுமில்லை.

காவல்துறை
காவல்துறை

ஆணையாளர்கள்

சென்னைப் பெருநகரம் மற்றும் சில மாநகராட்சிப் பகுதிகளில் காவல்துறையின் உயர்ந்த பணியாக ஆணையாளர் எனும் பணியிடங்களும், அதன் கீழாகக் கூடுதல் ஆணையாளர், இணை ஆணையாளர், துணை ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் பணியிடங்களும் இருக்கின்றன. இப்பணியிடங்களில் நியமிக்கப்படுபவர்களின் பதவி நிலைக்கேற்ப மேற்காணும் அடையாளங்கள் இடம் பெற்றிருக்கும்.

உதாரணமாக, சென்னை காவல்துறை ஆணையாளர் பணியிடம், கூடுதல் காவல்துறைத் தலைமை இயக்குநர் (ADGP - Additional Director General of Police) நிலையிலிருப்பதால், அப்பணிக்குரிய அடையாளமும், திருநெல்வேலி காவல்துறை ஆணையாளர் பணியிடம் காவல்துறைத் தலைவர் (IGP - Inspector General of Police) நிலையிலிருப்பதால் அப்பணிக்குரிய அடையாளமும் இடம் பெற்றிருக்கும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

doubt of common man
doubt of common man