வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
ஒவ்வொரு நாளும் சென்னை அண்ணா சாலையை நான் கடந்து போகும் போதும், எனக்கு பிரம்மாண்டமான கடைகள், வணிக நிறுவனங்கள் கண்ணுக்கு தெரிந்தாலும், குறிப்பாக Spencer plaza, lic building போன்ற புகழ்பெற்ற இடங்கள் கண்ணுக்கு பட்டாலும், என்னுடைய கவலையெல்லாம் காணாமல் போன, சின்ன சின்ன பிளாட்பார்ம் கடைகளை பற்றித்தான்.
ஆம் சென்னையை பொறுத்தவரை பிரம்மாண்டமான கடைகள், வணிக நிறுவனங்கள் என்று இருந்தாலும், சின்ன கடைகளுடைய தேவை மிக முக்கியமானதாகும். மெட்ரோ ரயில் வந்ததற்கு பிறகு நிறைய பிளாட்பார்ம் கடைகள் காணாமல் போய் உள்ளன.

குறிப்பாக அண்ணாசாலையை பொறுத்தவரை ஏராளமான பிளாட்பார்ம் இடையில் இருக்கும், அதிலும் குறிப்பாக புத்தக கடைகள் ஏராளமாக இருக்கும். நான் எனது நண்பர்கள் எல்லாம், ஏராளமான புத்தகங்கள் பிளாட்பார்ம் கடைகளில் தான் சென்று வாங்குவோம். ஏனென்றால் நிறைய வரலாற்று புத்தகங்கள், நாவல்கள், சின்ன சின்ன கதை புத்தகங்கள் எல்லாம் இந்த கடைகளில் குறைவான விலைக்கு கிடைக்கும்.
இதனால் நாம் நிறைய புத்தகங்கள் வாங்க முடியும். இன்று என்னிடம் குறைந்தது, 750க்கும் அதிகமான புத்தகங்கள் இருக்கும். இதில் பெரும்பாலும், இங்கே வாங்கியதாகத்தான் இருக்கும். குறிப்பாக நான் விகடன் பிரசுரத்தினுடைய புத்தகங்களை நிறைய வாங்கி உள்ளேன்.

ஆண்டு மலர்கள், தொகுப்புகள் எல்லாம் பைண்டிங் பண்ணி வைத்திருப்பார்கள். அது நமக்கு அதனுடைய விலையை விட மிகவும் குறைவாக கிடைக்கும். இதனால் வழக்கத்திற்கு மாறாக, குறைவான தொகையில் நாம் நிறைவான புத்தகங்களை வாங்க முடியும்.
இந்த மெட்ரோ வந்ததற்குப் பிறகு அது போன்ற கடைகள் எல்லாம் அகற்றப்பட்டு விட்டன. இப்பொழுது அண்ணா சாலை பெரும்பாலும் காலியாகவே கிடக்கிறது. ஸ்பென்சர் அருகில் மட்டும் ஒரு சில பிளாட்பார்ம் கடைகள் இருக்கின்றன.
நான் வழக்கமாக ஒருவரிடம் புத்தகம் வாங்குவேன். அவரிடம் நாம் சொல்லி வைத்தால் போதும், நாவல்கள் வரலாற்று புத்தகங்கள் மொழிபெயர்ப்பு நூல்கள் எல்லாம் நமக்காக எடுத்து வைப்பார்.

அவரிடம் சென்று புத்தகம் வாங்கும் பழக்கம் எப்படி வந்தது என்றால், எழுத்தாளர் ஜி.ராமகிருஷ்ணன் எழுத்தாளர் ஒரு நிகழ்ச்சியில் கூறும் பொழுது, அவர் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்த புத்தகமொன்று, ஸ்பென்சர் அருகில் உள்ள ஒரு பிளாட்பார்ம் புத்தக கடையில் கிடைத்தது என்று சொன்னார். அன்று நான் தொடங்கிய புத்தகம் வாங்கும் பழக்கம், என்னிடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.
எப்பொழுது சென்றாலும் ஒன்று இரண்டு புத்தகங்களை வாங்கி வராமல் இருக்கவே மாட்டேன். இப்பொழுது என்னால் அப்படி புத்தகங்களை வாங்க முடியவில்லை. ஏனென்றால் சென்னையில் அது போன்ற இடங்களை நாம் அரிதாக தான் பார்க்க முடிகிறது.

ஒரு சில பகுதிகளில் பிளாட்பார்ம் புத்தகங்கள் இருந்தாலும் அது ஒரு துறை சார்ந்த புத்தகங்களாக மட்டுமே இருக்கின்றது. சமூக சிந்தனை சார்ந்த வரலாற்று நூல்கள் சார்ந்த புத்தகங்களை எங்குமே நாம் பார்க்க முடியவில்லை. வருடத்திற்கு ஒருமுறை புத்தகக் காட்சி திடலுக்கு வெளியே இது போன்ற புத்தகங்கள் நாம் பார்க்க முடியும்.
ஆனால் கடந்த காலங்களில் பார்த்த புத்தகங்கள் அளவுக்கு இப்பொழுது நம்மால் பார்க்க முடியவில்லை. இது என்னுடைய மனதிற்கெல்லாம் பெரிய இழப்பாக தான் இருக்கிறது. எப்பொழுதும் அண்ணா சாலையை கடந்து சென்றால், அந்த ஞாபகங்கள் தான் வந்து செல்கின்றன.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.