Published:Updated:

கன்னிமாராவும், நானும்! | My Vikatan

சலீம்

அவருடன் பயணம் செய்தால், சென்னையில் உள்ள ஒவ்வொரு விஷயங்களை யும் நமக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருப்பார். குறிப்பாக சிலை நிறுவப்பட்ட வரலாறுகளை கூட, தரவுகளை மேற்கோள் காட்டி எடுத்துரைப்பார்.

Published:Updated:

கன்னிமாராவும், நானும்! | My Vikatan

அவருடன் பயணம் செய்தால், சென்னையில் உள்ள ஒவ்வொரு விஷயங்களை யும் நமக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருப்பார். குறிப்பாக சிலை நிறுவப்பட்ட வரலாறுகளை கூட, தரவுகளை மேற்கோள் காட்டி எடுத்துரைப்பார்.

சலீம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

சென்னையில் கன்னிமாரா ஹோட்டல் தெரிந்திருக்கும் அளவுக்கு, வரலாற்று சின்னமான கன்னிமாரா பொது நூலகம் ஒன்று இருப்பது, பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சில பேருக்கு தான் தெரியும், கன்னிமாரா பெயரில் நூலகம் இருக்கின்றது என்று. அதன் அவசியமும் புரியும். அந்த ஒரு சிலரில் நானும் ஒருவன் என்பதை நினைக்கும் போது, கொஞ்சம் பெருமையாக உள்ளது.

ஏனென்றால் அது சாதாரண இடமாக இருந்தால் பரவாயில்லை, முன்பே சொல்லி விட்டேன். அது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் என்று. அங்கு சென்று வந்தவர்களால் மட்டுமே உணர முடியும். இன்றளவும் அரசால் அது பாதுகாக்கப்பட்டு வருகிறது, அதனால் அது பல்வேறு வரலாற்று தகவல்களை தன்னகத்தே பாதுகாத்து வருகிறது.

Connemara library
Connemara library

முதலில் கன்னிமாரா என்று பெயர் வரக் காரணம் என்ன என்று பார்ப்போம். இந்த பொது நூலகத்திற்கு பல்வேறு வரலாறுகள இருந்தாலும், அன்றைய மதராசு மாகாணத்தின் ஆளுனராக இருந்த கன்னிமாரா பிரபு பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890ம் ஆண்டு மார்ச் 22ஆம் நாள் அடிக்கல் நாட்டினார்.

1896ம் ஆண்டு டிசம்பர் 5ம் நாள் இந்த பொது நூலகம் மக்களுக்காக திறக்கப்பட்டது. அப்போது அவர் ஆட்சியில் இல்லாவிட்டலும், அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது.(இப்போது அம்மா இல்லாவிட்டாலும், அவருடைய பெயராலே அம்மா உணவகம் இயங்குவது போல என்று சொல்லலாம்)

'கன்னிமாரா'
'கன்னிமாரா'

கன்னிமாரா நூலகத்திற்கு நான் முதன் முதலில் சென்றது 2012ல் தான். என்னுடைய சக நண்பர் பத்திரிக்கையாளர் பொதிகை வசந்தன் தான் அழைத்துச் சென்றார். அவர் தான் எனக்கு சென்னையில் இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களை அறிமுகப்படுத்தியவர்.

அவருடன் பயணம் செய்தால், சென்னையில் உள்ள ஒவ்வொரு விஷயங்களை யும் நமக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருப்பார். குறிப்பாக சிலை நிறுவப்பட்ட வரலாறுகளை கூட, தரவுகளை மேற்கோள் காட்டி எடுத்துரைப்பார்.

அதேபோல் எந்த புத்தகத்தை பற்றி கேட்டாலும் அல்லது அரசியல் சமூகம் தலைவர்கள் பற்றி கேட்டால் உடனே சொல்வார். அவருடைய ஞானத்தின் வாசல். அப்படி அவர் மட்டுமில்லாமல் உடன் இருப்பவர்களையும் தூண்டிக்கொண்டே இருப்பார்.

Representational Image
Representational Image

அண்ணா, பெரியார், அம்பேத்கர் மற்றும் அரசியல் கட்சிகளின் வரலாறுகள் இப்படி ஒரு பொது இடத்தில் வைத்து இது தொடர்பாக கேள்விகளை எல்லாம் கேட்டு நம்மை சிந்திக்க தூண்டுவார். ஆனால் நமக்கு அவர் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் விடை சொல்ல முடியாமல் திணறுவோம், ஏனென்றால் நமக்கு பள்ளிப்படிப்பை தாண்டி சமூகத்தைப் பற்றியான புரிதல் இல்லை வாசிப்பு இல்லை.

இதையெல்லாம் நான் ஏன் சொல்கின்றேன் என்றால், நாம் சார்ந்து இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்களோ அதே போன்றதொரு சிந்தனை தான் நம்மையும் சாரும் என்பதற்கான சான்றாக தான் இதை கூறுகிறேன். அப்படி தான் ஒருநாள் கன்னிமாரா பொது நூலகத்தையும், எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

அப்போது நாங்கள் ஒரு புத்தகத்திற்கு தேவையான முக்கியமான நாளிதழ் தொடர்பான தகவல்களை தேடி சென்றோம். கன்னிமாரா நூலக வளாகத்திலேயே ஆவன காப்பகம் ஒன்று உள்ளது. இங்கு 1890ம் ஆண்டிலிருந்து, இப்பொழுது வரை உள்ள, அனைத்து பத்திரிகைகள், சஞ்சிகைகள் தினசரி, மாத, வார, பருவ இதழ்கள், இன்னும் பல இதழ்களின் காப்பி இங்கு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது.

நமக்கு தேவையான இதழின் பெயர், தேதி உள்ளிட்ட விபரங்கள் சொன்னால், அதை எடுத்து தருவார்கள். நாம் பார்த்து விட்டு, அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.ஒருவேளை அது நமக்கு தேவைப்பட்டால், ஜெராக்ஸ் எடுத்து தருவார்கள். நாம் அதற்கான தொகையை மட்டும் செலுத்தினால் போதும்.

இங்கு படிப்பதற்கு என்று இலவசமாக மூன்று மாடி முழுவதும் புத்தகங்கள் வைத்துள்ளனர். மூன்று மாடியுமே மூன்று விதமாக பிரித்து புத்தகங்களை வாசகர்கள் படிப்பதற்காக ஏற்படுத்தியுள்ளனர்.

'கன்னிமாரா'
'கன்னிமாரா'

முதல் மாடியில் தினசரி நாளிதழ்கள், வார இதழ்கள் பருவ இதழ்கள் என, ஆங்கிலம், தமிழ், மலையாளம், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளிலும் வெளிவரும் இதழ்கள் வைக்கப்பட்டுள்ளன. அமைதியான சூழலில் இருந்து நாம் படிப்பதற்கு ஏதுவாக டேபில்கள் அமைக்கப்பட்டு, சேர்கள் போடப்பட்டுள்ளன. இதில் எந்தவித தொந்தரவும் இன்றி நாம் அமைதியாக படிக்கலாம்.

இரண்டாவது மாடியில் வரலாற்று ஆய்வுகள், ஆவனப் பதிவுகள், புத்தகங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு ஒவ்வொரு அடுக்கிலும் தலைப்புகள் வாரியாக புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நாம் தேடுவதற்கு இலகுவாகவும் இருக்கும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்பட்டுள்ளது.

படிப்பதற்கு தேவையான, ஆய்வு செய்வதற்கு தேவையான, நம்முடைய அறிவை அதிகப்படுத்துவதற்கு தேவையான எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் இந்த கன்னிமாரா பொது நூலகத்தில் இருக்கின்றது என்பதை, அப்பொழுது தான் நான் புரிந்து கொண்டேன். அதனால் தொடர்ந்து வாரத்திற்கு இருமுறையாவது கன்னிமாரா பொது நூலகத்திறகு வந்து, எதையாவது வாசித்து விட்டு செல்வேன்.

கண்டதையும் படி பண்டிதர்கள் ஆவாய் என்ற பழமொழிக்கேற்ப, இந்த நூலகத்திற்கு வருவதே நாம் ஒரு அறிவுசார் பயணத்தில் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தும் ஒன்றாகும். அதனால் நான் கன்னிமாரா பொது நூலகத்தினுடைய தொடர்பை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தேன்.

'கன்னிமாரா'
'கன்னிமாரா'

இன்று வரை அந்த தொடர்பு என்னோடு இருந்து கொண்டே இருக்கிறது. இதன் மூலம் நாம் சமூகத்தை பற்றிய புரிதல், தனிமனித புரிதல், ஒரு பத்திரிகையாளராக நாம் என்னவெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது.

அங்குள்ள வாசகங்கள் ஒவ்வொன்றையும் படித்தாலே நாம் ஏராளமான அறிவு தளத்தை பெற முடியும். அதனால் நான் இன்று வரை கன்னிமாரா பொது நூலகத்தோடு தொடர்பில் இருந்து வருகிறேன். அதேபோல் இன்னொன்றையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நாம் கன்னிமாரா பொது நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்தால் நாம் விரும்பும் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று கூட படிக்கலாம். அதற்கென்று குறிப்பிட்ட நாள் நாம் அவகாசம் பெற்றுக் கொள்ளலாம்.

இப்படி ஏராளமான வசதி வாய்ப்புகள் படிப்பதற்கென்று, அரசு நமக்கு ஏற்படுத்தி தந்துள்ளது. அதை நாம் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோன்று ஒரு வரலாற்று மியூசியமும், கன்னிமாரா பொது நூலக வளாகத்தில் உள்ளது. அதோடு நிரந்தர புத்தக கண்காட்சி நிலையம் ஒன்றும் உள்ளது. நமக்கு தேவையான புத்தகத்தை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

இப்படி ஒரு அறிவு களஞ்சியத்திற்கு அடையாளமாக திகழும், கன்னிமாரா பொது நூலகத்தோடு நாமும் தொடர்பிலிருந்து நம்முடைய அறிவாற்றலை பெருக்கிக் கொள்வோம்.