Published:Updated:

`ஒரே நாளில் திருமணம்; ஒரே நாளில் பிரசவம்!' - வியப்பை ஏற்படுத்திய கேரள இரட்டை சகோதரிகள்

கேரள சகோதரிகள்

கேரளவை சேர்ந்த ஸ்ரீலட்சுமி, ஸ்ரீப்ரியா என்ற இரட்டை சகோதரிகள் தங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடந்த ஒரே மாதியான விஷயங்களால் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஒரே நாளில் திருமணம் நடந்த இவர்களுக்கு ஒரே நாளில் குழந்தையும் பிறந்துள்ளது.

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள தலையோலபரம்பு என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திரசேகரன் - அம்பிகா தேவி தம்பதியினர். இவர்களுக்கு 1995-ம் ஆண்டு அவர்கள் பகுதியில் உள்ள கரிதாஸ் மருத்துவமனையில் ஸ்ரீலட்சுமி, ஸ்ரீப்ரியா என்ற இரட்டை பெண்குழந்தைகள் பிறந்தனர்.

கர்ப்பிணி -Representational Image
கர்ப்பிணி -Representational Image

தொடர்ந்து இரண்டு பேருமே கேரளாவில் உள்ள கல்லூரியில் இளங்கலை வணிகவியல் முடித்தனர். அடுத்தடுத்து இன்டர்ன்ஷிப் முடித்த அவர்கள் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டனர். இப்போது, பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பிறந்த அதே மருத்துவமனையில் இருவருக்கும் பிரசவம் நடந்தது.

ஸ்ரீபிரியாவுக்கு மதியம் 2.20 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஶ்ரீலட்சுமிக்கு அதே நாள் மாலை 6.43 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாய்மார்களைப் போலவே, இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே இரத்த வகை என்பது கூடுதல் ஆச்சர்யம். இந்த பிரசவம், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் ஆச்சரியமாக இருந்தது.

ஶ்ரீபிரியா மற்றும் ஶ்ரீலட்சுமி
ஶ்ரீபிரியா மற்றும் ஶ்ரீலட்சுமி

``எல்லாமே ஒரே மாதிரியாக நடந்தது எப்படி என்பது எங்களுக்குத் தெரியாது. ஒருவேளை, எங்களுக்குள்ள ஒரு தனித்துவமான பந்தம் காரணமாக இருக்கலாம். நாங்கள் வளர்ந்தது போல் எங்கள் குழந்தைகளும் வளரட்டும்" என்று ஸ்ரீலட்சுமியும் ஸ்ரீப்ரியாவும் கூறினர்.

சகோதரிகளுக்கு நம் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.