வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த 6-ம் தேதி துவக்கி வைத்தார்கள். ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சியை பபாசி அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி கொண்டே செல்கிறது. கடந்த வருடம் 800 அரங்குகள் இருந்த நிலையில், இந்த வருடம் கூடுதலாக 200 சேர்க்கப்பட்டு, 1000 அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தேன். எப்போதும் முதல் தடவை செல்லும் போது, சும்மா பார்த்து விட்டு மட்டும் வந்து விடுவேன். அது போலத்தான் இந்த வருடமும் சென்றேன்.

என்ன விலைவாசி உயர்ந்தாலும், பொருளாதார வீழ்ச்சி அடைந்தாலும், நுழைவு கட்டணம் அதே 10 ரூபாயில் தான் உள்ளது. நாம் டீ குடிக்கும் தொகை தான். அதனால் எத்தனை முறை வேன்டுமானாலும் செல்லலாம்.
மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தக் கண்காட்சியில் புத்தகங்களை விற்பனை செய்யும் அரங்குகளுக்கு மத்தியில், புத்தகங்களை தானமாக கேட்கும் அரங்கு ஒன்று வாசகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அது தான் அரங்கு எண் 286. இந்த அரங்கு "கூண்டுக்குள் வானம்" என்ற பெயரில் சிறைத்துறை மற்றும் சீர்திருத்த துறை சார்பாக வைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் சிறை கைதிகளுக்கு பயன்படும் வகையில், பொதுமக்களிடமிருந்து புத்தகங்களை தானமாக பெறப்பட்டு அந்த புத்தகங்களை கைதிகளிடம் சேர்க்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

சிறையில் இருக்கும் கைதிகளின் நலத்தை கொண்டு, கூண்டுக்குள் வானம் என்ற தலைப்பில் உருவாக்கி உள்ளார்கள். சிறைவாசிகள் இதுபோன்ற புத்தகங்கள் படிக்கும் பொழுது, படிக்கும் புத்தகங்களின் வழியாக வானத்தை பார்க்க அவர்களுக்கு உதவுகிறது என்பது, இதன் பிரதான நோக்கமாகும்.
அந்த வகையில் தான் இந்த ஏற்பாடை செய்துள்ளோம் என்று, அரங்கில் அமர்ந்திருப்பவர்கள் கூறுகிறார்கள். சிரைவாசிகளின் நலனுக்காக புத்தகங்களை வாங்கி எங்களிடம் கொடுப்பதினால், சிறைவாசிகள் உடைய அறிவு வளர்ச்சி க்கும் சிந்தனை வளர்ச்சக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
எத்தனையோ வருடங்கள் கலந்து கொண்டு ஏராளமான புத்தகங்களை வாங்கியுள்ளேன். பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளேன். கடந்த காலங்களில் வித்தியாசமான அரங்குகள் எல்லாம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வருடம் அமைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளுக்கான 286 எண் கொண்ட அரங்கு, என்னுடைய மனதை மிகவும் கவர்ந்தது அதுவும் சிறைவாசிகளுக்காக என்பது தான் மிக முக்கியமாகும்.

அதனால், இந்த வருட புத்தக கண்காட்சி க்கு செல்லுங்கள், புத்தகம் வாங்குங்கள், முடிந்த வரை சிரைவாசிகளின் அறிவையும் ஆற்றலையும் திடப்படுத்த, அரங்கு எண் 286 புத்தகங்களை தானமாக வழங்குங்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.