Published:Updated:

மார்கழியில் மக்களிசையை நாங்கள் பாராட்ட காரணம் இருக்கு! - நெகிழும் பறையிசை கலைஞர் | My Vikatan

மார்கழியில் மக்களிசை 2023 ( பா.காளிமுத்து )

கலைஞர்களுக்கு வீதி கூட மேடை தான் என்பார்கள். கலைஞர்கள் தங்கள் திறமையை எங்கும் வெளிப்படுத்தக் கூடியவர்கள் அவர்களுக்கு "மேடை" ஒரு பொருட்டல்ல என்றாலும் இங்கு அந்த மேடை தான் மிகப் பெரிய அரசியலாக இருக்கிறது.

Published:Updated:

மார்கழியில் மக்களிசையை நாங்கள் பாராட்ட காரணம் இருக்கு! - நெகிழும் பறையிசை கலைஞர் | My Vikatan

கலைஞர்களுக்கு வீதி கூட மேடை தான் என்பார்கள். கலைஞர்கள் தங்கள் திறமையை எங்கும் வெளிப்படுத்தக் கூடியவர்கள் அவர்களுக்கு "மேடை" ஒரு பொருட்டல்ல என்றாலும் இங்கு அந்த மேடை தான் மிகப் பெரிய அரசியலாக இருக்கிறது.

மார்கழியில் மக்களிசை 2023 ( பா.காளிமுத்து )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளுக்கு பறையிசைக்க சென்றிருக்கிறோம். அதில் விரல் விட்டு எண்ணி சொல்லிவிடும் அளவிற்கு ஐந்தோ ஆறோ இடங்களில் மட்டுமே தான் எங்களுக்கான தனி அறை ஒதுக்கப்பட்டது.

மற்ற அத்தனை நிகழ்வுகளிலும் எங்கள் இசைக்கருவியை ஒரு ஓரமாக வைத்துவிட்டு சாலையோரங்களில் நின்றபடி பல ஏளன பார்வைகளுக்கு மத்தியில் தான் காஸ்டியூம் மாற்றிக் கொண்டிருப்போம்.

இத்தனைக்கும் எங்கள் குழுவில் அனைத்துக் கலைஞர்களும் வெவ்வேறு துறைகளில் முதுகலை படிப்பு முடித்தவர்கள், இன்னும் சிலர் இசைக் கல்லூரியில் முறையாக இசையை பயின்று பட்டம் பெற்றவர்கள். எந்த சாதி, மத அடையாளங்களும் இல்லாமல் இசை மீது கொண்ட ஆர்வத்தால் மட்டுமே ஒன்றிணைந்தோம்.

மார்கழியில் மக்களிசை
மார்கழியில் மக்களிசை
பா.காளிமுத்து

இசைக்கு மொழி இல்லை என்று சொல்லிக் கேட்டிருப்போம். இசைக்கு மொழியே இல்லாத போது சாதி மட்டும் எப்படி இருக்கும்..? என்ற என் எண்ணத்திற்கு ஆறுதலான பதில் தான் சமீபத்தில் நடந்து முடிந்த "மார்கழியில் மக்களிசை" நிகழ்ச்சி.

இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களின் முன்னெடுப்பில் நான்காவது ஆண்டாக நடந்து முடிந்ததுள்ளது இந்நிகழ்வு.

"மார்கழியில் மக்களிசை" என்றால் என்ன..? என்று ஒன்லைனில் சொல்ல வேண்டுமெனில் மண்ணின் இசையை, மக்களின் இசையை, ஒடுக்கப்பட்டவர்களின் இசையை மேடையேற்றி அங்கீகரிப்பது எனலாம்.

மார்கழியில் மக்களிசை
மார்கழியில் மக்களிசை
பா.காளிமுத்து

கலைஞர்களுக்கு வீதி கூட மேடை தான் என்பார்கள். கலைஞர்கள் தங்கள் திறமையை எங்கும் வெளிப்படுத்தக் கூடியவர்கள் அவர்களுக்கு "மேடை" ஒரு பொருட்டல்ல என்றாலும் இங்கு அந்த மேடை தான் மிகப் பெரிய அரசியலாக இருக்கிறது.

"மேடை" என்ற அரசியலால் எத்தனையோ கலைஞர்கள் கடைசி வரை வீதியிலேயே தங்கள் கலையாடல்களை முடித்துவிட்டு எந்த ஒரு சின்ன அங்கீகாரம் கூட இல்லாமல் வலிகளோடும், தீண்டாமைகளோடும், அவமானங்களோடும் அடையாளமே இல்லாமல் மறைந்திருக்கின்றனர். அந்த முரண்பாட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அங்கீகாரம் மறுக்கப்பட்ட கலைஞர்களையும், கலை வடிவங்களை மேடையேற்றி அங்கீகாரம் கொடுக்கிறது இந்த "மார்கழியில் மக்களிசை".

"புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே,

என் ரத்தமெல்லாம் தீ புடிக்கும் தாண்டவகோனே,

தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவகோனே

என் நெத்தியில இடி இடிக்கும் தாண்டவகோனே.."

"மழைத் துளி, மழைத் துளி மண்ணில் சங்கமம்.." போன்ற கலை சார்ந்த பாடல்களுக்கு Vibe செய்கிறோம், புல்லரித்துப் போகிறோம், பாடல் முடிந்த உடன் அப்படியே மறந்து விடுகிறோம்.

மார்கழியில் மக்களிசை
மார்கழியில் மக்களிசை
பா.காளிமுத்து

இந்நிகழ்வில் பறையாட்டம், கானா, ராப், பழங்குடியினர் இசை கருவிகள், பாரம்பரிய நடனங்கள் என அத்தனை மண்ணிசை கலைகளும் அரங்கேற்றப்பட்டது. இறப்பு வீட்டில் மட்டுமே ஒலித்த "ஒப்பாரி பாடல்" மேடையேறி அரங்கமெங்கும் ஒலித்தது, பார்வையாளர்களின் கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அனைவரும் கொண்டாடப்படும் இந்த இசையையா இத்தனை நாட்கள் இழிவாகவும், தீண்டாமையாகவும் சித்தரித்து வந்தனர் என்ற கேள்வி ஆழமாக எழாமல் இல்லை. இந்தக் கலைகள் அத்தனையும் வெளிப்படுத்தியது, உணர்த்தியது தங்களின் வலியையும், தாங்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதையும், ஏக்கத்தையும், தவிப்பையும், வலியையும் தான்.

மூன்று நாட்களும் அவ்வளவு கொண்டாட்டமாக நடைப்பெற்ற இந்நிகழ்வில் வெறுமனே எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சமும் கேலி கூத்துகளும் இடம் பெறவில்லை. அத்தனையும் அர்த்தமுள்ளதாக இருந்தது. ஒடுக்குமுறைக்கு எதிராக, சம உரிமைக்காக, கல்வியின் அவசியத்திற்கான குரலாக ஓங்கி ஒலித்தது.

மார்கழியில் மக்களிசை
மார்கழியில் மக்களிசை
பா.காளிமுத்து

"மார்கழியில் மக்களிசை" குரலற்றவர்களின் குரலாக இருக்கிறது. முகவரியற்றவர்களை அடையாளப்படுத்துகிறது. இங்கிருந்து வரும் ஓசை விடுதலைக்கான, எழுச்சிக்கான விதையாக திகழ்கிறது. அடித்தட்டு கலைஞர்களையும் கொண்டாடும், எல்லோருக்குமான இசையை பரவலாக்கும் இந்நிகழ்வினை தனிமனித துதிபாடும் வகையிலோ, இது "இவர்களுக்கான" நிகழ்வு என்ற புரிதலற்ற பார்வையோடு அணுகிவிடாமல் பகுத்தறிவோடு பார்த்தால் இந்த இசை மிகப்பெரிய சமுக மாற்றத்தை, சமத்துவத்தை நிலைநாட்டும் என்பதில் துளியும் ஐயமில்லை.

ஆடை மாற்றக் கூட இடமில்லாத மண்ணிசை கலைஞர்களை, மேடையேற்றி அழகுப் பார்க்கும் இந்த "மார்க்கழியில் மக்களிசை" மாற்றத்திற்கான விதை.

-கோ.ராஜசேகர், தருமபுரி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.