Published:Updated:

How to: வாட்டர் டேங்க்கை சுத்தப்படுத்துவது எப்படி? | How to clean Water tank?

Tank ( Photo by Bob Jansen on Unsplash )

வாட்டர் டேங்க்கை சுத்தம் செய்வது பலருக்கும் பெரிய காரியமாகவே இருக்கிறது. எளிய முறையில், முழுமையாக அதை எப்படி சுத்தம் செய்வது எனப் பார்க்கலாம்.

Published:Updated:

How to: வாட்டர் டேங்க்கை சுத்தப்படுத்துவது எப்படி? | How to clean Water tank?

வாட்டர் டேங்க்கை சுத்தம் செய்வது பலருக்கும் பெரிய காரியமாகவே இருக்கிறது. எளிய முறையில், முழுமையாக அதை எப்படி சுத்தம் செய்வது எனப் பார்க்கலாம்.

Tank ( Photo by Bob Jansen on Unsplash )

வீட்டின் அனைத்து தண்ணீர் தேவைகளுக்கும் வாட்டர் டேங்க்கில் சேமிக்கும் நீரையே பயன்படுத்துவதால், அதை சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது முக்கியம். வாட்டர் டேங்க்கை சுத்தம் செய்வது பலருக்கும் பெரிய காரியமாகவே இருக்கிறது. ப்ளாஸ்டிக் வாட்டர் டேங்க்குகளை எளிய முறையில், முழுமையாக எப்படி சுத்தம் செய்வது எனப் பார்க்கலாம்.

Water Tank (Representational Image)
Water Tank (Representational Image)

ஸ்டெப் 1

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யத் தொடங்கும் முன், ஒரு பெரிய வாளி, பேரலில் தண்ணீரை அருகில் வைத்துக்கொள்ளவும். அது டேங்க்கை சுத்தம் செய்யத் தேவைப்படும்.

ஸ்டெப் 2

டேங்க்கை சுத்தம் செய்யும் நாளில், மோட்டர் போட்டு டேங்க்கை முழுவதுமாக நிரப்புவதைத் தவிர்க்கவும். சுத்தம் செய்யத் தொடங்கும் முன் டேங்க்கில் உள்ள தண்ணீரை முதலில் முழுவதுமாக வெளியேற்றவும். அப்படி வெளியேற்றப்படும் தண்ணீரை வீணாக்காமல் வீட்டின் தேவைகளுக்காக கீழே டப், வாளிகளில் சேமித்து வைத்துக்கொள்ளவும்.

ஸ்டெப் 3

கையில் உறை, முகத்துக்கு மாஸ்க் போன்றவற்றை அணிந்துகொள்ளவும். டேங்க் காலியான பின்னர், டேங்க்கின் தரையையும் சுவரையும் நன்றாக அழுத்தித் தேய்த்து சுத்தம் செய்யவும். அழுக்கு, பூஞ்சை, பாசிகள் மற்றும் கறைகள் நீங்கிவிடும். இந்த ஸ்கிரப்பிங் முடிந்ததும், அதிக வேகத்துடன் தண்ணீரை டேங்க்கில் அடித்து ஊற்றிக் கழுவிக்கொள்ளவும்.

ஸ்டெப் 4

ஸ்கிரப் செய்ததற்குப் பின்னரும் நீங்காமல் இருக்கும் அழுக்குகள், மண் துகள்களை வாக்வம் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்யலாம்.

ஸ்டெப் 5

டேங்க்கை சுத்தம் செய்ய கிருமிநாசினி ஸ்பிரேக்கள், லிக்விட் சோப்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இவை, டேங்க்கில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அனைத்தையும் அகற்றும். இந்த வகைக் கிருமிநாசினியை டேங்க்கில் பயன்படுத்தியவுடன், டேங்க்கில் சிறிது தண்ணீர் நிரப்பி, வீட்டின் தேவைக்குச் சொல்லும் பைப்லைன் குழாய்களைத் திறந்து, அதன் வழியே இந்தத் தண்ணீரை வெளியேற்றவும். இதனால் அழுக்காக இருக்கும் பைப்லைன்களும் சுத்தமாக வாய்ப்புள்ளது.

ஸ்டெப் 6

சில மணி நேரம் டேங்க்கை உலரவிடவும். பின்னர் தண்ணீர் நிரப்பிப் பயன்படுத்தவும்.

முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

* டேங்க்கை சுத்தம் செய்கிறேன் என எடுத்ததும் உள்ளே இறங்க வேண்டாம். தண்ணீரை வெளியேற்றுவது, மாஸ்க், கிளவுஸ் அணிவது முக்கியம்.

* கிருமி நாசினி பயன்படுத்திய பின்னர் வெளியேற்றும் தண்ணீர், வீட்டின் தேவைகளுக்கோ, செடிகளுக்கோ செல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

* மிக முக்கியமாக, மொட்டை மாடியில் டேங்க்கை சுத்தம் செய்யும்போது தனியே செய்யாமல், உதவி, அவசரத்துக்கு என அருகில் ஒருவரையாவது துணைக்கு வைத்துக்கொள்ளவும்.