Published:Updated:

உதைபந்தின் இருபெரும் சிங்கங்கள் உணர்த்திய சேதி என்ன? | My Vikatan

கிலியன் எம்பாப்பே ( FIFA )

இருக்கையின் விளிம்புக்கு இழுத்துச் சென்ற இந்தப் போட்டியைக் கண்ட அனைவருக்கும் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக உணர்த்தியுள்ளது...

Published:Updated:

உதைபந்தின் இருபெரும் சிங்கங்கள் உணர்த்திய சேதி என்ன? | My Vikatan

இருக்கையின் விளிம்புக்கு இழுத்துச் சென்ற இந்தப் போட்டியைக் கண்ட அனைவருக்கும் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக உணர்த்தியுள்ளது...

கிலியன் எம்பாப்பே ( FIFA )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

2022 உலக கிண்ண கால்பந்து இறுதிப் போட்டி சொல்லும் சேதி!

கடந்த வாரம் கத்தார் நாட்டில் நடந்து முடிந்த உதைபந்து திருவிழாவின் இறுதிப் போட்டியில் கடும் இழுபறி மற்றும் போராட்டத்திற்குப் பின்னர் உலக நாயகனான மெஸ்ஸி தலைமையேற்றிருக்கும் அர்ஜென்டினா அணி உலக வெற்றியாளனாக வாகை சூடி வெற்றி மகுடம் ஈட்டிக் கொண்டுள்ளது.

இருக்கையின் விளிம்புக்கு இழுத்துச் சென்ற இந்தப் போட்டியைக் கண்ட அனைவருக்கும் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக உணர்த்தியுள்ளது.

வெற்றியென்பது முன்கணிப்பு செய்ய முடியாத ஓர் அறுதிநிலையில் நிலைக்கக்கூடியது அதனை எந்த ஒரு நிமிடத்திலும் இறுதியிட்டு கணித்து விட முடியாது என்பதே!

லயோனல் மெஸ்ஸி - அர்ஜென்டினா கால்பந்து அணி
லயோனல் மெஸ்ஸி - அர்ஜென்டினா கால்பந்து அணி

அப்படித்தான் முதல் பகுதியிலேயே இரண்டு வலைப் புகுத்தல்களை (GOAL ) செய்து அந்நாட்டு ரசிகர்களையும் உலக மக்களையும் ஏறத்தாழ தாம் வெற்றி பெற்றுவிட்டதாகவே கணித்துவிடச் செய்த அர்ஜென்டினா அணியை இரண்டாம் பகுதி ஆட்டத்தின் எண்பதாவது நிமிட தொடக்கத்தில் பழைய திரைப்படங்களில் நாயகன் முதலில் அடி வாங்கிக் கொண்டு திருப்பி அடிப்பது போல் இரண்டே அடி!

அதுவும் ஒன்னறை டன் வெயிட்டுடா? என கேட்டு அடிப்பது போல சட்டென எட்டு நிமிட இடைவெளிகளில் திரைப்பட சண்டை காட்சிகளில் திடீரென எங்கிருந்தோ வந்து களம் புகுந்து எதிரிகளைப் பந்தாடும் கதாநாயகன் போன்று இரண்டு வலைப் புகுத்தல்களை அட்டகாசமாக செய்து தாம் சார்ந்த அணியை ஜல்லிக்கட்டு காளையை தட்டி எழுப்புவதைப் போல் உசுப்பிவிட்டு குறித்த நேரத்தோடு முடிவுற இருந்த அப்போட்டியை உபரி நேரங்கள் கொடுக்கும் நிலைக்கு உயர்த்தி வெற்றியின் படிக்கட்டுகள் தங்களுக்கும் திறந்திருக்கிறது என்பதை அர்ஜென்டினா தீரர்களுக்கு உணர்த்திக் காட்டி உசுப்பேற்றினார் பிரெஞ்சு அணியின் மாவீரன் எம்பாப்பே!.

மெஸ்ஸி
மெஸ்ஸி

இருப்பினும் சீரும் சிறுத்தையானது விரட்டிப் பிடித்த இரையை காலிடுக்கில் கிடத்தி கழுத்தை கவ்விப் பற்றியிருந்த நிலை போல் ஏறத்தாழ வெற்றியை ருசிக்கும் மனநிலைக்கு வந்திருந்த அர்ஜென்டினா வீரர்கள் உபரி நேரத்திலும் களங்களில் தீப்பறக்க பறந்தாடி வெற்றியெனும் இரைதேடி சிலநிமிடங்களிலேயே மூன்றாவது முறையாக வலைப் புகுத்தலை செய்து மைதானத்தை வட்டமடித்து வெற்றிக் களிப்பில் ஈடுபட!

தூரத்தில் அதே வெற்றி இரையின் ருசிக்கு தமது பின்னங்கால்களை பிடரியில் அடிக்க ஓடிவரும் கர்ஜிக்கும் பிரஞ்சு சிங்கமான எம்பாப்பே வின் கூர்ந்த பார்வையிலும் கோல்களுக்கென்றே படைக்கப்பட்டிருக்கும் அவரது கூரிய கால்களிலும் சிக்குண்ட பந்தானது தன்னை வலைக்குள் ஒப்படைத்து சரணடைந்து கொண்டது.

அத்தோடு கொடுக்கப்பட்ட உபரி நிமிடங்களும் முடிவடைந்து நடுவரின் கடிகாரம் தமது நடுநிலையைக் காட்ட எந்நேரமும் வெற்றி எனும் இரையானது பசியோடு இருக்கும் இரண்டு புலிகளில் எவர் வாய்க்குள்ளும் செல்லலாம் எனும் நிலை உருவாகியது!

தற்போது இத்துனை தூரம் களமாடியும் கையில் கிடைத்த இரையை உண்ணமுடியா திகைப்பு மேலும் களமாண்ட களைப்பு இவ்விரண்டும் ஒருசேர விரட்டிய இரையை அத்துனை எளிதில் விட்டு விடுவார்களா?.

Kylian Mbappe
Kylian Mbappe
AP

மீண்டும் வெற்றியாளரை நிர்ணயம் செய்யும் தண்ட உதைத்தெறிதல் (Penalty Shootout Kick) எனும் நிலைக்குத் தள்ளப்பட்டு உலக உதைபந்தின் இருபெரும் சிங்கங்களான மெஸ்ஸி'யும் எம்பாப்பே வும் தமது கால் மாற்று நுணுக்கத்தை கச்சிதமாக செய்து ஆளுக்கொரு வலைப் புகுத்தல் செய்ய இப்போது கண்டு கொண்டிருந்த கால்பந்து கண்கள் மின்னித் துடித்தன.

அடுத்தடுத்து அர்ஜென்டினா வீரர்கள் வலைக்குள் பந்தை தள்ளி துள்ளிக் குதிக்க பிரஞ்சு வீரர்களின் கண்களில் நின்ற மாயவலை அவர்களது கால்களை ஏமாற்றி எதிர் காப்பாளரின் கைகளிலும், வலைக்கு வெளியிலும் சென்றது.

FIFA WorldCup 2022 Final; மெஸ்ஸி, எம்பாப்பே
FIFA WorldCup 2022 Final; மெஸ்ஸி, எம்பாப்பே

இப்போது உலக கிண்ண இரையானது கொடும்பசியில் நின்ற அர்ஜென்டினா வீரர்களின் வாய்க்குள் சரணடைந்து அவர்களது நீண்ட கால கோப்பை பசியை ஒருவழியாக தீர்த்து வெற்றிக் கோட்டையை கட்டி எழுப்பியது.

இதிலிருந்து இந்த போட்டியின் மூலம் உலகம் உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவெனில் வெற்றியை ருசிக்க இறுதி நிமிடம் வரை ஒருபோதும் சமரசமற்று போராட தயாராக வேண்டும், மனதில் மமதை புகும் எந்த ஒரு நிமிடத் துளியிலும் அது நம்மை விட்டு நழுவிச் செல்லும் வழிகள் பிறந்து கொண்டே இருக்கின்றன என்பதுதான்.

எண்ணமும் எழுத்தும்

பாகை இறையடியான்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.