பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
ஒருமுறை கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள (Mojave desert) மொஹாவே பாலைவனப் பகுதியில் வேலை நிமித்தமாக சென்றிருந்தேன். மரணப் (Death valley) பள்ளத்தாக்கில் இருந்து சுமார் நூறு மைல்கள் தொலைவில் அமைந்திருந்தது இந்த பகுதி. காலையிலயே வெயில் மண்டையைப் பிளந்து கொண்டு இருந்தது.
ஆண்டு முழுவதும் சூரிய ஒளி வெட்ட வெளிச்சமாக இந்தப் பகுதியில் விழும். கோடைகாலம் என்றால் சொல்லவே வேண்டாம், உலகின் அதிகபட்ச வெப்பநிலை கடந்த ஆண்டு இந்த பகுதியில் பதிவாகி இருக்கிறது.

வெயில் அதிகமாக வெறும் பகுதியாக இருப்பதால் இங்கே மிகப்பெரிய சோலார் தெர்மல் பிளான்ட் அமைத்திருக்கிறார்கள்.
நான் வேலைக்காக சென்றிருந்ததும் அங்கேதான். இது வழக்கமான சோலார் பவர் ஜெனரேஷன் கிடையாது. சோலார் தகடுகளுக்கு நடுவே ஹுட் டிரான்ஸ்ஃபர் ப்ளூயட் செல்வதாக இருக்கும். அப்போது ஏற்படும் ஸ்டீம் சேகரிக்கப்பட்டு பவர் ஜெனரேஷன்க்கு அனுப்பப்படும். ஏறத்தாழ இந்த பாலைவன பகுதியில் 40 மைல்கள் பரப்பளவில் இதை அமைத்திருக்கிறார்கள். 1990ல் திட்டமிட்டு பதினைந்து ஆண்டுகள் நடைபெற்றது இதன் கட்டுமான பணி. 2014ல் இதன் இயக்கம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு யூனிட்டும் 250MW உற்பத்தி திறன் கொண்டது. மொத்தம் ஒன்பது அலகுகள் உள்ளன.
காலையில் சூரியன் உதித்ததலிருந்து மாலையில் சூரிய ஒளி மறையும் வரையில் சோலார் பவர் ஜெனரேஷன் நடந்துக் கொண்டிருக்கும். அதனால நமக்கு வேலை அப்போம் கிடையாது. இரவுல தான் வேலை. நான் தங்கியிருந்தது 20 மைல் தாண்டி ஒரு சிறய டவுன். அதோட பேரு பார்ஸ்டாவ். ஹோட்டல் இங்கதான் இருந்தது. சுமாரான ஹோட்டல் தான் காலையில பிரேக்பாஸ்ட் எல்லாம் கிடையாது. நாம வெளியே போய் தான் சாப்பிடணும். நமக்கு எங்குப் போனாலும் இருக்கவே இருக்கு மெக் டொனால்ட்.
நான் எந்த பகுதிக்கு போனாலும் அந்தந்த ஊரில் இருக்கும் நூலகத்திற்கு போயிடுவேன். விதவிதமான நூலக அமைப்பு, வைஃபை, பேப்பர் எல்லாமே கிடைக்கும். கூடுதல் வசதி என்னவென்றால் பாத்ரூம்/டாய்லெட் தயக்கமின்றி பயன்படுத்தலாம்.

நூலகத்தின் உள்ளே போனதும் ஒருமுறை அப்படியே சுற்றிப் பார்ப்பேன். ஆட்கள் எங்கே குறைவாக இருக்கிறார்களோ அந்த பக்கம் உட்காந்திருப்பேன். அப்படி இடத்தை பார்க்கும் போது சுவர் முழுவதும் வெவ்வேறு துறைகளில் பிரபலமான ஆட்கள் கையில புத்தகம் வைத்து READ -ன்னு சொல்கிற மாதிரி வைத்திருந்தார்கள். அதில் நம்ம ஊரு ஜீன்ஸ் படத்தின் அழகி, திரைப்பிரபலம் ஐஸ்வர்யா ராய் படமும் இருந்தது. இது எனக்கு கொஞ்சம் வியப்பாக தான் இருந்தது. பகல் முழுவதும் நூலகத்தில் நேரத்தை செலவிட்டு இரவு வந்ததும் வேலைக்கு கிளம்புவேன். குளிர் பயங்கரமாக இருக்கும். “ப்ரோ உள்ள பாம்பு எல்லாம் அலையும் பாத்து நடக்கணும்” என்று முன்னமே அங்கு வேலை செய்யும் நபர் ஒருவர் கூறினார். நானும் பாதுகாப்பாக நடந்தேன். இங்குள்ள பாம்புகள் மின்சார வயரை கடிக்கவில்லை என்பது வியப்பு.
பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க இப்படி திரை நட்சத்திரங்கள் மூலம் ஊக்கப்படுத்துகிறார்கள். அண்மையில் மகளுக்கு ஆன்லைன் கிளாஸ் நடந்து கொண்டிருந்தது. நான் வேலை முடிந்து வீட்டுக்கு உள்ளே வந்ததும் டிவியில் ஒரு ஹாலிவுட் நடிகர் ஒருவர் புத்தகத்தை வாசித்து பாடம் எடுப்பது போல வீடியோ ஒடியது. அதை பார்த்ததும் எனக்கு பயங்கர கோபம். “எப்ப பார்த்தாலும் யூடியூப் வீடியோ தானா” என்று அவளிடம் கடிந்து கொண்டேன்.
“அப்பா இது எங்க ஸ்கூல் வீடியோ” என்றாள்.

நடிகர்கள் வந்தாலே அது அவர்கள் துறை சார்ந்த நிகழ்சிகள் தான் இருக்கும் என்ற என்னுடைய சிந்தனையையும் அது மாற்றியது. நடிகர்கள், அரசியல் தலைவர்கள், செனட் சபை உறுப்பினர்கள் மாணவர்களுக்கு புத்தகங்களை வாசித்து காட்டும் வழக்கம் இங்கு இருக்கிறது. முறையே
இப்படி வாசிப்பை ஊக்கப்படுத்தும் நிகழ்சிகள் நம்ம ஊரில் நடப்பதில்லை. அண்மையில் நடிகர் சூர்யா நீட் தேர்வு தற்கொலை பண்ணாதீங்க ன்னு வீடியோ அவரே முன்வந்து வெளியிட்டார். இது பாராட்டத்தக்கது. இதை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். முன்னேறிய நாடுகளில் நடைமுறையில் உள்ளதை உதாரணமாக வைத்துக் கொள்ளலாம்.
- பாண்டி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.