வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இதோ அழகாக புத்தம் புதுதாய் ஒரு புத்தாண்டு - 2023 . புத்தாண்டு சபதம் கேள்விப்பட்டிருப்போம். இந்த ஆண்டு வித்தியாசமாய் புத்தாண்டு தீர்மானம் ஒன்றை எடுக்கலாமா?
மற்றவர்களுக்காக பிடிக்காததை பிடிப்பது போல் நடிப்பதும், செய்ய விரும்பாததை அவசியம் செய்ய வேண்டிய போதும்... மனம் பாரமாவதை உணரலாம். இதற்கெல்லாம் காரணம் நம் சுயத்தை இழப்பது தான்.
"நீங்கள் நீங்களாகவே எங்கு இருக்கிறீர்களோ அது உங்களுக்கான இடமாகவே மாறிவிடும். "மற்றவர்களுக்காக மாறாமல் உங்களுக்காக உங்கள் மன நலனுக்காக நீங்கள் நீங்களாகவே இருந்துதான் பாருங்களேன். அதற்கு பெரிய பெரிய வேலைகள் எல்லாம் செய்ய வேண்டும் என்பது இல்லை வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றினால் எப்பவும் 'நாம் நாமாகவே' இருக்கலாம்..

நான் நானாகவே 'இந்த நிமிடம் வரை இருக்கிறேன் ... இனியும் இருப்பேன் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறேன். அதற்கு முழுமுதற் காரணம் என் புகுந்த வீடும் அதில் உள்ள உறவுகளும்..
'நான் நானாகவே' இந்த வார்த்தையை சுயமரியாதை ஆகத்தான் பார்க்கிறேன் . 'சுயமரியாதை' இதை ஒரு முறை வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்... எவ்வளவு கம்பீரமாகவும், சந்தோஷமாகவும் இருக்குமென்று தெ(பு)ரியும்.
புகுந்தவிட்டு உறவுகளிடம் நான் இப்படித்தான்... என்று வந்த நாள் முதலே என் ஆசைகள் அபிலாஷைகள் ,விருப்பங்கள் வெறுப்புகள்.. எல்லாவற்றையும் மனம் திறந்து பேச.. என் மாமாவும் அத்தையும் மற்றும் உறவுகளும் என்னை பற்றி மிகச் சரியாகப் புரிந்து கொண்டனர். நானும் அவர்களை புரிந்து கொண்டதனால் எங்களுக்குள் பெரிய இடைவெளிகள் எல்லாம் இல்லை. இதோ இப்பவும் அதே (வளவனூர்)ஆதிரையாகவே எனக்கு பிடித்த சினிமாவை விமர்சித்துக் கொண்டு... எல்லோரிடமும் கலகலப்பாக அன்பாக, பழகிக் கொண்டும் இருக்கிறேன்.

என்னுள் எந்த மாற்றமும் இல்லை.. . நான் எல்லோரிடமும் சகஜமாக பழகுபவள். காரணம் எங்கள் வீட்டில் நாங்கள் ஐவரும் பெண் பிள்ளைகள் என்பதால் , அப்பா எங்களுக்கு தேவையான சுதந்திரத்தை கொடுத்து வளர்த்தார்... அந்த சுதந்திரத்தை எதற்காகவும் எப்பவும் தவறாக பயன்படுத்தியது இல்லை..
திருமணமான பிறகு,' இவரிடம் பேசாதே, அவரிடம் பேசாதே' என்று யாரும் எனக்கு கைவிலங்கு பூட்டவில்லை . என்னுடைய குணத்தை அவர்கள் மிகச்சரியாக புரிந்து கொண்டதால் நான் சகஜமாக பேசுவதை ஒருபோதும் அவர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை /பார்ப்பதும் இல்லை.
அதேபோல் எனக்கு சினிமா சுவாசம். சோற்றை விட மிக முக்கியம். அதையும் நான் வந்த உடனேயே அவர்களுக்கு சொல்லி புரிய வைத்து அவர்களாகவே டிக்கெட் வாங்கி என்னை அழைத்து செல்லும் அளவுக்கு அவர்களை மாற்றி விட்டேன். இதோ இப்பவும் எனக்கு உடல் நலம் சரியில்லை என்றாலோ, மனதில் குழப்பங்கள் /வருத்தங்கள் என்றாலோ... எனது கணவரை சினிமாவிற்கு டிக்கெட் எடுத்து தரச் சொல்வேன். உறவு அல்லது நட்போடு சினிமா பார்த்து விட்டு வர என் சோகமெல்லாம் சுகமாகும். (நேற்று கூட 'கட்டா குஸ்தி 'பார்த்து வந்தேன் படம் பிரமாதம் ஹிஹிஹி...) அருமையான திரைக்கதை. (சினிமா ...சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி) (விரைவில் விமர்சிக்கிறேன்)

எங்கு பேச வேண்டுமோ, அங்கு பேசுவேன். எங்கு மௌனத்தை பேசவிடவேண்டுமோ அங்கு மௌனத்தை பேச விடுவேன். . உணர்வுகளை மதிக்க தெரிந்தவள் நான். உணர்வுகள் மதிக்கப்படாத இடத்தில் ஒதுங்கி நிற்பதே சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள கிடைக்கும் கடைசி சந்தர்ப்பம் என்று நினைப்பவள்.
ஆக... என்னைப் பொறுத்தவரை 'நாம் நாமாகவே இருக்க ' பிரம்ம பிரயத்தனம்' எல்லாம் பட வேண்டாம். கொஞ்சமே கொஞ்சம் விட்டுக் கொடுத்து, ஈகோ இல்லாமல் பேசி அத்தைக்கும், மாமாவுக்கும், வீட்டுப் பெரியவர்களுக்கும் பெரியவர்கள் என்ற மரியாதையைக் கொடுத்து அவர்களின் அனுபவங்களையும், அறிவுரைகளையும் கேட்டு வாழ்ந்தோமேயானால், "நாம் நாமாகவே' இருந்து வாழ்வில் ஜெயிக்கலாம்..இது என் அனுபவத்தில் கண்ட உண்மை.
பி.கு புகுந்த வீட்டு உறவுகள் அனைவருக்கும் இந்த பதிவை டெடிகேட் செய்கிறேன் .
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.