உணவு முறை மாறி வருவதன் விளைவாக நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. என் குடும்ப வட்டத்தில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக இரண்டு இறப்புகள் நிகழ்ந்தன. அந்த நிகழ்வுகள் என் மனதில் சிறுநீரகம் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை மேலும் அதிகரித்தது. ஆரோக்கியமான உணவுகளை தேடிப் பிடித்து சாப்பிடத் தொடங்கினேன்.

நான் இங்கு முக்கியமான பகிர நினைப்பது, டயாலிசிஸ் பற்றி மக்கள் மத்தியில் நிலவும் வதந்திகளை பற்றி தான். என் குடும்ப உறுப்பினருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று சொன்னதும், ஆரம்பத்தில் குடும்பமே பயந்து ஆனால் தற்போது அந்த பயம் இப்போது இல்லை. இந்தியாவின் மிகப்பெரிய டயாலிசிஸ் சென்டர் ஆன நெஃப்ரோபிளஸ்-இன் உயர்மட்ட நிர்வாகி கமல் ஷா என்பவர் முக்கியமான சில உண்மைகளை ஆய்வு கட்டுரை ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். டயாலிசிஸ் பற்றி இணையத்தில் தேடிப் படிக்கையில் கண்ணில் பட்டது. டயாலிசிஸ் பற்றிய பயத்தை அந்த ஆய்வுக் கட்டுரை முற்றிலும் போக்கியது. காரணம் அந்த கட்டுரையை எழுதிய கமல் ஷா, 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட கால டயாலிசிஸ் சிகிச்சையால் உயிர் வாழ்பவர்.
Also Read
டயாலிசிஸ் என்பது வாழ்நாளுக்கான மரண தண்டனை என்பது போல் பலர் கருதுகின்றனர். டயாலிசிஸ் என்பது மரண தண்டனை அல்ல. சிறுநீரகம் செயலிழந்ததன் விளைவுகளால் பாதிக்கப்படாமல் ஒரு நோயாளி வாழ்க்கையை வாழ நம் அறிவியல் கொடுத்த இரண்டாவது வாய்ப்பு. உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக டயாலிசிஸ் மூலம் வாழ்ந்து வருபவர்கள் இதற்கு சான்று.
டயாலிசிஸ் சிகிச்சையில் இருப்பவர் பயணம் செய்ய முடியாது என்று பலர் கருதுகின்றனர். டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள், வீட்டை விட்டு நீண்ட தூரம் பயணிக்க பயப்பட வேண்டியதில்லை. நாம் எங்கு சென்றாலும், அந்த பகுதியில் நம்பகமான டயாலிசிஸ் மையத்தைக் கண்டறிய சிறிது ஆராய்ந்தால் போதும், அது உங்கள் பிரச்சனையை தீர்க்கும்,

டயாலிசிஸ் சிகிச்சையில் இருப்பவர்கள் சாதாரண உணவை உண்ண முடியாது என்பதும் பொய்யான நம்பிக்கை தான். ஆரோக்கியமான உணவை உட்கொள்ள எந்த தடையும் இல்லை. உணவில் உப்பு, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைந்த அளவில் இருக்க வேண்டும். அதிக புரதங்கள் எடுக்க கூடாது. சிகிச்சைக்கு உகந்த உணவுத் திட்டத்தை மருத்துவர் அல்லது nutritionist-இன் வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்.
டயாலிசிஸ் செய்யும் போது உடற்பயிற்சி செய்ய முடியாது என்று சிலர் கருதுகின்றனர். மருத்துவரின் வழிகாட்டுதல்களின் படி, டயாலிசிஸ் நோயாளிகள் உடற்பயிற்சி செய்யலாம் என்பதே உண்மை. உடற்பயிற்சி உங்கள் உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் (உள்ளே அல்லது வெளியே), பனிச்சறுக்கு, ஏரோபிக் நடனம் போன்ற பயிற்சிகளை தயங்காமல் தேர்வு செய்யலாம். எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தை தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்வது கட்டாயம்.
-சி.மணி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.