வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
சரத்குமார் - தேவயாணி நடிக்க விக்ரமன் இயக்கிய படம் சூர்ய வம்சம். அந்த படத்தில் ஒரு காட்சி வரும் சரத்குமாரும், இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் அவர்களும் வாத்து மேய்க்கும் ஒரு பெண்ணுக்கு உதவிக்காக வாத்து மேய்க்க, அந்த வழியாக ஒரு காரில் வரும் நாயகி தேவயானி உடன் வரும் இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் காரில் இருந்து இறங்கி வந்து வாத்துக்களை மேய்த்தபடி செல்லும் மணிவண்ணன் அவர்களிடம் பேசி விட்டு, தன்னுடைய கையை நீட்டி ' ஏங்க.. இப்படியே போனா புதுர் வரும்ல?' என்று கேட்க மணிவண்ணன் ' இப்படியே போனா.... கை வலிதான் வரும்.... கையை தொங்கப் போட்டுப் போனால் வரும்!' என்பார்.
அந்த காட்சியில் மணிவண்ணன் அவர்களுடைய டைமிங் காமெடியை மிக ரசித்து அனைவருமே சிரிக்க நீங்களும் கூட சிரித்து இருப்பீர்கள்.

அந்த காமெடி காட்சியை சமீபத்தில் பார்த்த போது, நான் எப்போதோ படித்த வரலாற்று சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது.
ஆக்ராவை தலைநகராக கொண்டு அக்பர் பாதுஷாவாக இருந்து ஆண்டு வந்த காலமது. ஒரு நாள் அக்பர் தன்னுடைய படை வீரர்கள் சிலருடன் காட்டு வெளியில் வேட்டைக்காக சென்றிருந்த நேரம். வேட்டை ஆர்வத்தில் மிக நீண்ட தூரம் காட்டுக்குள் பயணித்தனர்.
மாலை நேரமாகி விட, அடர்ந்த காட்டுக்குள் ஆக்ரா செல்ல சரியான பாதையை தேடி அக்பரும் அவருடன் வந்த வீரர்களும் அல்லாடிக் கொண்டிருந்த நேரம். அப்போது அங்கிருந்த ஒற்றையடிப் பாதையில் ஒல்லியான ஒரு நபர் சப்தமாக பாட்டு பாடியபடி சென்று கொண்டிருப்பதை கண்டு ஆக்ரா சென்றடைய அவரிடம் பாதையை கேட்டுக் கொள்ளலாம் என கருதுவார்கள் அக்பரும் அவருடன் வந்தவர்களும்.

ஒத்தையடிப் பாதை வழியாக வந்தவரை வழி மறித்து அக்பர் &கோ, 'இவர் பாதுஷா, இந்த பாதை ஆக்ரா கொண்டு சேர்க்குமா? என்று கேட்க, அந்த நபரோ சிரித்தபடி
’’என்னுடைய பெயர் மகேஷ்தாஸ், இந்தப் பாதை இங்கேயாதான் இருக்கும், பாதுஷாவாக இருந்தாலும் கொண்டு போய் சேர்க்காது, நாம்தான் ஆக்ராவை நோக்கிச் செல்ல வேண்டுமென’’ டைமிங்காக கூறினாராம்.
இன்றைய தேதியில் தினசரி நாளிதழ்கள், வார இதழ்கள், தொலைக்காட்சி, கையிலே உள்ள அலைப்பேசி என உலகமே சுருங்கி விட்ட நிலை. தந்தை பெரியார் கூட வரும் காலத்தில் இத்தகைய கருவிகள் கைகளில் வைத்துக் கொண்டு பயணிக்கும் காலம் வருமென கணித்து கூறியவர். இன்று நமது நாடு மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து தலைவர்களையும் நாம் இவற்றின் மூலமாக பார்த்து தெரிந்து கொண்டுள்ளோம். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டினை கூட தலைக்காட்சி செய்தி மூலமாகவே அறிந்தேன் என கூறிடும் நபர்கள் வாழும் இந்த நாளில், இவையேதுமே இல்லாத நாளான அன்று பாதுஷா என்பவர் யார், அவருடைய தோற்றம எப்படியானது, அவர் எப்படி இருப்பார் என அறிந்து கொள்ள இயலாத காலமது.
`` ' இப்படியே போனால் கைதான் வலிக்கும். கையை கீழே தொங்கப் போட்டு போனா வேட்டைக்காரன் புதுர் வரும்.’’ எனும் மணிவணன் அவர்களுடைய டைமிங் காமெடி வசனம் நினைவுக்கு வருகிறாதா?! இப்படித்தான் ஆக்ராவிற்கான பாதை தெரியாத குழம்பிக் கொண்டிருந்த அக்பரும் மகேஷ்தாஸின் டைமிங் காமெடியில் தன்னை மறந்து சிரித்து விட்டார்.

மகேஷ்தாஸின் பதிலைக் கேட்டு அக்பருடன் இருந்தவர்கள் சற்றே கோபத்தோடு உடை வாளை உருவ முற்பட, அவர்களை அமைதியாக இருக்குமாறு கூறிய அக்பர், மகேஷ்தாஸிடம் சிரித்துப் பேசி பாதையைப் பற்றி தெளிவாக கேட்டு விட்டு தன்னுடைய கையிலிருந்த ஒரு கணையாழி மோதிரத்தை மகேஷ்தாஸிடம் கொடுத்து நேரம் கிடைக்கிற போது அவசியமாக அரண்மனை வந்து தன்னை சந்திக்க வேண்டுமென கூறி விட்டுச் சென்றாராம்.
அக்பர் கூறியபடியே அரண்மனை சென்று அவரை சந்தித்த மகேஷ்தாஸ், அவருடைய அன்பான வேண்டுகோளுக்கிணங்க அரண்மனையிலேயே தங்கி விட்டாராம். டைமிங் காமெடியில் அசத்திய மகேஷ்தாஸ் வெற்றிலை, பாக்கு போடும் பழக்கம் உடையவராம். இதனையறிந்த அக்பர் ஒருநாள், கையில் இருந்த வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவிக் கொண்டிருந்த மகேஷ்தாஸிடம்,
"ஆமா..... எப்போதுமே வெற்றிலை சாப்பிடுகிறாயே, இந்த வெற்றிலையை கழுதை கூட திண்ணாதமே?' என நக்கலாக கேட்க.... வெற்றிலைக்கு சுண்ணாம்பினை தடவிக் கொண்டிருந்த மகேஷ்தாஸ் சிரித்த படி, " ஆமாம்.... இந்த வெற்றிலையை கழுதைகள்தான் திண்ணாது!' என்றாராம்.
வெற்றிலை போடும் பழக்கமில்லாத அக்பர் மகேஷ்தாஸின் டைமிங் காமெடியில் ஒரு கணம் திகைத்து நின்றாராம்.
இத்தகைய டைமிங் காமெடியில் அக்பர் அவர்களையே அசத்திய மகேஷ்தாஸ் யாரென நீங்கள் யோசிக்கக் கூடும். ஆம்.... நாம் அனைவருமே அறிந்த பீர்பால்தான் இந்த மகேஷ்தாஸ், ஆம் மகேஷ்தாஸ் என்ற இயற்பெயர் கொண்டவர்தான் பின்னாளில் அக்பருடனான அன்பினாலும் நட்பாலும் தன்னுடைய பெயரை பீர்பால் மாற்றிக் கொண்டவர். இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அக்பர் என்றலே பீர்பால் என நினைவுக்கு வர அக்பர் பீர்பால் என்ற பெயர் மறக்க முடியாத ஒன்றாக மாறி விட்ட ஒன்றாகி நிற்கிறது.
- வீ.வைகை சுரேஷ்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.