Published:Updated:

கவிதை: இருள் தரும் வெளிச்சங்கள்

கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதை

வேல்கண்ணன்

கிளிகளின் பேச்சு சமீபமாகிறது

பகல் நெகிழ்த்தும் மயில் அகவலில்

இரு குருவிகள் வீடு நுழைய

பதறி மின்விசிறி நிறுத்துகிறோம்

தெரு மரங்கள் நிழல் பசுமையாகி

இலைகள் பழுப்பு துறக்கின்றன

பூனை கடக்கும் நிதானமான தெரு

நாய்கள் குரைப்பு ஊளையாகும் அரவமற்ற நிசி

பெய்த மழையின் குளிர்ச்சி

இரண்டு இரவுகள் நீடித்தது வியப்பளிக்கிறது

உறக்கமில்லை என்பது தினப்படி

சோர்வில்லா இருள் திறக்கப்போவது எத்தனை வெளிச்சங்களையோ?

கவிதை
கவிதை