Published:Updated:

அரசு பேருந்துகளில்கூட 10 ரூபாய் நாணயங்களை‌ வாங்க மறுக்கிறார்கள் ஏன்? |Doubt of Common Man

பத்து ரூபாய் நாணயங்கள்

பத்து ரூபாய் நாணயங்களை வியாபாரிகள், மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள்கூட வாங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

Published:Updated:

அரசு பேருந்துகளில்கூட 10 ரூபாய் நாணயங்களை‌ வாங்க மறுக்கிறார்கள் ஏன்? |Doubt of Common Man

பத்து ரூபாய் நாணயங்களை வியாபாரிகள், மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள்கூட வாங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

பத்து ரூபாய் நாணயங்கள்
டவிகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் தமிழ் தரணி என்ற வாசகர், ``பெரும்பாலான அரசு பேருந்துகளில் கூட பத்து ரூபாய் நாணயங்களை‌ வாங்க மறுக்கிறார்கள். அரசு அச்சடிக்கும் பணத்தை அரசு ஊழியர்களே செல்லாது என்று சொல்லும் போது என்ன செய்வது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
Doubt of common man
Doubt of common man

பத்து ரூபாய் நாணயங்களை வியாபாரிகள், மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட வாங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் 10 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி தடைசெய்துவிட்டது என்கிற வதந்தியும், பத்து ரூபாய் நாணயங்களைப் போலப் போலி நாணயங்கள் சந்தையில் இருக்கின்றன என்கிற செய்தியும்தான் மக்களை அச்சமூட்டி பத்து ரூபாய் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கு இடையூறாக அமைந்தது. மேலும், தங்களிடம் இருக்கிற பத்து ரூபாய் நாணயங்களை வங்கிகளிலும் மக்களால் செலுத்த முடியவில்லை. நாணயங்களே மக்களின் புழக்கத்திற்காகத் தான் அச்சடிக்கப்படுகின்றன எனக் கூறி வங்கிகள் நாணயங்களை வாங்க மறுத்ததும் 10 ரூபாய் நாணயங்களை மக்கள் புழங்க மறுத்ததற்கு மற்றொரு காரணமாக அமைந்துவிட்டது.

RBI
RBI
Photo: Vikatan / Ashok kumar.D

இந்தக் குழப்பங்களைத் தொடர்ந்து மக்களுக்கு பத்து ரூபாய் நாணயங்கள் மீதான அச்சத்தைப் போக்கும் விதமாக பத்து ரூபாய் நாணயங்கள் முழுமையாகச் செல்லத்தக்கது எனக் கூறி ஏன் பத்து ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி அச்சிட்டது என்ற காரணத்தையும் விளக்கியது ரிசர்வ் வங்கி. 2018-ல் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி 2009 முதல் 2017-வரை 14 வகையான பத்து ரூபாய் நாணயங்களை அச்சிட்டுள்ளது. அந்த 14 வகை நாணயங்களுமே ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாணயங்கள் தான் போலியானவை அல்ல. ரூபாய்த் தாள்களில் 10 ரூபாய்த் தாள்களே தினசரிப் பரிவர்த்தனையில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அப்படி அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதன் ஆயுட்காலம் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாகவே பத்து ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளது. ரூபாய்த் தாள்களை விட நாணயங்கள் அதிக காலம் மக்களால் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த முடியும்.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு

மக்களுக்கான இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளும் மக்கள் கொண்டு வரும் நாணயங்களை வாங்கிக் கொள்ள வேண்டும், நிராகரிக்கக் கூடாது என வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது ரிசர்வ் வங்கி. இவற்றுக்குப் பிறகு ஓரளவுக்கு பத்து ரூபாய் நாணயங்கள் மீது மக்களுக்கு அச்சம் நீங்கியது. தற்போது பொது இடங்களிலும், பேருந்துகளிலும் மக்கள் பத்து ரூபாய் நாணயங்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். எனினும், நம் வாசகர் குறிப்பிட்டது போல சில இடங்களில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். அரசு அச்சடித்த பணத்தைச் செல்லாதது எனக் கூறி வாங்க மறுப்பது இந்தியாவில் குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காகப் பணத்தை வாங்க மறுப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை கூட எடுக்க முடியும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man